கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“திருப்பியும் நீ மொதல்லேருந்து ஆரம்பிக்கறியா?”

“சொல்றதை கேளு.. குறுக்கே பேசாதே… உன் அம்மா தன்னோட மனசுல, தனக்கு மருமகளா வரப்போறவ இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு தனிப்பட்ட கருத்தை, ஒரு மதிப்பீட்டை வெச்சிருக்காங்க… அது தப்புண்ணும் நான் சொல்லலை. அது அவங்களோட உரிமை…”

“ம்ம்ம்… அப்புறம்..”

“உன் குடும்பத்துல நுழையப்போற நான், அவங்களோட மதிப்பீட்டுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க முடியலியேன்னு நான் வருத்தப்படறேன்… அவங்க மனசு புண்படற மாதிரி நான் ஒரு தரம் நடந்துட்டேனேன்னு நான் என் மனசுக்குள்ள கூனிக் குறுகிப் போறேன்.”

அவள் பேசுவதில் இருக்கும் அர்த்தம் மனசுக்குள் ஏற ஏற செல்வா தன் வாயைமூடிக்கொண்டான்.

“இப்ப உனக்கும் எனக்கும் நிச்சயம் ஆயிடிச்சி… அதனால தனிமையில, கொஞ்சம் ஃபீரியா உன் கூட இருக்கறதுல எந்த தவறு இல்லேன்னு நான் நெனைச்சேன் பாரு… அதுக்கு என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும்..”

“அடிச்சுக்கடி.. நல்லா அடிச்சுக்க… சும்மா சீன் காட்டறே நீ” செல்வா குமுறினான்.

“என் தலையெழுத்து உன்னை காதலிச்சி கட்டிக்கணும்ன்னு நெனைச்சேன் பாரு… இனிமே, இதுக்கு மேல நான் அதைத்தான் தினம் பண்ணிக்கணும்..”

“….”

“என் மனசுக்குள்ள இருக்கற ஆசைகளை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்க முடியாம, எங்கே இன்னொரு தரம் என் அத்தைக்கு பிடிக்காத மாதிரி, நீ சொல்ற அந்த
“மேட்டர்’ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நடந்துடவேணாமேன்னு நான் பயப்படறேன்..”

“என் மனசுல இருக்கற இந்த பயத்தை உன்னாலப் புரிஞ்சிக்க முடியலே… இதை புரிஞ்சுக்காம, என் தலையை புடிச்சி சுவத்துல இடிக்கறே நீ? இது உனக்கு சரின்னு தோணிச்சின்னா இன்னும் நாலு தரம் என் தலயைச் சுவத்துல மோதுடா..

“வீணா நீ என் மேல பழி போடாதேடி… நான் உன்னை என் மேலேருந்து நகத்தினேன்… நீயா தடுமாறி சுவத்துல போய் முட்டிக்கிட்டே… அவ்வளவுதான்..

“டேய்… புளுவாதே நீ… என் கழுத்துல தாலி கட்டறதுக்கு முன்னாடியே, நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா ஆகறதுக்கு முன்னாடியே, நான் உன் காதலியா இருக்கும்போதே எங்கிட்ட இவ்வளவு முரட்டுத்தனமா நடந்துக்கிறியே? இது உனக்கு அடுக்குமாடா?”

“சுகன்யா… போதும்.. நிறுத்துடீ..”

“என் அப்பா, என் அம்மாவை, தன்னோட பொண்டாட்டிங்கற ஒரே காரணத்துக்காக, குடிச்சுட்டு வந்து, தான் செய்யறதை தப்புன்னு உணராம, அவங்களை அடிச்சதை, ஒதைச்சதை, அவங்ககிட்ட முரட்டுத்தனமா நடந்துகிட்டதை, சின்னவயசுல பாத்து பாத்து என் மனசுக்குள்ள, ஆம்பிளைகளேயே வெறுத்தவடா நான்…”

“இப்ப எதுக்கும் எதுக்கும் முடிச்சிப்போடறடீ நீ… ப்ளீஸ் சுகன்யா.. போதும்மா.. நீ பேசறதை நிறுத்துடி…” செல்வா கெஞ்ச ஆரம்பித்தான். அவளை நோக்கி தன் கைகளை கூப்பினான்.

“என் அப்பாவாவது குடிச்சுட்டு, தன் புத்தியை இழந்ததுக்கு அப்புறமாத்தான் என் அம்மாகிட்ட தப்பா நடந்துகிட்டாரு… ஆனா நீ… நீ இன்னைக்கு உன் சுயநினைவோடத்தான் இருக்கே? அதுக்கு அப்புறமும் என் தலையைப்புடிச்சி சுவத்துலே இடிக்கறே..”

“நாளைக்கு முழுசா ஒரு உரிமை, ஒரு சொந்தம் என் மேல உனக்கு கிடைச்சிட்டா, உன் குடும்பத்துல ஒருத்தியான நான், என்னைக்காவது, எந்த விஷயத்திலாவது உன் அம்மாவைப் பத்தி என் கருத்தைச் சொன்னா, உனக்கு அது சரின்னு தோணலன்னா, என் நிலைமை என்ன ஆகும்ன்னு நான் இப்பவே பயப்படறேன்…” சுகன்யா மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.
செல்வாவின் முகம் முற்றிலுமாக வெளிறிப்போனது. மேற்கொண்டு அந்த நேரத்தில் சுகன்யாவிடம் ஏதும் பேசாமல் வீட்டுக்குப்போய்விடலாமென டேபிளின் மேல் கிடந்த தன் தோள்பையை எடுத்தவன், ஏதோ நினைத்துக்கொண்டவனாக, கையில் எடுத்தப் பையை மீண்டும் டேபிளின் மேலேயே வீசிவிட்டு, பால்கனிக்கு சென்று, அறையின் வாசலுக்கு நேராக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தெருவை நோக்கத் தொடங்கினான்