கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“சார்’ என்றுதான் விளிப்பது வழக்கம். ஆஃபிசுக்கு வெளியில் போடா வாடா என்று அடித்து பிடித்துக்கொள்வார்கள்.

“யாருடா லைன்ல” செல்வாவின் குரலில் சிறிது ஏளனம் ஒலித்ததாக சுகன்யாவுக்குப் பட்டது.

“உன் ஆளுதாண்டா…” செல்வா
“டா’ போட்டதும் ராஜாராம் பதிலுக்கு அவனை
“டா’ போட்டான்.

“நான் சீட்லே இல்லேன்னு சொல்லுடா…”

“செல்வா… என்னடா சொல்றே..?”

“சொன்னதை செய்டா..”

“டேய் எந்த உலகத்துல இருக்கேடா நீ? சுகன்யா லைன்ல இருக்காங்கடா…? சொல்றது உன் காதுல விழலேயா?” இப்போது ராஜாராமின் குரலில் உண்மையான வியப்பிருந்தது.

“டேய்… நான் சொன்னதை உன்னால செய்ய முடியலேன்னா… இனிமே என் டேபிள்லே இருக்கற போன் அடிச்சா தயவு செய்து நீ அதை எடுக்காதே… அது பாட்டுல அது அடிச்சுட்டு போகட்டும்ன்னு நீ உன் வேலையைப் பாரு…”

“ஹோ… உடம்பு கிடம்பு சரியில்லையா பாஸ்…?”

“மிஸ்டர்… ஐ கேன் வெரிவெல் அட்டண்ட் மை கால்ஸ்… ஐ டோண்ட் நீட் எனிபடீஸ் அஸிஸ்டன்ஸ் ஹியர்… அண்ட் டூ வாட் ஐ சே..” செல்வா பேசிக்கொண்டிருந்தது அடுத்த முனையிலிருந்த சுகன்யாவுக்கு வெகு வெகு தெளிவாகக் கேட்டது. ரீசிவரை பிடித்திருந்த தன் கை நடுங்க அதை அதனுடைய இடத்தில் வைத்தாள் அவள்.

சுகன்யாவின் அடிவயிற்றிலிருந்து மெல்லிய உணர்ச்சிப் பந்தொன்று வேகமாக எழுந்தது. அது எரிச்சலா.. அது கோபமா… அது ஆதங்கமா… அது ஆற்றாமையா… அது சினமா… இல்லை அது வருத்தமா… அது அவளுடைய இயலமையா?

இதில் எதுவுமே அது இல்லையென்றால் என்னதான் அது? அதை என்னவென்று சொல்வது? அவளால் இனம் கண்டு கொள்ள முடியாத ஒரு உணர்ச்சி, விருட்டென எழுந்து, அவளுடைய தொண்டை வரை வந்து, தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டு நின்றது.

அந்த உணர்ச்சி முதலில் சிறிய கேவலாக கிளம்பியது, கேவல் அழுகையாக மாறியது… சத்தம் உதட்டிலிருந்து வெளியில் வராதபடி தன் வாயை, கைக்குட்டையால் பொத்திக்கொண்டாள் சுகன்யா. வாயிலிருந்து சத்தம் வராவிட்டாலும், அவள் விழிகள் கண்ணீரால் நிரம்பியது.

திருவான்மியூரில், குமாரசுவாமியின் குடும்பத்தினருக்காக, சீனு பார்த்திருந்த வீடு, தனிக்காம்பவுண்டில், வராந்தாவும், அதைக்கடந்ததும், ஒரு பெரிய ஹாலும், ஹாலுக்கு இடது வலது புறங்களில் மூன்று ரூம்களும், இரண்டு பால்கனிகளும், பூஜைக்கென கதவுடன் கூடிய ஒரு தனியிடமும், கிச்சன், பாத்ரூம் என கீழ்ப்போர்ஷனில், புழங்குவதற்கு வசதியாக இருந்தது.

மாடியிலும், இரண்டு பேர் தங்குமளவுக்கு ஒரு அறை இருந்தது. அறைக்குப் பின் மொட்டை மாடியாக இருந்தது.
“மாடியில ஒரு ரூம் இருக்கற வீடாப் பாருங்கப்பா…’ அப்பாவிடம் தன் விருப்பமாக சுகன்யா சொல்லியிருந்தது இந்த ஒரு கண்டீஷன்தான். மாடி அறைக்கு வெளியில் பாத்ரூமும், டாய்லெட்டும் இருந்தன. அங்கிள், சுகன்யா வில் செர்டன்லி லைக் திஸ் அக்காமடேஷன் என சீனு சிரித்துக்கொண்டே சொன்னான்.

வீட்டு காம்பவுண்டுக்குள் இரண்டு கார்களை நிறுத்திக் கொள்ளுமளவுக்கு தாராளமாக காலி இடமும் இருந்தது. சிறிய லானில் புற்கள் பச்சைபசேலென கட்டுக்கு அடங்காமல் வளர்ந்திருந்தன. ஒரு முறை ஒழுங்காக வெட்டி சுத்தம் செய்துவிட்டால், பின் மாலையில் அங்கு சவுகரியமாக உட்க்கார ஒரு சிமெண்ட் பெஞ்சும் புதைக்கப்பட்டிருந்தது. வீட்டைக்கட்டியவன் வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் கட்டியிருக்கவேண்டும் என குமாரசுவாமி நினைத்தார்.

வீட்டுக்குப் பின்னால் நான்கைந்து தென்னை மரங்களும், வேப்ப மரமொன்றும், நாரத்தை மரம் ஒன்றும் காற்றில் தலையாட்டிக் கொண்டிருக்க, வீடே குளுகுளுவென இருந்தது. சுந்தரிக்கு இந்த வீடு நிச்சயமாகப் பிடித்துவிடுமென குமாரசுவாமியின் மனதுக்குப்பட்டது.

வீட்டுக்கு அவ்வப்போது வரும் தன் மச்சினர் ரகுவோ, அல்லது வேறு யாராவது விருந்தினர்களாக வந்தாலும், அவர்களைத் தங்கவைத்து உபசரிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில், வாடகை சிறிது அதிகமாக இருந்தபோதிலும், மொத்தத்தில் வீடு குமாரசுவாமிக்கு வெகுவாகப் பிடித்துப்போக, தங்களது உபயோகத்துக்காக முழு வீட்டையும் அவர் வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.

நடராஜன் வீட்டிலிருந்து, அவர் பார்த்த வீடு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், சுகன்யாவின் திருமணத்துக்குப் பின்னும், நினைத்த போது, வீட்டுப்பெண்கள் அவளைப் பார்த்துவிட்டு வர வசதியாக இருக்கும் என அவர் நினைத்தார். மறு யோசனை செய்யாமல், உடனே வீட்டுக்காரனிடம் அட்வான்ஸும் கொடுத்துவிட்டு, சீனுவுக்கு நாலு முறை நன்றி சொன்னார்.