கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

பால்கனி வழியாக அரை நிமிடத்திற்கு ஒருமுறை, வீட்டுக்கு எதிரிலிருந்து, பார்க்கில் வானுயர நின்று கொண்டிருந்த வேப்பமரமொன்று அவ்வப்போது தன் சோம்பலை முறித்ததால் உண்டான குளிர்ந்த காற்று, அவன் உடலை மெல்லத் தழுவிக்கொண்டிருந்தது.

தன்னை கபடதாரி, வேஷதாரி, பொய்யன், முரடன் என சுகன்யா அடுக்கடுக்காக தன் மேல் குற்றம் சாட்டியதாலும், அந்த குற்றச்சாட்டில் பொதிந்திருந்த, தன்னால் மறுக்க முடியாத ஒரு சிறிய உண்மை, அவன் மனதை குத்திக்கிளறியதாலும், உண்டான வெட்க்கத்தில் அவன் தலை குனிந்திருந்தது.

ரெண்டு நிமிடங்களுக்குப்பிறகு மனதின் கனத்தை, அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையை சகித்துக்கொள்ள முடியாமல், செல்வா தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்தே தன் தலையை உயர்த்தி, கட்டிலின் மீது அமர்ந்திருந்த சுகன்யா இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாளா, என்ற ஐயத்தில் தன் பார்வையை அறைக்குள் தயக்கமாக வீசினான்.

என்னதான் ஏமாத்தம் என் மனசுக்குள்ள இருந்தாலும், தன் மீது உயிரையே வைத்திருக்கும் சுகன்யாவிடம், தன் ஆசை நிறைவேறாத வெறுப்பில், அவள் பேசிய பேச்சில் இருந்த நியாயத்தை பொறுத்துக்கொள்ளமுடியாமல், ஆணுக்கே உரிய தன் முரட்டுத்தனத்தை, அவளிடம் காட்டிவிட்டதற்காக அவன் உள்ளூர வருந்தினான்.

தப்பு என்னுது… என்னமோ தகராறு நடந்து போச்சு… எழுந்து போய் சாரி’ன்னு அவகிட்ட ஒரு வார்த்தை சொன்னா நான் என்னக் கொறைஞ்சா போயிடுவேன்..? இந்த எண்ணம் அவன் மனதின் ஒரு மூலையில் கிளம்பியதும், அவன் சேரிலிருந்து மெல்ல எழுந்தான்.

சுகன்யா, விரிந்து கிடந்த தன் கூந்தலை சீராக்கிக்கொண்டு, கட்டிலின் மீது கிடந்த தன் அழுக்கு நைட்டியை உதறி, அறையின் மூலையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையில் எடுத்து வீசினாள்.

படுக்கையின் மேல் தாறுமாறாகக் கிடந்த பெட்ஷீட்டை உதறி சரியாக விரித்தாள். தரையில் சிதறிக்கிடந்த தலையணைகளை தட்டி சரியாக அதனிடத்தில் வைத்தாள்.

தன் வாய்க்குள்ளேயே எதையோ அவள் முணுமுணுத்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைவது செல்வாவின் பார்வையில் பட்டது. ரெண்டே நிமிடங்களில் சுகன்யா தன் முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

செல்வா, சற்று நேரத்துக்கு முன், தன் முகத்தை துடைத்துவிட்டு, சோஃபாவின் மேல் வீசியிருந்த அதே துண்டால், தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு, சாமி மாடத்தின் முன் இருந்த விளக்கை ஏற்றினாள். கண் மூடி, தன் கைகளை கூப்பி, ஒரு நிமிடம் சாமிப்படங்களின் முன் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

குங்கும சிமிழியிலிருந்து ஒரு விரலால், சிவப்பு நிற குங்குமத்தை, தன் புருவ நெற்றியில் அழுத்திக்கொண்டாள். தன் பார்வையை, தலை குனிந்து நாற்காலியில் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி வீசினாள்.

சம்புடத்திலிருந்து ஒரு சிட்டிகை விபூதியை எடுத்துவந்து, அவன் முகத்தை தன் கையால் உயர்த்தி, அவன் நெற்றியில் தீட்டினாள். விழிகளில் கனிவுடன், உதட்டில் சிறிய புன்னகையுடன், செல்வாவின் முகத்தை தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள்.

சுகன்யாவின் அந்த ஒரு செயலில், அவள் தன் மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை உணர்ந்ததும், செல்வா உள்ளுக்குள் முழுவதுமாக உடைந்தான். அதற்கு மேல் அவள் எதிரில் இருந்தால், தான் அழுதுவிடுவோமோ என்னும் அச்சத்தில், அவள் மார்பிலிருந்து தன் முகத்தை சட்டென விலக்கிக்கொண்டான். நாற்காலியைவிட்டு சடாரென எழுந்தான்.

‘நான் போறேன்..’ மேஜை மேல் கிடந்த தன் பையை விருட்டென எடுத்துக்கொண்டவன், அவள் முகத்தைப் பார்க்காமல் முனகினான். அவள் பதிலுக்கு காத்திராமல் வேகமாக அறையை விட்டு நடக்க ஆரம்பித்தான்.

“செல்வா.. ப்ளீஸ்.. எப்பவும் போறேன்னு எங்கிட்ட மொட்டையா சொல்லாதப்பா… இப்படி சொல்லி என் மனசை கஷ்டப்படுத்தாதே… போய்வரேன்னு சொல்லுப்பா…” சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. அவள் தலை குனிந்திருந்தது.

சுகன்யா தன் தலையை நிமிர்ந்தபோது செல்வா மாடியிலிருந்து இறங்கி தெருவுக்குப் போய்விட்டிருந்தான்… சுகன்யா பால்கனிக்கு வந்தாள். செல்வா தன் பைக்கை வலுவாக உதைத்துக்கிளப்பிக்கொண்டிருந்தான்.

செல்வா, பால்கனியில் நிற்கும் தன்னை நிச்சயமாக ஒருதரம் திரும்பிப்பார்ப்பான் என சுகன்யா நினைத்தாள். அப்படி அவன் அவளைப் பார்க்கவேண்டும் என தன் மனதில் எப்போதும் இருக்கும், அம்பாளை மனமார வேண்டினாள்.

செல்வா, அவள் எதிர்பார்த்தபடி, மாடி பால்கனியின் பக்கம் திரும்பிப்பார்க்கவில்லை. அவனுடைய பைக் பார்க்கை கடந்து, தெரு கோடி முனையை அடைந்ததும், வலது புறம் திரும்பி கண்பார்வையிலிருந்து மறைந்தது.

சுகன்யா விசும்பிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.
அடியே சுகன்யா… எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்து இருக்கப்போறே? பேச்சைக் குறைடீன்னு உன் அம்மா உன் கிட்ட எத்தனைத் தடவை சொல்லியிருக்கா? ஏன் இப்படி பேசியே தீருவேன்னு பிடிவாதம் பிடிக்கறே?

“நான் பேசலைன்னா என் மனசுல இருக்கறது அவனுக்கு எப்படித் தெரியும்…?”

“பேசலாம்… நீ பேசலாம்.. எல்லாத்துக்கும் ஒரு நேரம்.. காலம் இருக்கு.. பெரியவங்க கொஞ்சம் பொறுமையா இருன்னுதானே சொல்றாங்க… நீ சொல்ல நினைக்கறதை சரியான நேரத்துல சொல்லு…”