கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“நல்ல மனுஷன்டீ அவரு… அவரைப் போய் இப்டீல்லாம் கலாய்க்கறே நீ?” சுகன்யாவும் தன் வாய்விட்டு சிரித்தாள். மனம் இலேசாகிக்கொண்டிருந்தது அவளுக்கு.

“சுகா… நவ் லெட் அஸ் டாக் சீரியஸ்லி… சீனு வீட்டுலேருந்து அவனோட பேரண்ட்ஸ், அவனோட அத்தை, இன்னும் ரெண்டு பேரு, நாலு மணிக்கு எங்க வீட்டுக்கு வர்றாங்க… உங்க வீட்டுலேருந்தும் பெரியவங்க அவங்க சவுகரியப்படி எப்ப வேணா வரட்டும்… சுகன்யா ப்ளீஸ்… நீ மார்னிங்கே வந்துடுடீ… த ஹோல் டே… நீதான்டீ என் கூடவே இருக்கணும்…

“ஓ.கே… ஓ.கே… அக்ரீட்…” சுகன்யா ஒத்துக்கொண்டாள்.

“நீ எதுக்கும் கவலைப்படாதே.. என் ஃபிரதரைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. இப்பவே அவன் காதைத் திருகி, அவனை உன் கிட்ட பேச வைக்கலே என் பேரு
“மீனுக்குட்டி” இல்லே… இப்படித்தாண்டீ சீனு என்னை ஆசையா கூப்பிடறாரு…” மீனா களிப்புடன் முனகினாள்.

“பிளீஸ்… மீனா… இப்ப நீ எதுவும் செல்வா கிட்டே கேக்காதே… எல்லாத்தையும் நான் நேர்ல உன் கிட்ட சொல்லிடறேன்… மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்.” சுகன்யா கெஞ்சினாள்.

“ஓ.கே.. அக்ரீட் மை டியர் அண்ணீ… அக்ரீட்… பை…” மீனா செல்லை அணைத்தாள்.

“மீனுக்குட்டி…” சீனு உனக்கு வெச்சிருக்கற செல்லப்பேரு ரொம்ப ஸ்வீட்டா இருக்குடி… நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டைப் போட்டுக்காம, சந்தோஷமா இருக்கணும்… சுகன்யா நீளமான பெருமூச்சொன்றை விட்டாள்.

“ஏய் மீனா.. உனக்கு எத்தனை தரம் சொல்லியாச்சு… என் செல்லை ஏண்டி நீ நோண்டறே…?” செல்வா எரிச்சலுடன் வெராண்டாவிற்கு வந்தான்.

“இப்ப எதுக்கு டென்ஷனாவறே நீ… நான் என்ன கொழந்தையா… உன் செல்லை நான் கெடுத்துடுவேனா… ரொம்பத்தான் அல்டிக்காதே…”

“சில விஷயங்கள் ஃப்யூர்லி பர்சனல்; சொன்னப் புரிஞ்சுக்கடீ… ப்ளீஸ் என் செல்லை நீ எடுக்காதே… அவ்வளவுதான்… திஸ் இஸ் ஃபைனல். தட்ஸ் ஆல்” செல்வா வெடித்தான்.

“நீ அடிக்கற கூத்து எனக்குத் தெரிஞ்சு போச்சேன்னு எரிச்சலா?” உதடுகளை சுழித்தாள் மீனா.

“என்னடிப் பேசறே?”

“சுகன்யாவை நீ எப்படி வேணா மெரட்டிக்கிட்டு இரு… என்னை நீ மிரட்ட முடியாது… நீயும் இதை ஞாபகத்துல வெச்சுக்கோ?

“என்னடி உளர்றே?”

“எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு” சொல்லிக்கொண்டே அவள் ஹாலில் நுழைந்தாள். ஹாலில் நடராஜனும், மல்லிகாவும் சுகன்யா வீட்டிற்கு கிளம்புவதற்காக தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

“ஹேய் நில்லுடீ… உனக்கு என்னடி தெரியும்” சுகன்யா எல்லாத்தையும் இவ கிட்ட சொல்லிட்டாளா? செல்வா உள்ளுக்குள் இலேசாகப் பதறிப்போனான்.

சுகன்யா என்கிட்ட எதையும் சொல்லலே. எனக்கு என்னத் தெரியும்ன்னு குதிக்கற செல்வாவை இப்ப எப்படி மடக்கறது? மீனாவின் முளை படு வேகமாக வேலைசெய்தது.

