இடை அழகி மேடம் சங்கீதா 13 100

கதவு ஆட்டோமடிக் டோர் என்பதால் தானாகவே மெதுவாக ‘டக்’ என்று கதவின் மேற்புறத்தில் மேக்னட் ஓட்டும் சத்தம் கேட்டு சாத்திக் கொண்டது.. ராகவ் அந்த அறையில் உள்ள மேஜையின் முன் இருக்கும் இருக்கையில் அமர, சரா அவள் வசதிக்கு ஏற்ப அந்த மேஜையின் மீது அமர்ந்தபோது அவளுடைய இரு கால் முட்டிகள் தொடங்கி முழங்கால் நன்றாக அந்த அறையை நிரம்பி இருந்த மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் மிகவும் அழகாக தெரிந்தது. அவளது நீளமான மிடியில் முட்டிக்கு அருகே இருக்கும் எக்ஸ்டிரா ஃபிட்டிங்குடன் பாதம் வரை இருந்த பகுதியை அங்கிருக்கும் பட்டன்களை நீக்கி எடுத்துவிட்டாள். இடுப்பிலிருந்து முட்டி வரை வரும் ஸ்கர்டாக அது மாறி இருந்தது. அவளது கால் விரல் நகங்களில் டார்க் மரூன் நிற நைல் பாலிஷ் மின்னியது, மற்றும் சத்தம் அதிகம் குடுக்காத நூல் போன்ற கொலுசும் அதில் ஒவ்வொரு சீரான இடைவெளிகளுக்கும் இடையே தொங்கி அழகாய் ஆடும் வெள்ளி குண்டுகளும் அவன் கண்ணைப் பறித்தன. பாதங்கள் இரண்டையும் சேர்த்தவாறு கால்களை வைத்திருந்தாள். அப்போது மெதுவாக முன்னும் பின்னும் பாதங்களை ஆட்டும்போது அவள் கொலுசு தரும் மிதமான சத்தம் ராகவ்கு அவன் மனதில் உணர்ச்சிகளை சற்று லேசாக தூண்டியது. அதை கவனிக்க தவறவில்லை அவனுடைய சரா.. ஏதேனும் பேச்சை ஆரம்பிக்க “என்ன ஆச்சு? உன்னோட மிடி முட்டி வரைக்கும் தான் இருக்கு.. காலைல ஃபுல் லென்த்துக்கு இருந்துச்சே?….” என்று கேட்டுவிட்டு மெதுவாக அவள் முகம் பார்த்து சிரித்தான்.. க்ஹ்ம்ம் (மெதுவாக சிரித்து தன் கால்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்) கம்ஃபர்டபிலா இல்லடா…. நடக்கும்போது பாதத்துல தடுக்கிட்டே இருந்துச்சி… அதான் எடுத்துட்டேன்… ஏன் கேக்குற?…. நல்லா இல்லையா? ராகவின் பார்வை அவளது வழு வழுப்பான முழங்காலை ஓட்டி வைத்து பார்ப்பதை அவள் கவனிக்க தவறவில்லை. அப்போது அதே கால்களை கொஞ்சம் வேகமாக ஆட்டி மேஜையில் டக் டக் என்று சத்தம் குடுத்து அவன் பார்வையை தன் கண்களுக்கு திருப்பினாள்… “ஹலோ மிஸ்டர் CEO.. என் முகம் மேல இருக்கு கீழ இல்ல… என்னைப் பார்த்து பதில் சொல்லு” என்று அவள் சொல்ல…. “என் சாராவுக்கு எதுதான் நல்லா இல்ல?…. யூ லுக் வெரி செக்ஸி..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் மென்மையாக கண் அடித்தான். ஓரளவுக்கு குனிந்த தலையுடன் மெதுவாக நிமிர்ந்தவாறு அவளின் கண்கள் காதல் கலந்த சிரிப்புடன் அவனைப் பார்த்தது.

ஏய்.. – என்று ராகவை அழைக்க.. அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தி “என்ன?” என்று வாயால் கேட்காமல் பார்வையால் கேட்டான்.. அதற்கு அவளும் தன் பதிலை “ஆள் காட்டி” விரலால் “என் கிட்ட வா” என்று மெதுவாக சிரித்து அழைக்க.. தலையில் வியர்வை கலந்த தலைமுடியுடன் நெத்தியில் இரண்டு முடிகள் ஃப்ரீயாக தொங்கி அங்கும் இங்கும் மெதுவாக ஆட அவனது கூர்மையான விழிகளுக்கு அவைகள் இன்னும் அவனுடைய முகத்தில் அழகு சேர்த்தது சராவின் பார்வைக்கு. அருகே வந்தான் ராகவ்… சரா அவளுக்கு முன் இருக்கும் இருக்கையில் அவன் தோள்களில் இருக்கும் டவல் மீது கை வைத்து அமரவைத்து அவன் தலை முடிகளை தன் கை விரல்களால் அதிகமான காதலுடன் கோதி விட்டாள். அவள் கண்கள் ராகவின் பார்வையை தவறவில்லை, ராகவின் பார்வை எங்கிருக்கும் என்று சொல்ல தேவை இல்லை.. இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மெதுவாக அவன் தலையை பிடித்து தன் மடியில் சாய வைத்தாள் அவன் சரா.. முதன் முதலில் தன் காதலியின் மடியில் சாயும்போது அவள் காட்டும் அன்பையும் காதலையும் சந்தோஷமாய் அனுபவித்தான் ராகவ்.. மடியில் சாய்ந்த போது வசதியாய் இருக்க அவளுடைய இடுப்பை தன் கைகளால் சுத்தி அனைத்துக் கொண்டான். ஏண்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி இருந்த? கீழ நீ சரியா சாப்ட கூட இல்ல…. வெறும் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு மேல வந்துட்ட… ஆனா இப்போ இந்த முகத்துல ஒரு சின்ன ரிலாக்சேஷன் தெரியுது… கொஞ்சம் சிரிப்பும் கூட தெரியுது…” சொல்லும்போது அவன் கன்னத்தில் தன் உள்ளங்கையை வைத்து பேசினாள்.. உன்ன பார்துட்டேன்ல அதான் எந்த வலியும் நியாபகம் வர மாட்டேங்குது” என்று சொல்லி மடியில் படுத்தவாறே அவளைப் பார்த்து மீண்டும் கண் அடித்து சிரித்தான்.. “இந்த மூஞ்சியதாண்டா நான் பார்க்க ஆசை படுறேன்..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.