கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“சரியான நேரங்கறது என்ன?”

“அதை நீங்க ரெண்டுபேரும்தான் டிசைட் பண்ணணும்… அவன் கூட பழக பழகத்தான் கொஞ்சம் கொஞ்சமா அவன் குணம் உனக்குப் புரியவரும்… இன்னைக்கு வரைக்கும் அவன் இப்படி ஒரு அழிச்சாட்டியம் பண்ணுவான்னு எதிர்பார்த்திருக்கியா? ஒரே நாள்லே ரோம் உண்டாயிடலடீ.. உன் ஆம்பளையை நீ கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுக்க முடியும்.

“வேணி சொன்னமாதிரி.. நான்தானே என்னை பாதுகாத்துக்கணும்..?”

“சந்தேகமேயில்லை… உன்னை நீதான் பாதுகாத்துக்கணும்… நீ சொல்ல நினைச்சதை அவன் கிட்ட நீ சொல்லிட்டேல்லா… அப்புறம் ஏன் விசும்பிக்கிட்டு இருக்கே… அவனைப்பத்திதான் உனக்கு தெரியுமில்லே… அதிகபட்சம்… ரெண்டு நாள் இல்லேன்னா… மூணு நாள்… தன்னோட மூஞ்சைத் தூக்கி வெச்சுக்குவான்…”

“அதுக்கப்புறம் உங்கிட்டத்தான் வருவான்.. அவன் உன்னை விட்டுட்டு எங்கப் போயிடப்போறான்… ராத்திரி பத்து மணிக்கு மேலே ஒரு தரம் அவனுக்கு போன் பண்ணி
“சாரி” செல்வான்னு சொல்லிடு.. சட்டுன்னு எல்லாம் சரியாயிடும்…”

“நான் என்னத் தப்பு பண்ணேன்..? நான் எதுக்கு சாரி சொல்லணும்..? இன்னைக்கு நடந்த கூத்துக்கு அவன்தான் என்கிட்ட சாரி சொல்லணும்…?”

“ஏன்டீ… ஆம்பளை எப்பவும் தொட்டுப்பாக்க அவரசப்படுவான்… அடுப்புல கொதிக்கும் போதே அள்ளிக் திங்கணும்ன்னு துடிப்பான்… ஆக்கப் பொறுக்கறவன் ஆறப்பொறுக்க மாட்டான்.. பொம்பளைதான் கொஞ்சம் நீக்கு போக்கா இருக்கணும்ன்னு உனக்கு உன் பாட்டி கனகா சொன்னாளா… இல்லையா?”

“ஆமாம்… தானா பழுக்கற காயைக் கூட தடியால அடிச்சு பழுக்க வெக்கலாம்ன்னும், ஆம்பிளை அலைவான்னும் சொன்னாங்க…”

“உனக்கு எல்லாம் புரியுது இல்லே; அப்புறம் அவனை ஏன் உன் கூட இங்கே கூப்பிட்டுக்கிட்டு வந்தே?”

“அது என் தப்புதான்…”

“புரிஞ்சிக்கிட்டேல்லா… இனிமே அந்த தப்பை பண்ணாதே..”

“தேங்க்யூ….இனிமே பண்ணமாட்டேன்..”

“உன்கூடவே இருக்கற எனக்கெதுக்கு இந்த தேங்க்யூல்லாம்… நடந்தது நடந்து போச்சு… உன் அப்பா வர்ற நேரமாச்சு… இப்ப எழுந்து போய் சமையல் வேலையைப் பாருடி…” இடது வலது என பட்சபாதமில்லாமல், தனக்குள்ளாகவே வாதம் பண்ணியதும் சுகன்யாவின் மனது சிறிது தெளிவாகிவிட்டது.

இரவு சாப்பிட்டு முடித்ததும், இரண்டு மூன்று முறை, சுகன்யா செல்வாவை தொடர்பு கொள்ள முயற்சித்தாள். செல்வாவின் செல்லில் ரிங் போனது… போய்க்கொண்டே இருந்தது. வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்ற தகவலே அவளுக்கு தொடர்ந்து கிடைத்தது.