கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“உன் சந்தேகம் சரிதான்டீ… செல்வா எங்கிட்ட கோவமா இருக்கார்…” சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.

“என்னப்பா சுகா… என்ன விஷயம்…? எங்கிட்ட சொல்லக்கூடாதா? நான் என்னன்னு கேட்டிருப்பேன்ல்லா அவனை.” மீனா உரிமையும், ஆதரவுமாக பேசினாள்.

“மீனா.. ப்ளீஸ்… நீ ஒண்ணும் அவரைக் கேட்டுடாதே? உன் கிட்ட சொல்ல எனக்கு மனசு துடிக்குதுடீ… ஆனா நீ செல்வாவோட தங்கை… என் வருங்கால நாத்தானார்… அதனால உன் கிட்ட எங்கப் பிரச்சனையைச் சொல்லவும் கொஞ்சம் தயக்கமா இருக்குடி…”

“சுகன்யா… நீ ஒரு மேட்டரை நல்லாப் புரிஞ்சுக்கோ. உன் கல்யாணத்தால, நமக்குள்ள ஏற்படப்போற சொந்தத்தை விட, நம்மோட ஃப்ரெண்ட்ஷிப்பைத்தான் நான் அதிகமாக மதிக்கிறேன். உன்னை என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டா நான் நினைக்கிறேன்… நான் உன் ஃப்ரெண்டுடீ… இதை எப்படி நீ மறக்கலாம். நீ அழறதை என்னாலப் பொறுத்துக்க முடியாது… மொதல்லே நீ விஷயத்தைச் சொல்லு…”

“நான் இதைப் போன்ல பேசவேணாம்ன்னு பாக்கறேன்… மீனா… நாளைக்கு நாம எங்கேயாவது தனியா மீட் பண்ணலாமா? இல்லேன்னா என் வீட்டுக்கு வாயேன் நீ..”

“நான் உன் வீட்டுக்கு நாளைக்கு வரமுடியாது… நீ தான் என் வீட்டுக்கு வரணும்..” மீனா குறும்பாகச்சிரித்தாள்.

“ஏண்டீ இப்படி மொக்கைப் போடறே நீ?”

“சுகா.. நாளைக்கு நாம கண்டிப்பா மீட் பண்ணத்தான் போறோம்… இன் ஃபேக்ட்.. உன்னை எங்க வீட்டுக்கு இன்வைட் பண்றதுக்குத்தான் நான் இப்ப போன் பண்ணேன். அப்பாவும் ஈவினிங் உங்க வீட்டுக்கு வர்றதா இருக்கார். நீங்க எல்லாரும் நாளைக்கு எங்க வீட்டுக்கு வரணும்…”

“என்ன விஷயம்டீ?”

“ஒரு குட் நீயூஸ்… எனக்கு வேலை கிடைச்சுடிச்சு சுகா… அதுவும் சென்னையிலேயே போஸ்டிங் குடுத்திருக்காங்க. காலையிலத்தான் எனக்கு மெயில் வந்தது… எனக்கு எக்ஸாம் முடிஞ்ச மறுநாளே நான் வேலையில ஜாய்ன் பண்ணணும்…”

“கங்கிராட்ஸ்டீ மீனா…”

“தேங்க் யூ… தென்… எனக்கு நாளைக்கு பர்த் டே…”

“அட்வான்ஸ்ல உனக்கு
“ஹேப்பி பர்த் டே டு யூ” மீனா.. அயாம் வெரி வெரி ஹாப்பிடீ…”

“தேங்க் யூ சுகா..”

“அப்புறம்… சீனு வீட்டுலேருந்து நாளைக்கு என்னைப் ஃபார்மலா பொண்ணு பார்க்க வர்றாங்க…”

“வெரி வெரி நைஸ்… கண்டிப்பா இதெல்லாத்துக்குமா சேர்த்து நீ ஒரு க்ரேண்ட் பார்ட்டி குடுத்தே ஆகணும்..”

“யெஸ்… யெஸ்… கண்டிப்பா நான் முதல் சேலரி வாங்கினதும் உனக்கு மட்டும் ஒரு தனியா பார்ட்டி குடுப்பேன். நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு எங்க வீட்டுல ஒரு சின்னப் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கோம். நம்ம மூணு குடும்பமும் ஒண்ணா உக்காந்து டிஃபன் சாப்பிடலாம்ன்னு என் பேரண்ட்ஸ் நினைக்கிறாங்க. இது என் தரப்புலேருந்து என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு ஸ்பெஷல் இன்விடேஷன்.” மீனா கலகலவென சிரித்தாள்.

“மீனு… நீ சொன்ன எல்லாமே சந்தோஷமான விஷயம்டீ… நிச்சயமா அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியோட நான் வந்துடறேன்…”

“மீனு”னு மட்டும் நீ கூட என்னைக் கூப்பிடக்கூடாது..! திஸ் ஈஸ் மை ரிக்வெஸ்ட்..”

“ஏண்டீ..?”

“சீனு மட்டும்தான் என்னை அப்படி கூப்பிடாலம்.. தட் ஈஸ் ஒன்லி ஃபார் மை சீனு..” மீனா வெட்கத்துடன் முனகினாள்.

“சாரிடிம்மா… இனிமே அப்படி கூப்பிடமாட்டேன்… இந்த மேட்டருக்குன்னே சீனு கிட்ட ஒரு பார்ட்டி வாங்கிடறேன்..” சுகன்யாவும் குஷியாக சிரித்தாள்.

“அவனாவது… பார்ட்டி குடுக்கறதாவது… அவன் பார்ட்டி அட்டண்ட் பண்ற ஆளுடீ… நீ இன்னும் அவனை சரியா புரிஞ்சுக்கலே… நாளைக்கு வரேல்லா… எல்லாத்தையும் நான் உனக்கு வில்லாவரியா சொல்றேன்..”

“ம்ம்ம்..”

“ஒரு பத்து நாளைக்கு முன்னாடீ, சீனுவை, சீனுவோட குடிகார ஃப்ரெண்ட் ஒருத்தன் – கோழி மிதிக்கலாம் வான்னு கூப்பிட்டான்.. இரண்டு பேருக்கும் சேர்த்து, சரியான ஆப்பு ஒண்ணு வெச்சேன்… சீனுவுக்கு இப்ப என்னைப் பாத்தாலே செமை மெர்சல்தான்…” மீனா ஹோவென இரைந்து சிரித்தாள்.