கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

அஞ்சு நாளாப் தொடர்ந்து அவளும் விடாம எனக்கு கால் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தா. ஒழுங்கு முறையா சாரிடீச் செல்லம்ன்னு சொல்லிட்டு, பீச்சுல விக்கற, அவளுக்குப் புடிச்ச வாழைக்கா பஜ்ஜியை ரெண்டு வாங்கி கையில குடுத்துட்டு, அவ திண்ணுக்கிட்டு இருக்கும் போதே, அவ எச்சை ஒதட்டுல, ரெண்டு கிஸ்ஸாவது அடிச்சிருக்கலாம். கொஞ்ச நேரம் கிக்காவது இருந்திருக்கும். நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கற கதைதான் என் கதை.

நேத்து நைட்டே பேசிடலாம்ன்னு பாத்தேன். அதுக்குள்ள அவ பண்ண கால் கட்டாயிடுச்சி. சத்தியக்கட்டுக்கு இன்னைக்கு காலையிலேருந்து சுகன்யா என்னைக் கூப்பிடவேயில்லை. இவ்வளவையும் இந்த கொரங்கு மீனா என்னை விடாம கீனா வாச் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா..! என் போன்லேருந்து அவகிட்ட பேசி அரைகுறையா எதையோ தெரிஞ்சுக்கிட்டு இப்ப நடுவுல பூந்து குட்டையைக் குழப்பறா?

அம்மாவும், அப்பாவும், நாளையப் பார்ட்டிக்கு எங்க சம்பந்தியை நேராப் போய் கூப்பிடப் போறேன்னு துள்ளி குதிச்சிக்கிட்டு திருவான்மியூருக்கு கிளம்புறாங்க. போற எடத்துல, என் அம்மா ரொம்ப பாசம் பொங்கிப்போய், வீட்டுக்கு வரப்போற மருமவளை, கண்ணு… எப்படி இருக்கேடீன்னு கேட்டு, பதிலுக்கு சுகன்யாவும், அத்தே, அத்தேன்னு, கொழையடிச்சி, எந்த சங்கையாவது எடுத்து ஏடாகூடாம, ஊதிட்டாள்ன்னா, மல்லிகா அம்மையார், வீட்டுக்கு வந்து என் கழுத்துல நிச்சயமா துண்டைப் போட்டு இறுக்கிடுவாங்க.

நிச்சயத்தார்த்ததுக்கு போனப்பவே நான் நோட் பண்ணேன். சுகன்யாவோட அம்மாவும் ரொம்ப ஷார்ப்பாத்தான் இருக்காங்க. அவங்க கண்ணுலேருந்து எதுவுமே தப்பலை. நாளைக்குப் பார்ட்டிக்கு சுகன்யா கண்டிப்பா வருவா. அவளும் ரோஷக்காரி. என் கிட்ட பேசாமத்தான் இருப்பா. அப்ப அவகிட்ட நான் மூஞ்சி குடுத்து பேசலன்னா, அவங்க அம்மாவும் சுகன்யாவை என்ன ஏதுன்னு, எதாவது கொடைச்சல் பண்ணிட்டாலும், நாலு பேரு நடுவுலேயே திருவாளர் நடராஜ முதலியார் என் மென்னியை முறுக்கிடுவார்.

எனக்கு இப்ப என்னப்பண்றதுன்னேப் புரியலை. கொரங்கு ஆப்பை அசைச்ச கதையா ஆயிடுச்சி என் கதை. பத்தாக்குறைக்கு இந்த மீனா வேற இப்ப எதுக்கு நடுவுல துள்ளி தொப்புன்னு குதிக்கறா?

“ஹேய்.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ பாட்டுல உள்ளேப் போய்கிட்டே இருக்கே?” தனக்கு பதில் எதுவும் சொல்லாமல் ஹாலுக்குள் நுழைய ஆரம்பித்த மீனாவின், பின்னலைப் பிடித்து இழுத்தான் செல்வா.

“எம்மா… என் பின்னலைப் புடிச்சி இழுக்கறாம்மா இவன்?” கூவினாள் மீனா.

“புள்ளைங்களா இதுங்க ரெண்டும்… ரெண்டுத்துக்கும் கல்யாணம் எதிர்ல நிக்குது… இன்னும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சி புடிச்சிக்கிட்டு மல்லடிக்குதுங்க.. நீ ஏண்டீ அவன் செல்லை எடுக்கறே?” மல்லிகா பதிலுக்கு தன் பெண்ணை நோக்கிக் கூவினாள்.

“உனக்கு ஃபுல் விஷயம் தெரியாதும்மா… இங்க வா நான் சொல்றேன்…” செல்வாவை நோக்கி கண்ணடித்தாள் அவள்.

“ப்ளீஸ்… பேசாம இருடீ..” செல்வா சட்டென அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டான்.

“அது..” சிரித்தாள் மீனா.

“என்னடி உன் நாட்டாமை தாங்கலே இங்கே?”

“ஒண்ணுமில்லம்மா… நீங்க ரெண்டு பேரும் போய்வாங்க… அண்ணணுக்கு காஃபி நான் போட்டுக்குடுக்கறேன்…” மீனா பவ்யமாக சிரித்தாள்.

“பாத்துகிட்டேல்லா… எதுக்குடீ நீ அவங்க பஞ்சாயத்துல மூக்கை நுழைக்கறே? அண்ணணும் தங்கச்சியும் அடிச்சிப்பாங்க கூடிப்பாங்க… கிளம்புடீ நீ…” மல்லிகா பின் தொடர நடராஜன் வேகமாக தெருவுக்கு நடந்து தன் கார் கதவைத் திறந்தார்.

***

“செல்வா… நீ சுகன்யா கிட்ட ஒழுங்கு முறையா சாரின்னு சொல்லிட்டு அவகிட்ட பேசிடு… எதுக்கு அவளை தேவையில்லாம அழுவ வெக்கறே நீ?” தன் அண்ணணிடம் காஃபி டம்ளரை நீட்டினாள் மீனா.

“அதெல்லாம் இருக்கட்டும்டீ… உன் கிட்ட அவ என்ன சொன்னா, அதை மொதல்லே ஒழுங்கா நீ சொல்லிடு…” மீனாவின் முகத்தை நேராகப்பார்த்தான் செல்வா.

“டேய் அண்ணா… வெக்கமாயில்லே உனக்கு… நான் உன் தங்கச்சிடா… என் கிட்ட கேக்கற கேள்வியா இது? திடிர் திடீர்ன்னு உன் புத்தி குருட்டுப்பூனை விட்டத்துல தாவுன கதையா பாயுது?

மூடின ரூமுக்குள்ள உனக்கும் உன் லவ்வருக்கும் நடுவுல நடந்த கூத்தை நான் உனக்கு ரிவைண்ட் பண்ணி ஓட்டிக்காட்டணுமா? உனக்கே இது ஓவராத் தெரியலே?”

மீனா அடித்த இந்த அடியில் செல்வா சுத்தமாக சுருண்டுவிட்டான். சுகன்யா மொத்தமாக போட்டுக்குடுத்துவிட்டாள் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான். மீனாவுக்கு என்னப் பதில் சொல்லுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதே மேல் என அவன் நினைத்தான். தன் கையிலிருந்த காஃபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தான்.