நான் அவனை கேள்வியாகப் பார்த்தேன்!
இங்க பாரு, நான் பாட்டுக்கு அவர்கிட்ட போயி, உங்க சித்தப்பா, சித்தி மோசமானவங்க, கெட்டவங்க, நடிக்கிறாங்கன்னு ஆரம்பிச்சிருந்தா, அவர் ரெண்டு அறை கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பாரு!
அதுனாலதான், உன் பேரைச் சொல்லி ஒரு ஷாக் கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமா விஷயத்தைச் சொன்னேன்! அப்பியும், ரெண்டு மூணு தடவை அடிக்க வந்தாரு என்று சிரித்தான்!
எனக்கும் அவன் சொன்னதில் இருந்த லாஜிக் புரிந்தது!
சிரித்தவன், பின் சொன்னான். ஆனா, நான் அப்புடிச் சொன்னப்பதான், அவர் உன்னை எவ்ளோ லவ் பண்றாருன்னு புரிஞ்சுது! பேசிக் கொண்டிருந்தவனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழத் தொடங்கியிருந்தது.
எனக்கும் அவர் மேல் கொஞ்சம் கோவம் இருந்தது. ஆனா, உண்மை தெரிஞ்ச பின்னாடி, உனக்காக, அவர் ஃபீல் பண்ணதைப் பார்த்து எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை! அதுவும், நான் சரியான நேரத்துல உன்னை தடுத்தது தெரிஞ்சதும், என் கையையே ரொம்ப நேரம் புடிச்சிகிட்டாரு! அவரால நடந்ததைத் தாங்க முடியலை. நீ இத்தனை நாளா அனுபவிச்ச வேதனையை, அவர் அந்த கொஞ்ச நேரத்துலியே அனுபவிச்சிட்டாரு!
உணர்ச்சிமயத்திலேயே சொன்னான். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப லக்கி! சொல்லப்போனா, எனக்கு உங்களைப் பாத்தா ரொம்பப் பொறாமையா இருக்கு! ஆல் தி பெஸ்ட்! நீங்க இப்பிடியே என்னிக்கும் இருக்கனும்!
உண்மையான அன்பில் வாழ்த்தும் போது, வயது வித்தியாசம் பெரிய விஷயமில்லை!
மூன்று பேருமே நெகிழ்ந்து போயிருந்தோம்! மெல்ல நெருங்கி, அவன் கையை பிடித்தேன்!
தாங்க்ஸ்டா என்று புன்னகை கலந்த கண்ணீருடன் சொன்னேன்!
மதனின் செயலுக்கான விளக்கம், விளக்கத்தில் அப்போதும் நான் அவருக்காக ஃபீல் பண்ணதை சொன்னது எல்லாம் சேர்ந்து ஹரீஸையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது!
என்னை நெருங்கியவர், மதனின் தோள்களை தட்டிக் கொடுத்தவர், என்னையும், ஆறுதலாக அணைத்துக் கொண்டார்!
