ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

நாத் தழ தழக்க விஸ்வா, “எஸ் சார்”

டாக்டர் மதுசூதன், “Sorry for the digression. சரி, நான் பாருவுக்கு உனக்கு மன வேதனை எதுவும் இல்லாமல் பார்த்துக்கறேன்னு வாக்குக் கொடுத்து இருக்கேன். சோ, உன் நீடித்த சந்தோஷம் தான் என் முக்கியக் குறிக்கோள். அதைப் புரிஞ்சுக்கோ. என்ன? என்னை உனக்கு ஹெல்ப் பண்ண அனுமதி கொடுப்பியா?”

நாத் தழ தழக்க விஸ்வா, “எஸ் சார்”

டாக்டர் மதுசூதன், “இன்னும் கொஞ்ச நாள் டெய்லி சாயங்காலம் இப்படி சந்திக்கலாமா? டெய்லி பாரில் வேண்டாம். இங்கே மேல இருக்கும் டிஸ்கஷன் ரூம்ஸில் ஒண்ணு புக் பண்ணி இருக்கேன். அங்கே சந்திக்கலாம் என்ன?”

விஸ்வா, “ஓ.கே சார்”

டாக்டர் மதுசூதன், “Remember Viswa. உனக்கு உதவி செய்ய. உன் சந்தோஷத்துக்காக மட்டும்தான் நான் இதைச் செய்யறேன்” என்றவரின் ‘உனக்கு’ ‘உன்’ என்ற வார்த்தைகளில் மிகுந்த அழுத்தம் இருந்தது.

விஸ்வா, “Yes Colonel, I understand. In fact I need your help”

டாக்டர் மதுசூதன், “நிச்சயம். அப்போ நாளைக்கு மீட் பண்ண்லாமா?”

இருவரும் விடை பெற்றனர்.
~~~~~~~~~~~~
அடுத்த நாள் அவர் சொன்ன டிஸ்கஷன் ரூமுக்குச் சென்றான்.

விஸ்வா, “Evening sir. Nice. கான்ஃபரென்ஸ் டேபிள் போட்டு ரொம்ப ஃபார்மலா இல்லாமல் இந்த ரூமின் அமைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு”

டாக்டர் மதுசூதன், “அதனால் தான் நான் இந்த ரூமை செலெக்ட் பண்ணினேன்” என்றபடி அங்கு இருந்த நீண்ட சோஃபாவில் அமர்ந்து விஸ்வாவையும் அதிலேயே அமரப் பணித்தார்.

டாக்டர் மதுசூதன், “நீ எதாவுது சாப்பிடறையா?”

விஸ்வா, “நோ நீட். ஆஃபீஸில் இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி காஃபி சாப்பிட்டேன். உங்களுக்கு வேணும்ன்னா எதாவுது ஆர்டர் பண்ணுங்க”

டாக்டர் மதுசூதன், “எனக்கு இப்போ எதுவும் வேண்டாம். Let us start. O.k?”

விஸ்வா, “ஓ.கே?”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீ இப்போ சந்தோஷமா இருக்கியா?”

விஸ்வா, “என்ன கேள்வி கேட்கறீங்க? இந்த நிலமையில் நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?”