இடை அழகி மேடம் சங்கீதா 13 100

“எதனால?…” மீண்டும் அதே அழகான சிரிப்புடன் கேட்டாள்… “எனக்கு ஒரு 7 வயசிருக்கும்…” என்று சொல்லும்போது கீழே ஒரு புல்லை எடுத்து வைத்து காற்றில் சுருள் சுருளாக சுத்தினான்.. “ஹா ஹா ஹா…. போதும் புல்லு தேஞ்சிட போது மேல சொல்லு…” என்று அவன் தோளில் தட்டினாள்… “நான் ரெண்டாங்கிளாஸ்ல இருந்தப்போ என் பெஞ்சுக்கு பின்னாடி பென்ச்சுல ராகவ் இருந்தான்… அன்னிக்கி நாங்க ரெண்டு பேரும் நல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்து எங்க இடத்துல உட்கார்ந்தோம்…. எங்களுக்கு பிடிக்காத கணக்கு வாத்தியார் வந்தப்போ எனக்கு அவசரமா உச்சா வர மாதிரி இருந்துச்சி…. நானும் எழுந்து மரியாதையா “சார்.. நான் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்..” அவரு “நான் உள்ள வந்துட்டா யாரும் வெளியே போகக் கூடாதுன்னு” சவுண்ட் உட்டாரூ…. நான் திரும்பி எழுந்து நின்னு “சார்… மோசமான நெலமைல இருக்கேன்னு சொன்னேன்… அதுக்கும் அந்த ஆளு ரொம்ப பிகூ பண்ணிகிட்டான் …

அப்புறம் எண்ணத்த செய்ய ஆத்திரத்துல ஒரு மனுஷன் மிரட்ட ஆரம்பிச்சிடுவான்… அந்த மாதிரி கடைசியா நான் அவரை கூப்பிட்டு “சார் இதுக்கு மேல என்னால முடியாது…அப்புறம் இருக்குற இடம் நாறிட்டா என்ன எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னேன்….. அதுக்கு என் கிட்ட வந்து ‘இன்னொரு தடவ தைரியம் இருந்த பர்மிஷன் கேளுன்னு சொன்னார்….’ இதுக்கு என்ன சார் தைரியம் வேணும்?…. வருது சார்… போயிட்டு வந்துடுறேன்னு பாவமா கெஞ்சி கேட்டேன். அதுக்கு அவர் பிரம்பை எடுத்து ஓங்கி அடிக்க வந்தாரு.. அப்போ என் ரெண்டு கண்ணையும் இறுக்கி மூடிட்டு நின்னேன்…. கொஞ்ச நேரம் எந்த சத்தத்தையும் காணும்.. அப்போ ஒரு கண்ணை மட்டும் மெதுவா திறந்து பார்த்தேன்… எல்லாரும் என்னை சுத்தி ஒரு அஞ்சு அடி டிஸ்டன்ஸ்ல நின்னாங்க…. கீழ என்னோட சொந்த அருவி ஓடிட்டு இருந்துச்சி….” என்று அவன் சொல்லி முடிக்க… “ஹா ஹாஹ் ஹா…. ச்சீ…. நாட்டி பாய்…..” என்று சில நொடிகள் சிரித்தாள் சஞ்சனா… அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு என் கூட பையனுங்களும் சரி பொண்ணுங்களும் சரி ஒரு வாரத்துக்கு பேசவே இல்ல…. அப்போ ஒரு நாள் இந்த எனிமி என் கிட்ட வந்து “டேய் கார்த்தி…. எல்லாரும் சில விஷயங்கள சொல்லத்தான் டா செய்வாங்க.. ஆனா யாரும் செயல்ல காமிக்க மாட்டாங்க… ஆனா நீ அன்னிக்கி தைரியமா நம்ம வாத்தி கிட்ட சொன்னதை எல்லார் முன்னாடியும் செஞ்சி காமிச்ச வீரண்டானு சொல்லி என் மனசுல முதல் முதல்ல ஒரு உயரிய இடத்தை பிடிச்சான்…. அதுக்கப்புறம் எந்த ஒரு விஷயத்துலயும் நானும் அவனும் சேர்ந்துதான் இருப்போம்… அவனும் யார் யார் கூடவோ பழகி இருக்கான்.. ஆனால் யாருமே அவனை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டு போய்டுவாங்க… நானும் பலரோட பழகி இருக்கேன்… ஆனா யாருமே என் ஆழ் மனசை ராகவ் அளவுக்கு புரிஞ்சி பழகினது இல்ல….

அதெல்லாம் விட அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு வீட்டுல முதல் ரெண்டு வருஷம் ஃபீஸ் கூட குடுக்கல… அவனுக்கு பண கஷ்டம்னா என்னன்னு காமிக்க அவன் அப்பா அவனை முடிஞ்சா படிச்சி வெளியே வா அப்படின்னு சொல்லி சவால் விட்டாரு.. அப்போ ஹின்துஸ்த்தான் லீவர் நிறுவனத்துல ஒரு உறுப்பினரா சேர்ந்து அவங்களோட ப்ராடக்ட்ஸ் எல்லாத்தையும் ஜனங்க கிட்ட கொண்டு போய் பேசி பேசியே சூப்பரா மார்கெட்டிங் பண்ணுவான்… அதுக்கு நிறைய யுக்திகளை பயன்படுத்தினான்.. ஆன எப்படின்னு யார் கேட்டாலும் ரகசியம்னு சொல்லிட்டு கண் அடிச்சி சிரிச்சிட்டு போய்டுவான்.. “இவன் கிட்ட இருக்குற இந்த மார்கெட்டிங் திறமையை பார்த்துட்டுதான் கம்பனியில கூட இப்போ இவன் இருக்குற பதவிக்கு என்னதான் இவன் சின்ன வயசு பையன்னாலும் லாபம் கெட்டுடக் கூடாதேன்னு நினைச்சி இவனை யாரும் கேள்வி கேக்குறதில்ல..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.