கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

சுந்தரியும், அவருடைய பெற்றோர்களும் சென்னைக்கு அந்த வார இறுதியிலேயே வந்துவிட்டார்கள். சுகன்யாவும், மாணிக்கத்தின் வீட்டையும், வேணியையும் கொஞ்சமும் பிரிய மனமில்லாமல், மனதில் சிறிது வருத்தத்துடனேயே, தன் சாமான்களை எடுத்துக்கொண்டு புது வீட்டிற்கு வந்து சேர்ந்து ஒரு வாரமாகியிருந்தது.

சனிக்கிழமையன்று லஞ்சுக்குப்பின்னர் பாட்டியுடன் பேசிக்கொண்டே, சுகன்யா தன் சாமான்களை மாடியறையில் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தபோது, அவளுடைய செல் சிணுங்க, அதில் செல்வாவின் நம்பர் மின்ன, மனதுக்குள் சட்டென பொங்கிய சந்தோஷத்துடன், பால்கனியில் வந்து நின்றுகொண்டு, மெல்லியக்குரலில் பேச ஆரம்பித்தாள் அவள்.

“செல்வா, என் மேல உனக்கிருக்கற கோபம் ஒரு வழியாத் தீந்துதா…?

“…”

“இல்லே இவ உயிரோடத்தான் இருக்கறளா இல்லையா… இதைத் தெரிஞ்சுக்கலாம்னு போன் பண்ணியா? இப்படி என்னை அழ வைக்கறதுல உனக்கு என்னப்பா சந்தோஷம்?”

செல்வா ஒருவாரமாக அவளுடன் பிடிவாதமாக பேசாமல் இருந்ததால், மனதில் உண்டாகியிருந்த ஏக்கமும், ஆற்றாமையும் ஒரு புறம் அவளை தீவிரமாக அழுத்த, மறுபுறத்தில் கடைசியில் தன்னை செல்லில் அவன் கூப்பிட்டுவிட்டான் என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் சிணுங்கினாள் சுகன்யா.

“…”

“பேசுடா.. செல்வா… உன் மேல எந்தத் தப்பும் இல்லேன்னு நீ நினைக்கறே. நான் அதையும் சரின்னு ஒத்துக்கறேன். அன்னைக்கு என் ரூம்ல நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீ நினைச்சா, அதுக்கு நான் திரும்பவும் ஒரு தரம் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்… செல்வா ரியலி அயாம் சாரி…”

“…”

“எத்தனைத்தரம் நான் உனக்கு சாரி சொல்லணும்? நீ இப்படி பிஹேவ் பண்றது நிச்சயமா சரியில்லே… எங்கிட்ட பேசறதுக்கு உனக்கு இவ்வளவு தயக்கமா?

“…”

சுகன்யாவுக்கு திடுமென சந்தேகம் வந்தது அடுத்தமுனையில் இருப்பது செல்வாதானா? இல்லே வேறு யாராவது செல்வாவின் செல்லில் தன்னிடம் பேசவிரும்புகிறார்களா? யாருன்னு கேக்காமலே நான் பாட்டுக்கு அறிவில்லாம பேசிக்கிட்டேப் போறேன்?

“செல்வா.. நீதானே போன் பண்ணது?”

“சுகன்யா… நான் மீனா பேசறேன்… அயாம் சாரி… நான் நெனைச்சது சரியாத்தான் இருக்கு..”

“நீயாடீ மீனா..? நல்லதாப் போச்சு.. உங்கிட்டத்தானே நான் உளறியிருக்கேன்… இதுவே உன் பேரண்ட்ஸா இருந்திருந்தா நான் செத்தேன்…”

“ஏண்டீ இப்படீல்லாம் டிஜக்டடா பேசறே நீ?”

“நீ ஏண்டி செல்வா செல்லுலேருந்து என்னைக் கூப்பிடறே… உன் செல்லு என்னாச்சு… சரிடீ.. இப்ப என்ன சரியா இருக்குன்னு நீ சொல்றே?”

சுகன்யா பேசியது அவளுக்கே கேட்கவில்லை. ப்ச்ச்ச்.. எங்களுக்குள்ள இருக்கற சச்சரவு, மூணாவது ஆளா, இப்ப இவளுக்கும் தெரிஞ்சுப் போச்சு. தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் சுகன்யா.

“உனக்கும், செல்வாவுக்கும் நடுவுல திருப்பியும் எதாவது சண்டையா? உங்க பர்சனல் விஷயத்துல நான் தலையிடறேன்னு நினைச்சுக்காதே… எனக்கென்னமோ ஒரு வாரமாவே ஒரு சின்னச் சந்தேகம் இருந்தது. அதனாலத்தான் செல்வா போன்லே உன்னைக் கூப்பிட்டேன்…”

“நீ நினைக்கற மாதிரில்லாம் ஒண்ணுமில்லேடீ..”

“சுகா… நீ பொய் சொல்லாதே… உன் குரலே சொல்லுது… சம்திங்க் ஈஸ் ராங்… இந்த வாரத்துல மட்டும் நீ செல்வாவுக்கு இருபத்தெட்டு கால் பண்ணியிருக்கே. ஒரு நாளைக்கு உனக்கு பத்து கால் பண்ற செல்வா, ஒரு கால் கூட அவன் உனக்கு பண்ணவே இல்லே. உன் கால் வந்தா சட்டுன்னு கட் பண்றான் அவன். ஒரு வாரமா அவனும் மூஞ்சைத் தூக்கி வெச்சுக்கிட்டு வீட்டுல உர் உர்னு இருக்கான். நான் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். உண்மையைச் சொல்லு. என்ன நடக்குது உங்களுக்குள்ளே?”