இடை அழகி மேடம் சங்கீதா 13 100

நெனப்பெல்லாம் மனசுல ஏரிக்குமே அய்யாவுக்கு…. ஹாஹ்ஹா.. மூஞ்சிய பாரு…. போய் குளிச்சிட்டு வா போ போ.. டைம் ஆச்சு….” என்று சிரித்துக்கொண்டே ராகவை பாத்ரூம் உள்ளே தள்ளிவிட்டு வெளியில் தாழ்பாள் போட்டாள்…. “ஏய் எதுக்கு வெளியே லாக் பண்ண?” என்றான்.. “ஹா ஹா… அப்படிதான் பண்ணுவேன்..” என்றாள்.. “அதான் ஏன்?…” “நான் டிரஸ் பன்னி முடிக்குற வரைக்கும் திறக்க மாட்டேன்… நடுவுல நீ வந்துட்டா அப்புறம் உன்ன அடக்குறது கஷ்டம்பா சாமி.. நீ அதுக்குள்ள குளிச்சிட்டு வா…” செல்லமாய் அதட்டினாள் சரா.. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குளித்து முடித்து பாத்ரூம் விட்டு வெளியே வந்தான் ராகவ்…. வந்தவன் அப்படியே உறைந்தான்… தலையில் இருந்து மார்பு வறை வழுவழுப்பாக சில்கி ஷைநிங்காக மினுக்கும் சுருள் சுருளான கூந்தல் முடியுடன் கருப்பு நிறத்தில் ஸ்லீவ்லஸ் வைத்து மார்பில் தொடங்கி பாதம் வரையில் தவழும் கவுன் அணிந்திருந்தாள் சங்கீதா.. எடுப்பான மார்பின் மீது மெலிதாக ஒரு டைமன்ட் நெக்லஸ் அணிந்திருந்தாள்.. காதில் மிகச்சிறியதாக இரண்டு டைமன்ட் கம்பல்கள் அணிந்திருந்தாள். அம்பு போல் திருத்திய புருவங்கள் கூர்மையாக இருந்தது. உதட்டில் லிப்ஸ்டிக் எதுவும் போடாமல் மிகவும் மெலிதாய் லிப் க்லாஸ் தடவி இதழ்களை ஈரப்படுத்தி இருந்தாள். கால்களுக்கு கிட்டத்தட்ட ஒரு இன்ச் பாய்ன்டட் ஹீல் வைத்த லேடீஸ் கட் ஷூ அணிந்து “டோக் டோக்” என்று சத்தம் வர கண்ணாடியின் முன் ஒரு முறை இருபுறமும் நடந்து பார்த்தாள்.. அப்போது அவள் பாதங்களுக்கு பின்புறத்தில் அந்த கவுன் சற்று தரையை தடவியபடி வருவதை பார்த்தாள்… “ஹ்ம்ம்.. இன்னிக்கி ராத்திரி கொஞ்ச நேரம் இதை வெச்சி சமாளிக்கணும்….” என்று மனதில் லேசாக புலம்பிக்கொண்டாள்… “ஹேய்.. என்னடா அப்படியே நிக்குற?.. வா வந்து உன் டின்னர் சூட் போட்டுக்கோ… டைம் ஆச்சு..” – அவள் பேச பேச அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ராகவ்.. “ஹஹ் ஹஹ் ஹா.. பார்த்ததெல்லாம் போதும்…. என் காஸ்ட்யூம் பக்கத்துல நீ டவல் கட்டிட்டு நிக்குறதை பார்க்கும்போது சிரிப்பு வருதுடா.. சீக்கிரம் உன் சூட் போட்டுக்கோ..” – என்று அவனுடைய ஆடைகளை அவன் கையில் குடுத்தாள்.. நேரம் ஆகுதேன்னு அவசரமாய் அந்த டின்னர் சூட்டை அடுத்த பத்து நொடிகளில் மாட்டி ரெடி ஆனாலும் ராகவின் கண்கள் சந்கீதாவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தது.. “கிர்ர்ர்” என்று பெல் ஒலிக்க “கமிங்..