கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“…”

சுகன்யா தன் புறங்கையால் இருவிழிகளையும் துடைத்துக்கொண்டு, தன் மூக்கை உறிஞ்சினாள்.

“எதையும் வாயை விட்டு சொல்லித் தொலைக்காம ஏன்டீ இப்படி என்னை வதைக்கறே?”

என் கெட்ட நேரம் இவ அப்பன் குமாரசாமி இப்ப வந்துட்டான்னா நான் மொத்தமா ஒழிஞ்சேன்.. சனியன் புடிச்சவ என் கேள்விக்கு பதில் சொல்லாம எதுக்காக இப்படி நாடகம் ஆடிகிட்டு இருக்கா… சுகன்யா குலுங்கி குலுங்கி அழுவதைக் கண்டதும், அவள் அழுகை செல்வாவின் பயத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

“எதுக்குடா நீ மொரட்டுத்தனமா என் தலையை சொவத்துல முட்டினே?”

“நம்ம ரெண்டு பேரு பிரச்சனையில நீ எதுக்காக என் அம்மாவை இழுக்கறே?”

“நான் வாயை மூடிக்கிட்டு சும்மாத்தானே இருந்தேன்.. நீ தானே கிண்டிக் கிண்டிக்கேட்டே.. யாருக்கு பயப்படறே… யாருக்குப் பயப்படறேன்னு… இப்ப உண்மையைச் சொன்னா உனக்கு அடியில எரியுதா?” சுகன்யாவின் குரலிலும் சூடு ஏற ஆரம்பித்தது.

“தயவுசெய்து… நீ என் அம்மாவைப் பத்தி மட்டும் எதுவும் பேசாதே?”

“ஸோ… நான் உன் அம்மாவைப் பத்தி, எதிர்காலத்துல எது சொன்னாலும், எதைப்பேசினாலும், நான் உங்கிட்ட இப்படித்தான் அடிபடணுமா?”

“சுகன்யா… இன்னைக்கு நீ நிஜமாவே என் கிட்ட சண்டை போடணுங்கற மூடுல இருக்கேன்னு நினைக்கிறேன்… இங்கே நடந்ததை விட்டுட்டு, அதுக்கு மாத்தி மாத்தி வேற கலர் குடுக்கறே?”

“நீ கேட்டக் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்… நான் உன் கிட்ட சண்டை போட நினைக்கலே… என் மனசுல இருக்கறதை தெளிவா சொல்ல விரும்பறேன்… என் கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியலேன்னா பேசாம இரு… ஆனா தயவு செய்து நீயும் பேச்சைத் திசை திருப்பாதே..”

“மேடம்… நான் என் வாயைப் பொத்திக்கறேன் மேடம்… நீங்க உங்க மனசுல இருக்கறதை மொத்தமா சொல்லி முடிக்கற வரைக்கும் நான் குறுக்கே பேசமாட்டேன் மேடம்..” செல்வா குதர்க்கமாக பேச ஆரம்பித்தான்.

“செல்வா.. நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்க… உன் அம்மாவை நான் என் சொந்த அம்மாவாத்தான் பாக்கறேன்… அவங்களை நான் வேத்து மனுஷியா எப்பவுமே நினைக்கலை… அவங்களை நான் என் குடும்பத்துல ஒரு அங்கமா பாக்கறேன்… அவங்க எனக்கு நல்லதைத்தான் சொல்றாங்கன்னு நான் நினைக்கறேன்.”

“…”

“மல்லிகா அத்தை என்னை ஒரு தரம் குறைச்சு பேசினாங்கன்னு… அதுக்காக நான் எப்பவுமே வருத்தப்படலே… அப்ப நமக்கு நிச்சயதார்த்தம் கூட ஆகலே… நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நாம ரெண்டுபேரும், நெருக்கமா, கொஞ்சம் அந்தரங்கமா, ஒரு நாள் இதே ரூம்ல இருந்ததை, அவங்க தப்புன்னு நினைக்கறாங்க…”