ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

விஸ்வா, “என் குழந்தைகள் சந்தோஷமா இருக்கும் வரை அவ முடிவைப் பத்தி எனக்குக் கவலை இல்லை”

டாக்டர் மதுசூதன், “சோ, அவ வேற ஒத்தனைக் கல்யாணம் செஞ்சுட்டு அவளும் சந்தோஷமா இருந்தா உனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. அப்படித்தானே? அவளுக்கு என்ன வயசாச்சு முப்பதா. இன்னொருத்தனோடு இன்னும் ஒண்ணு ரெண்டு குழந்தைகள் கூட பெத்துக்கலாம்”

விஸ்வாவின் முகத்தில் கொபம் கொப்பளித்தது

டாக்டர் மதுசூதன், .”என்ன பேசாம ஸ்தம்பிச்சுப் போயிட்டே?”

விஸ்வா, “அப்படி அவ செஞ்சா என் குழந்தைகளை எனக்குக் கொடுன்னு கேட்பேன். என் குழந்தைகளை வேறு ஒருத்தனோடு பகிர்ந்துக்க நான் விரும்பலை”

டாக்டர் மதுசூதன், “அதாவுது நீ வேறு ஒருத்தியைக் கல்யாணம் செஞ்சுட்டு குழந்தைகளை கூட்டிட்டு வந்துடுவேன்னு சொல்லறையா?”

விஸ்வா, “மே பீ. ஆனா என்னால இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க முடியுமான்னு தெரியலை.

டாக்டர் மதுசூதன், “அப்பறம் எப்படி குழந்தைகளை கூட்டிட்டு வந்து தனி ஆளா வளற்ப்பே?”

விஸ்வா, “I can hire a governess”

டாக்டர் மதுசூதன், “குழந்தைகள் பெத்த தாயை விட்டு வந்து ஒரு செவிலித் தாய் கூட இருக்கணுமா?”

விஸ்வா, “அதான் சொன்னேனே. தேவை இருந்தா வேற கல்யாணம் பண்ணிப்பேன்”

டாக்டர் மதுசூதன், “சோ, நீ குழந்தைகளை வேற ஒருத்தனுடன் பகிர்ந்துக்க மாட்டே ஆனா அவ மட்டும் அவ குழந்தைகளை வேறு ஒருத்திகூட பகிர்ந்துக்கணுமா?”