ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”வேண்டாம்..! நான் போறேன்..!”
”போவியாம் இருடா..! காபி வெக்கறேன்.. குடிச்சிட்டு போவியாம்..”
”ஒன்னும் வேண்டாம்..! நீ உன் வேலையை பாரு..”
”ஏன்டா வேண்டாம்…?”
”வேண்டாம்னா விடேன்..”
”சும்மா.. குதிக்காதடா..! உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன்..! ஏன் இப்படி…..”
” போதும் விடு ஜீவி.. இதுக்கு மேல பேசினே… மகளே நான் பொல்லாதவனா மாறிருவேன்..! அப்றம் என்ன பேசறேன்னு தெரியாது..!! ”
”பரதேசி..! உன்னை சின்னதுல இருந்தே… அக்கறையோட வளத்தவடா நான்..!”
”அந்த ஒரே காரணத்துக்காகத்தான்.. இப்ப பேசாம.. போறேன்..! இதே வேற யாராவது இப்படி கேட்றுந்தா.. அப்ப தெரிஞ்சுருக்கும் நான் யாருனு. .”
”ஆ… இவன் பெரிய புடுங்கி…” என்றாள்.
அவள் பக்கத்தில் போய்.. அவளது முதுகில் ஒன்று போட்டேன்.
”மூடிட்டு.. உன் வேலை என்னமோ.. அதப் பாக்கற..! அத விட்டுட்டு அவன் சொன்னான்.. இவன் சொன்னான்னு எதாவது.. என்கிட்ட வந்து.. ஏடாகூடமா கேட்டுட்டிருந்த.. மகளே.. கழுத்த நெருச்சே கொன்னுருவேன்..!!”
”சரி.. யார்ரா அந்த பொண்ணுக..?” என்று நெளிந்து முதுகை தடவியபடி சிரித்துக் கொண்டு கேட்டாள்.
”அதான் சொன்னேனே.. தெரிஞ்ச பொண்ணுகன்னு.”
”கொஞ்சம் விவரமா சொல்லு..”
”கடை ஓனரு நல்ல பழக்கம்.. கடைல வேலைக்கு ஆள் இல்லேன்னு சொன்னாங்க.! அப்பத்தான் இந்தப் பொண்ணுக வேலை இருந்தா சொல்லச் சொன்னாங்க..! ஜாயிண்ட் பண்ணி விட்டுட்டேன்..!!”
”நம்ப முடியலியே..” என்று சிரித்தாள்.
”எவனோ சொல்றத நம்பற..! ஆனா என்மேல நம்பிக்கை இல்ல..! சின்னதுலருந்தே.. அக்கறையா வளர்த்து என்ன பிரயோஜனம்..?”
”உன்னப் பத்தி கேள்விப் படறதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு…?”
”அப்ப.. நம்பாத…”
” நான் ஏன் சொல்றேன்னு இப்ப புரியாதுடா உனக்கு..?”
”வேற எப்ப புரியும்..?”
”காலம் வரும்..!!”
” வரட்டும்.. அத.. அப்ப பாப்பம். இதெல்லாம் என்ன பேப்பர்..?”
”டெஸ்ட் பேப்பர்…”
”ஒழுக்கமா.. அத திருத்தப்பாரு..! கண்ட கண்ட நெனப்புல திருத்தி படிக்கற பசங்க மார்க்ல கை வெச்சிராத..! பசங்க பாவம்..!!” என்றேன்.. !!

என் மனைவி.. நிலாவினிக்கும்.. மேகலாவுக்குமிடையே.. நல்ல முறையிலான ஒரு நட்பு வளர்ந்து விட்டது..! ஓய்வு கிடைத்தால் போதும்.. எந்த நேரம் என்றில்லாமல்.. என் மனைவியுடன் வம்பளக்க வந்து விடுவாள் மேகலா..! இரவு நேரங்களிலும் அவள் கணவன் வரும்வரை.. ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டு…ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள்..!!
என் மேல் உண்டான அவளது கோபம்.. குறைந்து விட்டது போலத்தான் தோன்றியது..! சமயத்தில் அவளே என்னை வம்புக்கு இழுப்பாள்..!
அன்று மதியம் நான் சாப்பிடப்போன போது…மேகலா என் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்..!
நான் சட்டையை கழற்றி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து சேரில் உட்கார்ந்து ”என்னது.. சீரியலா..?” என்று மேகலாவிடம் கேட்டேன்.
மேகலா சிரித்தாள்.
”ம்ம்..”
என் மனைவி.. என்னிடம் நெருங்கி.. நின்று சொன்னாள்.
”கொஞ்சம் பொருங்க.. முட்டை பொறியல்.. பண்ணிடறேன்..!”
”ம்.. பண்ணு.. பண்ணு..” என்றேன்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.