ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

சற்று நேரம் அவனை தீர்கமாக நோக்கிய வண்ணம் மௌனம் காத்த சுமதி, “ஓ, வனிதா சொன்னாளா?”

விஸ்வா, “நீங்க சொன்னீங்கன்னு சொல்லை. நீங்கதான் சொல்லி இருப்பீங்கன்னு தெரியும். நான் சிங்கப்பூர் போறதைப் பத்தி யோசிச்சுட்டு இருப்பதை உங்களைத் தவிற நான் யார்கிட்டேயும் இதுவரைக்கும் சொல்லலை”

சுமதி, “சாரி விஸ்வா. நான் உனக்கு துரோகம் செய்யணும்ன்னு வனிதாகிட்டே சொல்லலை. நானும் ரெண்டு குழந்தைங்களைப் பெத்தவ. ஒரு தாயின் ஆதங்கத்தில் வனிதா கிட்டே சொன்னேன். வசியின் நல்லதுக்காக சொன்னேன்”

விஸ்வா, “அப்படின்னா எனக்கு என் குழந்தை மேல பாசம் இல்லைன்னு சொல்லறீங்களா?”

சுமதி, “நான் ஒண்ணு கேட்பேன். அதுக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லணும் சரியா?”

விஸ்வா, “ம்ம்ம் … ”

சுமதி, “வசிக்கு இதுவரைக்கும் ஃபீவர், கோல்ட், ஸ்டமக் அப்ஸெட் இந்த மாதிரி எப்பவாவுது உடம்பு சரி இல்லாம போயிருக்கா?”

விஸ்வா, “எஸ்”

சுமதி, “அந்த மாதிரி சமயங்களில் வசியை நீ பாத்துட்டு இருந்து இருக்கியா? ஐ மீன் வனிதா இல்லாமல் நீ மட்டும் அவளை கவனிச்சுட்டு இருந்து இருக்கியா?”

விஸ்வா ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் ஸ்தம்பித்து நின்று இருந்தான்…

சுமதி, “அந்த மாதிரி சமயங்களில் விக்கி என்ன செஞ்சுட்டு இருந்தான்னு நீ கவனிச்சு இருக்கியா?”

ஒரு முறை வசிக்கு உடல் நிலை சரியில்லாத போது, “வேண்டாண்டா அவளுக்கு ரொம்ப கோல்ட் பக்கத்தில் இருந்தா உனக்கும் வந்துடும்” என்று வனிதா பல முறை சொல்லியும் விக்கி வசியின் அருகில் இருந்ததை விஸ்வா நினைவு கூர்ந்தான் …