ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

டாக்டர் மதுசூதன், “நிச்சயம் முடியும் விஸ்வா. கொஞ்ச நாள் ஆகலாம். நிரந்தரமா உன் மனத்தில் சந்தோஷம் வருவதற்கு பல மாதங்கள் ஆனாலும் ஆகலாம். ஆனா அதுக்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் இப்போ உன் மனத்தில் இருக்கும் காயங்கள் ஆறாது. We must take some initiative. Do you agree with me?”

விஸ்வா, “எஸ்”

டாக்டர் மதுசூதன், “சரி, உன் மனத்தில் சந்தோஷமும் peace of mindம் இல்லை. முதலில்
உன் மனசில் வேறு என்னென்ன உள்ளுணர்வுகள் இருக்கு அந்த உள்ளுணர்வுகளுக்கான காரணங்கள் என்னன்னு அலசிப் பார்க்கலாம்?”

விஸ்வா, “அப்படி எல்லாம் அலசிப் பார்த்தா அவ செஞ்சது சரியாயிடுமா?”

டாக்டர் மதுசூதன், “நிச்சயம் சரி ஆகாது. அவ செஞ்சது பெரிய தப்பு. ஒத்துக்கறேன். ஆனா, என் கவனம் எல்லாம் உன் சந்தோஷத்தை பத்தி மட்டும்தான். புரிஞ்சுக்கோ. இப்படி யோசிச்சுப் பாரு. ஒரு வேளை வனிதா ரெண்டு குழந்தைகளையும் நீயே வளர்த்துக்கோ நான் எங்க அப்பா-அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொன்னா உடனே உன் மனசில் சந்தோஷம் வந்துடுமா? யோசிச்சு பதில் சொல்லு”

விஸ்வா, “நோ”

டாக்டர் மதுசூதன், “சரி, நிச்சயம் நீ வனிதாவை விட அழகான பெண்களை சந்திச்சு இருப்பே. நிச்சயம் அதில் பலருக்கும் உன் மேல் ஈர்ப்பு இருக்கும். Yes, you are good looking, smart, well educated and quite well to do. இதை விட ஒரு பெண்ணுக்கு வேற என்ன வேணும். சீரியஸா முயற்சி செஞ்சா ஒரு மாசத்தில் நீ வேறு ஒருத்தியை வளைச்சுப் போட்டுடலாம். ஆனா நீ வேறு ஒரு பெண்ணை சந்தோஷமா லவ் பண்ணும் மன நிலையில் இருக்கியா?”

விஸ்வா, “நோ”

டாக்டர் மதுசூதன், “What is stopping you?”

விஸ்வா மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், “நான் சொல்லறேன். சந்தோஷத்துக்கும் மன நிம்மதிக்கும் பதிலா உன் மனசில் இருப்பது உன்னை வாட்டி வதைச்சுட்டு இருக்கும் பல விதமான உள்ளுணர்வுகள், எண்ணங்கள். இதனாலதான் உன்னால சந்தோஷத்தை பத்தி யோசிக்கக் கூட முடியலை. நான் சொல்வது சரியா?”

விஸ்வா, “நீங்க சொல்றது சரி. ஆனா, I feel I have wasted a good part of my life. இனி சந்தோஷமா இருந்தாலும் இவ்வளவு நாளும் நான் வாழ்ந்த வாழ்க்கையே பொய்யான மாதிரி இருக்கு”

டாக்டர் மதுசூதன், “You are jumping the gun. சந்தோஷத்துக்கு பதில இருக்கும் உள்ளுணர்வுகளில் ஒண்ணை இப்போ நீ சொல்லி இருக்கே. அதையேதான் நான் லிஸ்ட் போட்டு ஒவ்வொண்ணா அலசலாம்ன்னு சொன்னேன். ஓ.கே?”