ஆனால் அன்று அவன் காலை முதல் மாலை வரை தூங்கி விட்டு சங்கீதாவின் வீட்டின் முன் துணி கேட்பதற்காக மாலை 5 மணிக்கு வந்திருக்கிறான். “அவனுக்கு, உள்ளே மெதுவான சத்தம் கேட்டது..” “நானும் விடிய விடிய யோசிச்சிட்டேண்டா, என் மனசுக்கு ஒரு விதத்துல நிம்மதி கிடைக்க போகுது.. ஆமாம் உறுதியா கிடைக்க போகுது….” “அப்போ டாக்டர் கிட்ட சிகிச்சை எடுத்துக்க போறியா?” “இல்ல வேற வழியில எனக்கு நிம்மதி கிடைக்க போகுது டா..” “என்ன சொல்லுற?” “ஆமாம்… உன்னை கொள்ளுறதுதான் டா எனக்கு ஒரே வழி you blody bastard.” “டேய் குமார் என்ன பேசுற?. எனக்கு பயமா இருக்குடா, இந்த மாதிரி எல்லாம் பேசாத..” – நவீன் உடனே வாசல் கதவை நோக்கி விரைந்தான் அப்போது தான் தெரிந்தது கதவு உள் பக்கம் பூட்டி இருக்கிறதென்று… “ஹா ஹாஹ்.. ஓடாதடா நாயே, இன்னைக்கி உன் உயிர் உன்னை விட்டு பிரிய போகுது உன் இஷ்ட தெய்வம் ஏதாவது இருந்தா உன் கடைசி பிரார்த்தனையை பண்ணிக்கோ, உனக்கு சொர்க்கம் கிடைக்கணும் னு வேண்டிக்கோ.” குமார் நவீனை இறுக பிடித்துக் கொண்டான், “டேய் விடு டா என்னால முடியல டா நான் உன் friend டா, நான் வேணும்னா உன்னை பத்தியும் துறையைப் பத்தியும் வெளியே சொல்லாம இருக்கேண்டா. கொஞ்சம் யோசி டா பொறுமையா இருடா கொலை கார பாவி.” “ஆங்… நான் கொலை கார பாவி தான் ஆனா இன்னைக்கி ஒரு நாள் மட்டும்தான் என் வாழ்க்கைல கொலை செய்ய போறேன். நாளைல இருந்து நான் ரொம்பவும் சுத்தமான ஆளா இருப்பேன்.” சொல்லிக் கொண்டே கையில் ஒரு கத்தியை எடுத்தான் குமார். “வேணாம்டா வேணாம்டா,,ப்ளீஸ் டா என்னால உன் பிடியில இருந்து விலக முடியல டா பாவி… என்னை கோ கோ…. கொல்லாத டா நான் புள்ளகுட்டி காரண்டா… படு பாவி வேணாம்டா டேய் வேணாம் டா…. எனக்கு பயமா இருக்கு டா வேண்டாம் டா ப்ளீஸ் டா வேண்டாம் டா.” – நவீன் கெஞ்சினான், கதறினான், குமாரின் கையில் இருந்து விலக முயற்சி செய்யும்போது கத்தி தவறி கீழே விழ, ஈவு இறக்கம் இன்றி நவீனின் கழுத்தை பிடித்து அருகில் உள்ள சுவரில் மிகவும் பலமாக ஒரே இடி இடிக்க நெத்தியில் இருந்து ரத்தம் வழிந்தது.. “அடப்பாவி என்னையும் சேர்த்து இடிச்சிட்டியே டா… பரவாயில்ல என் உயிர் போனாலும் சரி, உன் உயிர் போகணும் டா bastard… உன் ….உன் உயி…..போ…bas..d….” மயக்கத்தில் ரத்தத்துடன் கீழே விழுந்தார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போலீஸ் siren சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் எழுந்து சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இஸ்திரி போடும் பையன் பத்து நிமிடத்துக்கு முன்பாக புகார் கொடுத்ததின் பெயரில் போலீஸ் விரைந்தது. அதற்க்கு முன் கூட்டம் கூடி இருந்தது. நிர்மலா சங்கீதாவின் பசங்களை கூட்டிக் கொண்டு ஓடி வந்தாள். தள்ளுங்கயா… தள்ளுங்க… – head constable உள்ளே வந்தார். யாருக்காவது ஏதாவது தெரியுமா? இவங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா? கூட்டத்துடன் கூட்டமாக நின்றிருந்த நிர்மலா பதறி அடித்து உடனே சங்கீதாவின் நம்பரை க் குடுத்து அழைத்து விஷயத்தை சொல்ல சொன்னாள்.. “ஹலோ..” – constable அழைத்தார்.
Next post please…
Next week 11
Next 11