இடை அழகி மேடம் சங்கீதா 13 100

ஒழுங்க உண்மைய சொல்லு…. யார் கிட்ட எவ்வளோ காசு வாங்குன? என்ன நீ வா போ னு மரியாதை தேயுது… கோவத்தில் மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ் ஹலோ…. வாட் இஸ் யுவர் இன்டென்ஷன் ராகவ்?…. மரியாதையா யார் கிட்ட எவ்வளோ வாங்குனன்னு சொல்லுடா…. ஹலோ.. என்ன டா போட்டு பேசுற?… ராகவ் ஒன்றும் பேசவில்லை இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “சரி.. எதுக்கு இப்போ மரியாத குறைவா பேசுறீங்க?” என்று அவர் கொஞ்சம் மரியாதையாக(பயத்தில்) பேசினார்…. என்னை கடுப்பேத்தி பாக்காத… ஒழுங்கா உண்மைய சொல்லு… என்னை யாரும் முதுகுல குத்தினா பிடிக்காது. இன்ஸ்பெக்டர் அமைதியா இருந்தார்… நீ ஒன்னும் பேசாம இருக்குறதுலையே தெரியுது நீ தப்பு பண்ணி இருக்கேன்னு… ஒழுங்கா உண்மைய சொல்லு… எதை வெச்சி நாங்க என்னமோ வேணும்னே அவனை தப்பிக்க விட்ட மாதிரி பேசுறீங்க? என்ட்ரன்ஸ்ல உன்னோட ஆளுங்க மஃப்டியில ரெண்டு பெர் அவனை பிடிக்க முயற்சி செஞ்சப்போ ஒருத்தன் பிடிக்கிறா மாதிரி பிடிச்சி தப்பிகிறவன் கையால அடி வாங்குற மாதிரி வாங்கி ரொம்ப எதார்த்தமா வலிக்கிற மாதிரி நடிச்சி அவனை ஓட விட்டத நான் கவனிச்சேன்… இன்ஸ்பெக்டர் அமைதியாய் இருந்தார்… சார்… வ.. வந்து…. நான் உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துப்பேன்… என் மேல நம்பிக்க வெச்சி உண்மைய சொல்லு.. காசு வாங்கல சார்…. ஆனா ரயில்வே டேஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு கடுதாசி வந்துச்சி… அதுல ராகவ் இழுக்குற இழுப்புக்கெல்லாம் நீ ஆட்டம் போட்டா காலேஜ்ல படிக்குற உன் பொண்ணயும் ஸ்கூல் போற உன் பையனையும், அம்மா வீட்டுல தங்கி இருக்குற உன் பொஞ்சாதியையும் ஒரே நேரத்துல பொணமா பார்ப்ப… எப்படின்னு கேக்காத எனக்கு ஆளுங்க இருக்காங்க.. தைரியம் இருந்தா சோதிச்சி பாருன்னு போட்டிருந்துச்சி சார்.. அப்படியே கீழ துரை கையெழுத்து போட்டிருந்துச்சி… உண்மைய ஒத்துக்குறேன் அந்த கடுதாசிய மீறி உங்களுக்கு உதவி செய்ய எனக்கு தைரியம் வரல சார்.. என்னை விட்டுடுங்க சார்.. உங்களுக்கு இல்லாத ஆளுங்க இல்ல வேற யாரையாவது வெச்சி பார்த்துக்கோங்க… என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு ராகவின் பதில் என்னவென்று கூட கேட்காமல் உடனே லைன் கட் செய்தார் ராஜேந்திரன்…. தன்னை சுற்றி நடப்பதெல்லாம் ஏமாற்று வேலையாகவே இருக்கிறதென்று எண்ணி கோவத்தில் கையில் இருந்த செல்ஃபோனை அருகே இருந்த குப்பை தொட்டியில் விசிறி அடித்தான்…. கண்ணாடியின் முன்பு தனது வெள்ளை நிற ஷர்டை அவிழ்த்து பக்கத்தில் உள்ள ஸ்டாண்டில் தூக்கி எரிய அதுவும் பவ்யமாக தொங்கியது.

மனதில் உள்ள கோவமும் வெறியும் கண்ணாடியில் தெரியும் அவனது தோள்கள் மற்றும் நெஞ்சில் உள்ள தசை முறுக்குகளில் தெரிந்தது.. கண்களை மூடி நன்றாக மூச்சு வாங்கி தரையில் முப்பது நாற்பது வரை தொடர்ந்து தண்டால் எடுத்தான். உடல் சற்று குளிரான அறையிலும் நன்றாக வியர்த்திருந்தது…. நிமிர்ந்து நின்று மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது அனைத்தையும் மறந்து “நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்” என்று மனதில் எண்ணிக்கொண்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.. கண்களை மூடியவுடன் அவன் நினைவுக்கு வந்தது அவன் சரா தான்… அன்று காலை அவள் ஒயிட் டாப்ஸ் மற்றும் பிறவுன் நிற மிடியில் இருந்தது நியாபகம் வந்தது… போன் எடுத்து அவளுடன் பேசலாம் என்று செல்ஃபோன் தேடினான்… குப்பை தொட்டியில் விசிறி அடித்தது அவன் நினைவுக்கு வரவில்லை… தேடிக் கொண்டிருக்கும்போது “டிங்.. டிங்..” என்று பெல் சத்தம் கேட்டு ஏதோ அவசரத்தில் கதவை திறந்தவனுக்கு ஆச்சர்யம்.. அவன் கண்கள் முன்னே சற்று முன் அவன் கணவு கண்ட சரா அவன் முன் நின்றாள். சங்கீதாவுக்கு ராகவை சட்டை இல்லாமல் பார்த்தது கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.. இருப்பினும் அவனுடைய வலிமையான அந்த உடல்வாகு சங்கீதாவை ரொம்பவே ஈர்த்தது.. அவளும் பெண்தானே!!… சங்கீதா சங்கோஜப்டுவதை உணர்ந்து உடனே அருகில் உள்ள ஒரு டவல் ஒன்றை எடுத்து மேல போட்டுக் கொண்டான்.. “வா….வா உள்ள வா சரா..” என்று மென்மையாக சிரித்து அழைக்க.. அவன் முகத்தில் அவளைப் பார்த்ததும் எழுந்த மகிழ்ச்சியை பார்த்து அவளும் சற்று வெட்கத்தில் நாணி குனிந்து உள்ளே வந்தாள்.

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.