கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“பிலிம்.. கேமரா இதெல்லாம் எதுவும் எங்கிட்ட இல்லே.. நான் விக்கறதும் இல்லே… வாங்கறதும் இல்லே… இது ஐடி டிவிஷன்.. என் பேரு தமிழ்செல்வன், இங்கே ஸிஸ்டம் அனலிஸ்டா இருக்கேன்..”

“ஐ சீ…”

“நான் யாரையும் பாக்க விரும்பலே… யார்கிட்ட பேசணூம்? உங்களுக்கு ராங் நம்பர் கிடைச்சிட்டுதுன்னு நினைக்கிறேன்…”

“பிளீஸ்… செல்வா… நான் சுகன்யா பேசறேன்.. நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளு… அயாம் சாரிடாச் செல்லம்.. உங்கிட்ட அன்னைக்கு நான் கொஞ்சம் கோவமா பேசியிருக்கலாம்… ரெண்டு நாளா அதுக்காக நான் ரொம்பவே ஃபீல் பண்றேன்பா..” சுகன்யா தன் குரலைத் தழைத்துக்கொண்டு பேசினாள்.

“ம்ம்ம்… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீங்க சொல்ல நினைக்கறதை சட்டுன்னு.. சுருக்கமா சொல்லிட்டா நல்லாயிருக்கும்…”

“அப்டி என்ன பெரிய பிஸி நீ… ஹும்ம்.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா? எதாவது நெட்ல இங்கிலீஷ் படம் பாத்துக்கிட்டு இருப்பே… இன்னொரு டேப்ல ஆஃபீஸ் வேலையைத் தொறந்து வெச்சிக்கிட்டு இருப்பே… ஒரு ரெண்டு நிமிஷம் எழுந்து வந்தா கொறைஞ்சிப் போயிடுவியா… கேண்டீனுக்கு வா.. மொத்தமா அங்கே வெச்சிக்கறேன் உனக்கு…” சுகன்யா குரலைத் தாழ்த்திக்கொண்டு கொஞ்சினாள்.

“யூ ஆர் ரைட் மேடம்.. என்னை யாரும் வெச்சிக்கல்லாம் வேண்டாம்… உங்களுக்கு என்னைப்பத்தி முழுசா தெரியாது… நீங்க இன்னும் என்னைச் சரியாப் புரிஞ்சிக்கல… அயாம் சாரி டு சே திஸ்… நான் இப்ப கொஞ்சம் பிஸி… டிரை டு அண்டர்ஸ்டேண்ட் திஸ்..” செல்வா நறுக்கென பேசிவிட்டு லைனை கட் பண்ணிணான்.

சுகன்யாவின் மனதில் மெல்ல மெல்ல அவளுடைய பிடிவாதம் என்னும் குட்டி பூதம் தூக்கத்திலிருந்து எழுந்தது. தன் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்தது.
சுகன்யா செல்வாவின் இண்டர்காம் நம்பரை மீண்டும் ஒரு முறை அழுத்தினாள். இம்முறை அவள் காலை செல்வா எடுக்கவில்லை. அவனுடைய அஸிஸ்டண்ட் ராஜாராமன் எடுத்தான்..

“ராஜூ… நான் சுகன்யா பேசறேன்.. ஒரு செகண்ட் செல்வா கிட்ட ரிஸிவரை குடுங்களேன்…”

“சார்.. உங்களுக்கு போன்.” ராஜாராம் ரிஸீவரை செல்வாவின் டேபிள் மீது வைத்துவிட்டு இருக்கவேண்டும்.. அவன் பேசுவது சுகன்யாவுக்கு தெளிவாககேட்டது.

ரெண்டு பேரும் ஒரே வயதுதான். நண்பர்கள்தான். ஆனால் செல்வா தன் சீட்டில் உட்கார்ந்திருந்தால், ராஜூ அவனை