கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 18

ரொம்பவே கோவமா இருக்கான் போல இருக்கு… தொரைக்கு என்கிட்ட பேசக்கூட இஷ்டமில்லையோ? இருக்கட்டும்.. எத்தனை நாளைக்கு இப்படி முறுக்கிக்கிட்டு இருக்கான்னு… நானும் பாக்கறேன்… தன் உதட்டை ஒருமுறை சுழித்துக் கொண்டவள் ஹாலில் இருந்த கட்டிலில் படுத்ததும் உடல் அசதியில் உடனே தூங்கிவிட்டாள் சுகன்யா.

பதினொரு மணிவாக்கில் குமாரசுவாமி உள் அறையிலிருந்து எழுந்து வந்து, தான் போட்டிருக்கும் நைட்டி விலகிய உணர்வு கூட இல்லாமல், அசந்து தூங்கும் தன் மகளின் மேல் ஒரு போர்வையைப் போத்தியவர், அறை விளக்கை விளக்கை அணைத்துவிட்டு படுத்தார்.

மறுநாள் சுனில் ஆஃபீசுக்கு வரவில்லை. தினசரி வேலையுடன், பைல் லிஸ்ட் தயார் செய்யும் வேலையும், அவள் தலைமேல் அன்று மொத்தமாக விழுந்தது. நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் சுகன்யா வேலை செய்து கொண்டிருந்ததால், செல்வாவுக்கு அவள் போன் செய்யவில்லை. அவனும சுகன்யாவுக்கு போன் செய்யாதது மட்டுமல்லாமல், அன்று முழுவதும் அவன் இவள் கண்ணிலேயே தென்படாமல் உலவிக்கொண்டிருந்தான்.

மறுநாள் செல்வாவின் ஃப்ளோருக்கு, ஏதோ வேலையாக சென்றிருந்தபோது, அவன் அவள் எதிரில் வருவதைப் பார்த்தவுடன், முகத்தில் புன்னகையுடன் அவனுக்காக லிஃப்டின் அருகில் நின்றாள். செல்வா இவளைக் கண்டதும் இவளைப் பார்க்காததுபோல் சட்டெனத் திரும்பி எதிர்ப்புறமாக படிக்கட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

குழந்தைக்கு இன்னும் என் மேல இருக்கறக் கோபம் தீரலைப் போலருக்கு… சுகன்யா மனதுக்குள் எழுந்த சிரிப்புடன் தன் உதட்டைப் பிதுக்கிக்கொண்டாள். இப்படி என்னைப் பாத்தும் பார்க்காத மாதிரி போற அளவுக்கு நான் என்னத் தப்பு பண்ணிவிட்டேன் என்ற தவிப்பும் மனதில் எழ, அந்த தவிப்பு ஒரு சிறு முடிச்சாக அவள் மனதின் ஒரு மூலையில் விழுந்தது. கூடவே அவள் உள்ளத்துக்குள் ஒரு சின்ன வருத்தமும் எழுந்தது.

“சுனீல்.. நீங்க எங்கே சுத்திகிட்டு இருக்கீங்க..?
“இவன் எங்கேப் போனான்… எங்கேப் போனான்னு’ சாவித்திரி கொஞ்ச நேரமா… என்னை உண்டு இல்லேன்னு வறுத்து எடுக்கறாங்க..” சுனிலின் செல்லில் சுகன்யா அவனைக் கூப்பிட்டாள்.

“சாரி மேம்… நேத்து நீங்க பிரிப்பேர் பண்ணி அனுப்பிச்ச டேட்டாவுல ஏதோ சின்னப் பிராப்ளம் இருக்குன்னு செல்வா சார் பாய்ண்ட் அவுட் பண்ணாராம்… ஐ.டி. பீப்பிள்ஸ் கிட்டேருந்து தகவல் கிடைச்சுது. இப்ப அவங்க டிவிஷன்ல உக்காந்து, டேரக்டா சர்வர்லேயே நம்ம செக்ஷ்ன் டேட்டாவை வெரிபை பண்ணிக்கிட்டு இருக்கோம்… ரொம்ப அவசரம்ன்னா உடனே கீழே இறங்கி வர்றேன்…”

“யூ கேரி ஆன்… சுனில்.. நான் சாவித்திரி மேடம் கிட்ட இதைப்பத்தி சொல்லிடறேன்.. மிஸ்டர் சுனீல் ஒரு சின்ன விஷயம்… செல்வா அங்கே தன் சீட்டுல இருக்காரா..?. யெஸ்… ஆர் … நோன்னு மட்டும் பதில் சொல்லுங்களேன்…”

“யெஸ் மேம்…”

“தேங்க் யூ…”

இது நான் பண்ண வேலைன்னு செல்வாவுக்கு நல்லாவே தெரியும்… என் வேலையிலத் தப்பு இருந்தா, அதைப்பத்தி செல்வா என்னைக் கூப்பிட்டு நேரடியா சொல்லியிருக்கலாமே?

அஃபீஷியலாவும் இதைத்தானே அவன் செய்யணும்… அதைவிட்டுட்டு அவனோட ஆளுங்ககிட்ட, டாட்டவை வெரிபை பண்ண சுனிலை கூப்பிட சொல்றான்னா.. செல்வா என்கிட்ட பேசறதையே, என் முகத்தைப் பார்க்கறதையே, தவிர்க்க நினைக்கிறானா?

அவள் மனதில் ஒரு சிறிய ஐயம் எழுந்தது. சட்டென அவள் மனம் துணுக்குற்றது.

ரெண்டு நாட்களாகவே செல்வாவிடம் பேச சுகன்யாவின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. சரி.. அப்படியே இருக்கட்டும்.. அவனே பெரிய மனுஷனா இருந்துட்டு போவட்டும்… ஆஃப்டர் ஆல் அவன் யாரு? அவன் என் ஆள். எனக்கு புருஷனா ஆகப்போறவன்.. என்னைக் கோச்சிக்கறதுக்கு அவனுக்கு உரிமையில்லையா?

நான்தானே அவனை முதல்லே காதலிக்க ஆரம்பிச்சேன்.. கோவிலுக்கு அழைச்சிட்டுப் போன்னு நான்தானே அவனை என் பக்கம் இழுத்தேன். இந்த உறவுக்கே முதல் காரணம் நான்தானே?

பாண்டிச்சேரிக்கு போனான். அஞ்சு நாள் வரைக்கும் எங்கிட்ட பேசலே.. நான் நான் என் வெக்கத்தை விட்டுட்டு போன் பண்ணேன்.. இந்த தடவையும் நானே திரும்பவும் ஒருதரம் அவன் கிட்டே பேசிட்டுப்போறேன்.. இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், வினாடியும் தாமதிக்காமல் செல்வாவின் நம்பரை இண்டர்காமில் அழுத்தினாள்.

“யெஸ்… தமிழ்செல்வன் ஹியர்…” செல்வாவின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

“செல்வா.. எனக்குத் தலைவலிக்கற மாதிரி இருக்குப்பா… கேன்டீன் வரைக்கும் போகலாமா..? ஒரு கஃப் காஃபி வாங்கிக் குடேன்…”

“ம்ம்ம்… நீங்க யார் பேசறீங்க மேடம்…? நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்..”

“என்னடா கண்ணூ… மேடம்… கீடம்ன்னு யாருகிட்ட ஃபிலிம் காட்டறே… நான் யாருன்னு நிஜமாவே உனக்குத் தெரியலையா?” காமெடி டிராக்குக்கு சுகன்யா மாறினாள்.