ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

” என் மாமா பொண்ணு நித்யா இருக்கா இல்ல..?”
என் முதலாளியின் மகள்..!
”ம்.. அவளுக்கு என்ன..?”
” இல்ல.. அவளப் பத்தி.. நீ என்ன நெனைக்கறே..?”
” ஏன்டா..?”
” சும்மா சொல்லேன்..?” என்று என்னைவே பார்த்தான்.
”ம்..! நல்ல பொண்ணுதான்..! ஏன் ஏதாவது பிரச்சினையா..?”
”அதெல்லாம்.. ஒன்னும் இல்ல.”
”அப்றம்… எதுக்கு கேக்ற..?”
”இல்ல.. அவள மேரேஜ் பண்ணிக்கலாம்னு.. ஒரு ஐடியா… இருக்கு..! அதான்.. உனக்கும் அவளப் பத்தி தெரியுமில்ல..? இப்ப நாம ஒரே பேமிலி மெம்பர்ஸ் ஆகிட்டோம்..! நீ சொல்லு.. பண்ணிக்கலாமா..?” என்று என்னைக் கேட்டான்.
ஒரு நிமிடம் நான் திகைத்துப் போனேன். சாதாரணமாகவே இவனுக்கும்.. அவளுக்கும் ஒத்துப் போகாது.! அது மட்டும் இல்லாமல் அவள் வேறு ஒருவனைக் காதலித்துக் கொண்டும் இருக்கிறாள்..! இது எப்படி சாத்தியமாகும்..?

என்னடா.. இது.. நீ மட்டும் எடுத்த முடிவா..?” என்று கேட்டேன்.
”இல்லடா..! வீட்லயும்.. எல்லாம் பேசிட்டாங்க…”
” என்ன பேசிட்டாங்க..?”
” எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்னு. ! அதுதான் நான் உன்னைக் கேக்கறேன்..! இந்த விசயம் இன்னும் என் தங்கச்சிக்கெல்லாம் தெரியாது..! உன்னக் கேட்டு அப்றம் அவகிட்ட பேசிக்கலாம்னு இருக்கேன்..? மொதல்ல உன்னோட அபிப்ராயம் என்னன்னு சொல்லு..?”
” இதுல உங்க மாமாக்கு.. ஓகேவா..?”
” ஆரம்பிச்சதே.. அவருதான்..”
” இந்த விசயம் நித்யாளுக்கு தெரியுமா..?”
” ம்ம்..!! தெரியும்னு நெனைக்கறேன்..!!”
”நீ.. பேசினியா.. அவகிட்ட. .?”
” ம்ம்..! நேத்து மாமா வீட்டுக்கு போயிருந்தேன். அவ இருந்தா..! சும்மா பொதுவா பேசிட்டு.. என்னை கட்டிக்கறியாடினு கேட்டேன்..” என்றான்.
”அதுக்கு.. அவ என்ன சொன்னா..?” நான் ஆவலானேன்.
”சிரிச்சிட்டே.. செரிடா..ன்ட்டு.. போய்ட்டா..” என்றான்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. எதற்கும் அவளுடன் பேசிவிடுவது நல்லது என்று தோன்றியது.
அவனிடம் “ஒரு நிமிசம்டா..” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போய்.. அங்கிருந்து நித்யாவுக்கு போன் செய்தேன்.
எடுத்து.. ”என்ன பிரதர்.. சவுக்கியமா..?” என்று கேட்டாள்.
” எனக்கெல்லாம் ஒரு குறையும் இல்ல..! நீ எப்படி இருக்க..?” என்று கேட்டேன்.
” ஃபைன்..! அப்றம்.. என்னண்ணா.. இந்த நேரத்துல கூப்ட்ருக்கீங்க..?”
”ஒரு ஸ்மால் டவுட்… நித்தி..”
”என்னண்ணா…?”
”குணாவுக்கும்.. உனக்கும் மேரேஜ் பிக்ஸாகுதாமே..?”
” யாருண்ணா.. சொன்னாங்க.? நிலாவா..?”
” அவ இல்ல.! குணாதான் சொன்னான்.!”
”ம்..ம்..! அ.. அண்ணா.. இ.இது.. அப்பாவும்.. அத்தையும் சேர்ந்து.. எடுத்த முடிவு..?”
” ஸோ…?”
”நான்.. ஒன்னும் சொல்லல..” என்றாள்.
திகைத்தேன்.
”ஏய்.. அப்ப.. உன் லவ்வு..?”
”அண்ணா… இதுபத்தி.. நானே உங்ககிட்ட பேசலாம்னு நெனச்சிட்டிருந்தேன்.. நல்லவேளையா.. நீங்களே கேட்டுட்டீங்க..! என் லவ் பத்தி.. அவன்ட்ட.. எதும் சொல்லல இல்ல…?”
”இப்பவரை சொல்லல…”
”தேங்க்ஸ்..! இனிமே சொல்லவும் வேண்டாம்..!!”
”அது சரி நித்தி..! இந்த கல்யாண விசயம்..?”
” நடக்கட்டும்ண்ணா..”
”ஏய்..! என்ன சொல்ற…?”

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.