ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”அன்னிக்கு தியேட்டர்ல வந்து உக்காந்துட்டு.. என்னால முடியாதுனு அழுதது.. யாராம்..? நானா…?” என்று கேட்டேன்.
”அ… அது.. அது என் தப்பில்ல..” என்று சமாளித்தாள்.
”அப்ப… என் தப்புன்றிங்களா…?”
மெல்லிய குரலில் ”ஆமா..” என்றாள்.
”ஏங்க.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா..?” என்று ஒரு வித எரிச்சலோடு கேட்டேன்.
”அன்னிக்கு மட்டும் நீங்க… அமைதியா படம் பாத்துருந்தா… நான் அப்படி சொல்லவேண்டிய அவசியமே வந்துருக்காது..!!”
”ஓ..!! அப்ப… நான் பண்ணதுதான் தப்புங்கறீங்களா..?”
”நிச்சயமா..” என்றாள்.
என் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.
”அப்படின்னா.. நீங்க.. தியேட்டருக்கே வந்துருக்க வேண்டாமே..” என்றேன் கொஞ்சம் சூடாக.
”நீங்கதான கூப்டிங்க..”
”நானா..?”
” பின்ன..? கரண்ட் பில் கட்டிட்டு நான் பாட்டுக்கு வந்துருப்பேன்..! வண்டில ட்ராப் பண்றேன் பேர்வழினு உள்ள கூட்டிட்டு போயி…”
”அலோ..! என்னமோ..நான் உங்கள கம்பெல் பண்ணி கூட்டிட்டு போயி… தப்பா நடந்துட்ட மாதிரி.. பேசறீங்க..?”
”இல்லியா… அப்றம்..? மோசமான ஆளுப்பா..!! நீங்க..!!”
மேலே பேசாமல் நான் அமைதியானேன். இனி இவளுடன் பேசுவது நல்லதல்ல..! முழுப்பழியையும் என் மீதே சுமத்துகிறாள்..! இவள் என்னவோ மிகவும் உத்தமி போல..!!
பின் நடந்தபடியே.. அவளே மெல்லச் சொன்னாள்.
”பாக்கப்போனா… நானும் வந்திருக்கக் கூடாதுதான்..! ஏதோ.. ஒரு சலனம்..! வந்துட்டேன்..!! அது கூட நா.. உங்கள ஒரு நல்ல நண்பனா நெனச்சுத்தான் வந்தேன்..! ஆனா உள்ள வந்து பாத்த பின்னாலதான் தெரிஞ்சுது எனக்கு…”
”என்ன தெரிஞ்சுது…?”
” ம்..? நீங்க எப்படிபட்டவருனு..!” .
”ஓ…!!” திகைப்பாகத்தான் இருந்தது.
சுயநலமான பெண் இவள்..! இவளிடம்… கொஞ்சம் காரியவாதியாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்..! இருவரும் பேசியவாறே.. ஸ்டேண்ட் அருகே போய்விட்டோம்.

”கோபமா..?” திடுமென கேட்டாள்.
”சே.. சே…!!” என்றேன்.
ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமறிக் கொண்டிருந்தது..!
” ஸாரி…” என்றாள்.
”பரவால்ல…”
” ஆனா.. நான் தப்பா ஒன்னும் பேசிடலை..! நீங்களே கொஞ்சம் பொருமையா யோசிச்சுப் பாருங்க… அப்ப புரியும்..!” என்றாள்.
” ஓ..! அப்படியா..?”
என்னைப் பார்த்தாள்.
”ஒன்னு மட்டும் நல்லா புரியுது..”
”என்ன..?” அவளைப் பார்த்தேன்.
”பொம்பளைங்கன்னாலே.. எல்லா ஆம்பளைங்களுக்கும்.. ஒரே எண்ணமதான்..!!”
”என்ன… எண்ணம்..?”
” பொடவை கட்ன.. பொம்மை..!! ஆசைப்பட்டா..அடைஞ்சிரனும்…!! ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்..நாங்க… சதையைத் தாண்டி… ஒன்னுமே இலலியா..? எங்களுக்கும் ஒரு மனசு இருக்குனு.. நெனைச்சுக்கூட பாக்க மாட்டிங்களா.. நீங்கள்ளாம்…?ச்ச…!!” என்றவள்.. மெயின் ரோட்டில் திரும்பி… ”சரிங்க… நான் போய்ட்டு வந்தர்றேன்…!!” என்று விட்டு நிற்காமல் போய்விட்டாள்..!!

ஞாயிற்றுக்கிழமை..!! காலை பத்து மணிக்கு மேலாகியும்.. வெய்யில் தெரியவில்லை..! மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது..! லேசான காற்று வீசிக் கொண்டிருந்தது..!! நிர்வாணக் குழந்தைகளும்.. அரை நிர்வாணக் குழந்தைகளும்.. வழக்கம் போல.. புளுதியில் விளையாடிக் கொண்டிருந்தன. !!
நான் காரை நிறுத்தி இறங்க.. குடிசைக்குள் இருந்து… நீ சிரித்த முகத்துடன் வெளியே வந்து என்னை வரவேற்றாய். உன் வீட்டுக்குள் அழைத்து.. பாய் போட்டு உட்கார வைத்தாய்.
”காபிங்க..?”
” வேண்டாம்..! எங்க அவ இல்லயா..?”
”கடைக்கு போயிருக்காங்க..”
” நான்.. அந்த வழியாத்தான வந்தேன்..! கண்ல தட்டுபடலயே..?”
”நீங்க.. பாத்துருக்க மாட்டிங்க..! கடைல எங்காச்சும் இருந்துருப்பா…”
நீ தலை நிறையப் பூ வைத்துக் கொண்டு.. மிகவும் அலங்காரத்துடன் இருந்தாய். உன் தலையிலிருந்த பூவின் வாசம்.. கமகமத்தது..!! உன்னைப் பார்த்து..

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.