செல்வா போன மண்டே சாயந்திரம், வேணிக்கு அதிரசம் குடுக்கறேன்னு, சுகன்யா கூட, அவ வீட்டுக்குப் போனான். அவ்வளவு தூரம் போனவன், அம்மா சொன்ன வேலையை மட்டுமா செய்திருப்பான்?

செல்வா சந்தேகமேயில்லாம, சுகன்யா கூட அவ ரூமுக்கும் போயிருப்பான். அப்பதான் இவங்க ரெண்டு பேருக்குள்ள எதாவது டென்ஷன் ஆகியிருக்கணும். சுகன்யா வீட்டுலேருந்து செல்வா திரும்பி வரும் போதே எரிச்சலோடத்தான் வந்தான்.

அம்மா கேட்ட எந்தக் கேள்விக்கும் இவன் ஒழுங்கா பதில் சொல்லலை. நானும் பாக்கறேன் அன்னையிலேருந்துதான் அய்யாவோட மூடும் சரியில்லை. ஒண்ணும் ஓண்ணும் ரெண்டு.

சுகன்யா போன் பண்ணாலும் அவகிட்டவும் இவன் பேசறது இல்லே. அவ காலை பட்டு பட்டுன்னு கட் பண்றான். சுகன்யா என்னடான்னா, என்னை ஏண்டா இப்படி அழவெக்கறேன்னு ரொம்பவே எமோஷனலா பேசறா..!! தூண்டித் துருவிக்கேட்டா அழுதுடுவா போல இருக்கு. ரெண்டும் ரெண்டும் நாலு.

செல்வாதான் எதாவது சுகன்யாகிட்ட தேவையே இல்லாம, கூத்தடிச்சிருப்பான்… ஸோ… இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ பிரச்சனை இருக்குங்கறது நிச்சயமாகிப் போச்சு. இவனை கொஞ்சம் எடக்கு மடக்கா இப்படி டீல் பண்ணாத்தான், இவன் அவகிட்ட பேசுவான். இவன் அவ கிட்ட சிரிச்சிப் பேசினாத்தான், நாளைக்கு சுகன்யா சிரிச்ச முகத்தோட இங்க வருவா.

இவனை இப்ப கொஞ்சம் நோண்டித்தான் பாக்கிறேனே? சுகன்யா இவனுக்கு பொண்டாட்டின்னா, எனக்கு அண்ணி. என் அண்ணியை இவன் எதுக்கு அழவெக்கணும். ஏற்கனவே ஒரு வாரம் ஆகிப் போச்சு. இதுக்கும் மேலே என்னாலப் பொறுத்திருக்க முடியாது. நாளைக்கு சுகன்யா இங்க வந்து, அவ விஷயத்தைச் சொல்றதுக்குள்ள, எனக்குத் தலை வெடிச்சிப் போயிடும். எதாவது ஒரு பிட்டைப் போட்டு பாக்கலாமே…? செல்வா மாட்டாமலா போயிடுவான். மீனா தன் மனதுக்குள் முடிவெடுத்தாள்.

“உன் கதை எல்லாம் எனக்குத் தெரியும்… சுகன்யா எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா” தனக்கு விஷயமே தெரியாமல் இருந்த போதிலும் மீனா சகட்டுமேனிக்கு செல்வாவைப் போட்டுத் தள்ள ஆரம்பித்தாள்.

“திரும்ப திரும்ப பேசற நீ..? உனக்கு என்னத் தெரியும்ன்னுதான் நானும் கேக்கிறேன்.” செல்வாவுக்கு நிஜமாகவே எரிச்சல் கிளம்பியது. அவன் மனதும் வேகமாக வேலை செய்தது.

ஒரு வாரமா நானும் பெரிய புடுங்கல் மாதிரி சுகன்யா கிட்ட முறுக்கிக்கிட்டு இருந்துட்டேன். என்னமோ அவளை அழவெச்சுப் பாக்கணும்ன்னு என் மனசுக்குள்ள ஒரு ஆசை அன்னைக்கு வந்திடிச்சி. பாவம் நிஜமாவே அவளுக்கு நல்ல மனசு இருக்கவேதானே, என் நெத்தியில அவ்வளவு அக்கறையா விபூதியைக் கொண்டாந்து பூசினா..! என்னை அவ வெறுப்பேத்தினாங்கறதுக்காக பதிலுக்கு அவளை நான் பேசாமலே இருந்து வெறுப்பேத்தணும்ன்னு இருந்துட்டேன்.