ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

விஸ்வா, “ம்ம்ம்”

டாக்டர் மதுசூதன், “சரி, அடுத்ததா என்ன உணர்வு”

விஸ்வா, “Sorrow … sadness சோகம், துக்கம்”

டாக்டர் மதுசுதன், “அதுக்கான முக்கிய காரணம் வனிதா உனக்கு செஞ்ச நம்பிக்கை துரோகம். இல்லையா? வேறு எதாவுது இருக்கா?”

விஸ்வா, “அவ செஞ்ச நம்பிக்கை துரோகம் தான் முதல் காரணம். ஆனா, நானே அவ எனக்கு துரோகம் செய்ய ஒரு அளவுக்கு காரணமா இருந்து இருக்கேன். என் மேலே எனக்கு வெறுப்பு வருது. அதுவும் ஒரு காரணம்”

டாக்டர் மதுசுதன், “சரி, இன்னைக்கு இது போதும். இதுவரைக்கும் நாம் உனக்கு உள்ளே இருக்கும் கோவம், பொறாமை, இயலாமை, துக்கம் இந்த நாலு உள்ளுணர்வுகளையும் அலசிப் பாத்து இருக்கோம். இந்த உள்ளுணர்வுகளை எப்படி போக வைக்கறதுன்னு நாளைக்குப் பார்க்கலாம். Care to join me for a drink before you go?”

விஸ்வா, “இல்லை கர்னல். நான் கிளம்பறேன்”

டாக்டர் மதுசுதன், “எங்கே போகப் போறே?”

விஸ்வா, “எங்க கம்பனி கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் என் ரூமுக்கு”

டாக்டர் மதுசூதன், “உன் வீட்டுக்கு. ஐ மீன், உங்க அப்பா அம்மா இருக்கும் வீட்டுக்கு ஏன் போறது இல்லை?”

விஸ்வா, “There will be questions. நான் பதில் சொல்ல வேண்டி வரும். ராமும் அங்கே இருப்பான்”

டாக்டர் மதுசூதன், “நீ போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். நாளைக்கு என்னை மீட் பண்ண வரும் போது நீ யோசிச்சுட்டு வரணும்”

விஸ்வா, “என்ன?”

டாக்டர் மதுசூதன், “டைவர்ஸ்ஸுக்குப் பிறகு வனிதா என்ன செய்யணும்? என்ன செஞ்சா உனக்கு ஓ.கே. இதைப் பத்தி மட்டும் யோசி”

விஸ்வா, “நானே டைவர்ஸுக்குப் பிறகு என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கேன். அவளைப் பத்தி நான் எதுக்கு யோசிக்கணும்?”

டாக்டர் மதுசூதன், “டைவர்ஸுக்குப் பிறகு நீ செய்யப் போறதை தெளிவான மனசோடு ‘நீ’ முடிவு எடுக்கும் வரை நான் உன்னை விடப் போறது இல்லை. நான் சொன்ன மாதிரி சில மாதங்கள் ஆகலாம். ஆனா நிச்சயம் நீ முடிவு எடுப்பே. அதே சமயத்தில் வனிதா என்ன முடிவு எடுக்கணும்ன்னு நீ விரும்பறே? டைவர்ஸுக்குப் பிறகு நீயும் வனிதாவும் கணவன் மனைவியா இல்லாமல் இருக்கலாம். ஆனா ரெண்டு பேரும் விக்கி-வசியின் பெற்றோர்களா இருப்பீங்க. உனக்கும் வனிதாவுக்கும் சுமுகமான பேச்சு வார்த்தை இருக்கணும். அதற்காகத்தான் கேட்டேன்”