ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

“ஓ!” என்று வாய் விட்டுச் சிரித்த டாக்டர் மதுசூதன், “நான் இருப்பது பெங்களூரில்தான், புனேவுக்கு ஒரு வேலையா வந்து இருந்தேன். அப்போ இந்த விவரம் தெரிஞ்சுது. நாளன்னைக்கு காலையில் நான் திரும்ப பெங்களூர் வரேன். உங்களுக்கு எப்ப வசதின்னு சொல்லுங்க நான் வந்து உங்களை மீட் பண்ணறேன்”

எதற்கு ஒரு புகழ் பெற்ற ராணுவ மனோதத்துவ மருத்துவர் விஸ்வாவின் மேல் அத்தனை அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சற்று துணுக்குற்றாலும் அதை தன் குரலில் காட்டாமல், “நாளன்னைக்கே செகெண்ட் ஹாஃப் நான் ஃப்ரீதான்”

“ஓ.கே. நான் உங்களை ஒரு ரெண்டரை மணி வாக்கில் மீட் பண்ணறேன்” என்று விடைபெற்றார்
இரண்டு நாட்களுக்குப் பிறகு மதியம் சரியாக இரண்டரை மணிக்கு டாக்டர் அமுதாவின் அறைக்குள் டாக்டர் மதுசூதன் நுழைந்தார்

ஆறு அடிக்கும் மேல் உயரம். ராணுவ முறுக்கு உடலில் தெரிந்தாலும் அவர் முகத்தில் சாந்தம். கண்களின் கூர்மை.

எழுந்து நின்ற டாக்டர் அமுதா அவருடன் கை குலுப்பி அவரை எதிரே அமரச் சொன்ன பிறகு தன் இருக்கையில் அமர்ந்து, “வாங்க டாக்டர், என்னோட ஆஃபீஸுக்கு நீங்க வந்ததுக்கு நான் ரொம்பப் பெருமைப் படறேன்”

டாக்டர் மதுசூதன், “ஓ! ரொம்ப புகழறீங்க. நானும் உங்களை மாதிரி சைக்கியாட்ரி படிச்சுட்டுத்தான் வேலைக்குச் சேர்ந்தேன். நான் சேர்ந்த துறை, சந்தித்த கேஸ்கள், இவைகள் மூலம் நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அவ்வளவுதான். எனிவே நேரா விஷயத்துக்கு வரேன். விஸ்வா-வனிதா விவாகரத்து எந்த ஸ்டேஜில் இருக்கு?”

டாக்டர் அமுதா, “ஐ ஆம் சாரி டாக்டர். அதைப் பத்தி உங்ககிட்டே நான் பேச முடியுமான்னு தெரியலை. அது அவங்க ரெண்டு பேரைப் பத்தின தனிப் பட்ட விஷயம். …” என்று இழுத்தார்

டாக்டர் மதுசூதன், “ஓ! உங்க ஃபேமிலி கோர்ட் ஜட்ஜ் உங்களை இன்னும் காண்டாக்ட் பண்ணலையா? சாரி, மத்த கவர்ன்மெண்ட் டிபார்ட்மெண்ட்களும் ஆர்மி மாதிரி செயல் படும்ன்னு நினைச்சுட்டேன். பரவால்லை” என்ற படி தான் கொண்டு வந்து இருந்த ப்ரீஃப் கேஸில் இருந்து ஒரு கவரை எடுத்தார், “எதுக்கும் இருக்கட்டும்ன்னு எனக்கு வந்த அவரோட ஆர்டர் காப்பி ஒண்ணு எடுத்துட்டு வந்தேன்” என்றபடி அதை டாக்டர் அமுதாவிடம் நீட்டினார்

அதில் ஃபேமிலி கோர்ட் ஜட்ஜ் வனிதா-விஸ்வாவின் விவாகரத்துக் கேஸ் கவுன்ஸிலிங்கிங்கில் கர்னல்-டாக்டர் மதுசனை டாக்டர் அமுதாவுக்கு ஆலோசகராக நியமிப்பதாக ஆணை பிறப்பித்து இருந்தார். வியப்புடன் அதைப் பார்த்த டாக்டர் அமுதா, “அவ்வளவு பெரிய சைக்கியாட்ரிஸ்ட் உங்களை ஏன் இந்தக் கேஸில் …?” என்று இழுத்தார்

டாக்டர்-கர்னல் மதுசூதன், “ஓ! மறுபடி புகழ்ச்சி வேண்டாம். உண்மையில் விஸ்வாவின் மேல் ஆர்மிக்கு இருக்கும் அக்கறையினால் தான் நான் நியமிக்கப் பட்டு இருக்கேன்”

டாக்டர் அமுதா, “ஆர்மிக்கு அக்கறையா?”