ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் விரும்பும் பைப்பர்ஸ் பெவிலியன் எனப் படும் பாருக்குள் நுழைந்த விஸ்வா ஒரு மூலையில் சற்று ஒதுங்கி இருந்த பகுதியில் டாக்டர் மதுசூதன் அமர்ந்து இருந்ததைக் கண்டான்.

அவர் அருகே வந்து விறைப்புடன் நின்ற விஸ்வா, “ஈவ்னிங்க் சர்”

டாக்டர் மதுசூதன், “We both are out of the services my boy” என்றபடி எழுந்து கை குலுக்கி அவனை அவருக்கு எதிரே அமரப் பணித்தார்.

டாக்டர் மதுசூதன், “What do you like to have?”

விஸ்வா, “100 Pipers with water”

டாக்டர் மதுசூதன், “To go with the name of this bar?” என்று சிலாகித்தார்

விஸ்வா, “Well, it is a reasonably good imitation of genuine scotch. Neither too expensive”

டாக்டர் மதுசூதன், “What about Teachers’ whiskey?”

விஸ்வா, “There quality in India does not live up to their great brand name”

டாக்டர் மதுசூதன், “பியர் குடிக்காத பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒரே பெங்களூர் வாசி நீயாத்தான் இருப்பே”

தன் கவலைகளை மறந்து வாய் விட்டுச் சிரித்த விஸ்வா, “ஆனா என் ப்ரதருக்கு பியர் ஒரு முக்கியத் தேவை. அவ்வளவு பியர் குடிச்சும் இன்னும் எப்படி அவனுக்கு தொப்பை வராம இருக்குன்னு தெரியலை”

டாக்டர் மதுசூதன், “யூ மீன் ராம். எப்படி இருக்கான்? அவனையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு”

விஸ்வா, “ஹீ இஸ் டூயிங்க் குட். ஆனா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கானேன்னு அப்பா அம்மாவுக்கு கவலை”

டாக்டர் மதுசூதன், “அவனுக்கு எவ்வளவு வயசு? ஐ மீன் உனக்கு எவ்வளவு வயசாச்சு? முப்பத்து மூணா? That is not too old to get married. வேணும்ன்னா நீங்க ரெண்டு பேரும் ஒரே மேடையில் கல்யாணம் பண்ணிக்கலாம்”

அவர் எதற்குக் குறிப்பிடுகிறார் என்பதை உணர்ந்த விஸ்வா மௌனம் காத்தான். வெயிட்டர் கொண்டு வந்த ட்ரிங்க்ஸ்ஸை இருவரும் கையில் ஏந்த,

டாக்டர் மதுசூதன், “Cheers, To marriages and life” என டோஸ்ட் கொடுத்தார்

அவர் கண்களைத் தவிர்த்த விஸ்வா தன் கோப்பையை அவர் கோப்பையுடன் இடித்து பருகத் தொடங்கினான்.

அவனைக் கூர்ந்து நோக்கியவாறு சில கணங்கள் மௌனம் காத்த டாக்டர் மதுசூதன், “அந்த பாகிஸ்தான் ஆஃபீஸரின் குடும்பத்தைப் பத்தி நியூஸ் கிடைச்சுது”