கமிங்..” என்று சொல்லிக்கொண்டே அவசரமாய் கழுத்தில் உள்ள டை பௌவ் அட்ஜஸ்ட் செய்தபடி சற்று ஈரமாய் இருந்த தலைமுடியின் மீது அப்படியே ஜெல் பூசி வாரிய பின்பு கண்ணாடியைப் பார்த்தவன் அடுத்த சில நொடிகளில் அவற்றை நன்றாக கலைத்து விட்டான்.. “ஹா ஹா.. நினைச்சேன்… அதாவது ஒழுங்கா அடங்கி இருக்குமான்னு பார்த்தா அதுவும் உன்ன மாதிரியே இருக்கு.. ஆனா கலைஞ்சி இருக்கிறதுதான் உன் மூஞ்சிக்கு நல்லா இருக்குடா.. அப்படியே விடு.. யூ ஆர் ரியல்லி ஹாண்ட்ஸம் டா மை ஸ்வீட் ஹப்பி.. ப்ச்.. ப்ச்..” என்று அவன் கண்ணத்தில் முத்தம் குடுத்தாள் சரா.. அபோது அவள் லிப்கிலாசின் செர்ரி பழ வாசனையை கண்கள் மூடி ரசித்தபடி மீண்டும் அவளை இழுத்து அவள் உதடுகளில் அழுத்தி முத்தம் குடுக்கையில்.. “கிர்ர்ர்ர்” என்று மீண்டும் பெல் சத்தம் கேட்டது.. “கமிங் கமிங்…ப்ச் ப்ச் ப்ச்”….. சங்கீதாவின் இதழ்களில் முத்தம் குடுத்துக்கொண்டே ஷூக்களை அவசரமாய் மாட்டி கதவை திறந்தவுடன் “இட்ஸ் டைம் பாஸ்.. கிளம்பலாம்” என்றான் ஸ்டீவ்.. “ஒஹ் எஸ் ஷுவர்..” என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவின் இடது கைக்குள் தன் வலது கையை கோர்த்தபடி புதியதாய் திருமணம் ஆன டிப்பிகல் இங்கிலீஷ் தம்பதிகள் போல நடந்து சென்றார்கள் இருவரும்..

விழா நடக்கும் அரங்கத்தின் வி.ஐ.பி க்கள் செல்லும் நுழைவாயிலில் கூட்டமாக ஃபோட்டோகிராஃபர்ஸ் பலரும் ஒரே நேரத்தில் கிளிக் செய்யும்போது எக்கச்சக்கமான ஃபிளாஷ் லைட் மேல விழும்போது அருகே உள்ள கண்ணாடியில் ராகவ் ஒரு நொடி சங்கீதாவை பார்க்குமாறு செய்கை காமித்து அவளின் தோளில் கை போட்டு… “எப்படி?…” என்று இருவருடைய ஆடையையும் காமித்து கண்களால் கேள்வி எழுப்ப… “ஹ்ம்ம்… ஓகே ஓகே.. எம்பக்கத்துல நிக்குற அளவுக்கு எதோ கொஞ்சம் ஸ்மார்டாதான் இருக்க..” என்று சங்கீதா அவன் காதில் நக்கலாய் முணுமுணுக்க “ஹ்ம்ம் எல்லாம் எந்நேரம்.. உன்னோட இந்த டிரஸ் ச்சூஸ் பண்ணது அய்யாதான் தெரியுமா!!.. எப்படி இருக்கு?..” “அடப்பாவி.. நீதான் இந்த அவஸ்த புடிச்ச கவுனை ச்சூஸ் பண்ணியா?… நடக்கும்போது பின்னாடிபக்கம் யாரும் கால் வெச்சி தரையில மிதிச்சிட கூடாதுன்னு பார்த்து பார்த்து நடக்க வெச்சிட்டியேடா..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.