ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”வேனாங்களா..?” என்றாள்.
சமாளித்து விடலாம் எனத் தோண்றியது.
”ம்..ம்..! சரி.. வாங்க..!!”
நீ தயங்கி விட்டு..
”வம்பு வரும்னா.. வேண்டாங்க..!!” என்றாய்.
”வம்பெல்லாம் வராது..! உங்களத் தெரியும் அவளுக்கு..”
தீபா ”கல்யாணத்துல பாத்தாங்களே..” என்றாள்.
”ம்..ம். !! வாங்க.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!” என்றேன்..!!

மறுநாள் காலை..!!
நான் கண்விழித்தது உன் முகத்தில்தான..!! கண்களைத் திறந்தவன்.. உன்னைப் பார்த்ததும்.. திடுக்கிட்டேன்..! நான் காணபது கனவல்லவே..? கண்களைத் தேய்த்து விட்டுப் பார்த்தேன்.! நீயேதான்…!!
”நாந்தாங்க..” என்று சிரித்தாய்.
”நீயா..? ”
நீ எப்படி.. இந்தக் காலை வேளையில்..? திகைப்புடன் எழுந்தேன்.
‘’நீ எப்படி இங்க…?”
”ஏங்க.. நான் வரக்கூடாதா..?” என்று கேட்ட உன் முகம் தீவிரமடைந்தது.

நான் சிரித்து..
”சே.. சே..! நான் கேட்டது.. அதில்ல…”
”இ.. இல்ல.. அக்காவ.. பாக்கலாம்ன்ட்டு…” என்று தணிந்த குரலில் சொன்னாய். ”சொல்லாம வந்தது.. தப்புங்களா..?”
நான்.. என் மனைவியைத் தேடினேன். அவள் சமையல் கட்டில் இருக்க வேண்டும்..!
”பரவால்ல..! எப்ப வந்த.. நீ..?”
”இப்பதாங்க…”
”நிலாவ.. பாத்துட்டியா..?”
” ம்..! பாத்தங்க..!!” உன்னிடம் உற்சாக உணர்வு இல்லை. முகத்தில் பயமே தெண்பட்டது.
”ம்..ம்..! உக்காரு…!!” என்று விட்டு எழுந்தேன்.
லுங்கியை இருக்கிக் கட்டிக் கொண்டு.. சமையல் கட்டை எட்டிப் பார்த்தேன். காபி கலக்கிக் கொண்டிருந்த.. என் மனைவி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
”உங்க.. கெஸ்ட் வந்துருக்காங்க..”
”ம்..! எழுப்பிருக்கலாமிலல. ?”
” அவங்கதான் வேண்டாம்னாங்க.. பேசிட்டிருங்க..! காபி கொண்டு வரேன்…!!” என்றாள்.
”ம்..ம்..” என்று விட்டு…பாத்ரூம் போனேன்.
அருகே போக… பாத்ரூம் கதவு திறந்து.. வெளியே வந்தாள் தீபா.
”அட..! நீயும் வந்துருக்கியா.?” என்றேன்.
”நான் வராம இருப்பங்களா..?”
இளஞ் சிவப்பு தாவணியில்.. பளீரெனச் சிரித்தாள். ஆனால் இப்போது.. அதைப் பற்றிப் பேசுவதற்கு.. சரியான சந்தர்ப்பம் இல்லை.
”அதானே..நீ யாரு…?” என்றேன்.
”இவ்ளோ நேரமா.. தூங்குவீங்க..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..! நட வரேன்..!” என்று விட்டு பாத்ரூமில் நுழைந்தேன்.
நான் முகம் கழுவிக் கொண்டு.. வீட்டுக்குள் போக.. என் மனைவி.. அவள்கள் இருவருக்கும்.. காபி கொடுத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் கொடுத்தாள். டேபிள் மீது… சிலவகை.. பழங்கள்.. ஸ்வீட்… பூவெல்லாம் இருந்தது.
”அட..! இதெல்லாம் யாரு வாங்கினது..?’ என்று கேட்டேன்.
” நாங்கதான்.!!” என்று சிரித்தாள் தீபா.
”இதெல்லாம் வாங்கனுமா..?”
நீ.. ”சும்மா.. எப்படிங்க.. வர்றது..?”என்றாய்.
நீ கொஞ்சம் பயத்துடனே இருந்தாய்..! ஆனால் தீபா.. மிகவும் சரளமாக வாயடித்தாள். உங்கள் வேலையெல்லாம் பற்றி விசாரித்தாள் நிலாவினி. நீங்கள் இருவரும் விடைபெற்றுப் போகும்வரை.. எனக்குக் கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது..!!
உங்கள் இருவரையும் நான் வீதிவரை வந்து அனுப்பிவிட்டு. வீட்டுக்குள் போக.. உதட்டில் குறுஞ் சிரிப்புடன் என்னைப் பார்த்தாள் நிலாவினி.
”போய்ட்டாங்களா…?”
”ம்..ம்..”
”ஹைட்டா.. இருந்த பொண்ணுதான… தாமரை..?” என்று என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”ம்..ம்..! அவதான்..!!” என்றேன் கொஞ்சம் இளித்து.
”குள்ளமா இருந்தது..?”
”தீபா…! தீபமலர்..!!”
”ம்..ம்..! எப்ப சொன்னீங்க..?”
”என்னது..?”
”ம்…நான் பிரக்னெண்ட்னு..?”
”நேத்து..! வழில பாத்து.. பேசினப்ப.. இப்படினு சொன்னேன்…”
”பரவால்ல..! ஒடனே பாக்க வந்துட்டாங்க..! பழம்.. ஸ்வீட்டோட…!!”
”இ..இல்ல..! இத.. நானே.. எதிர்பாக்கல..!!”
” அவங்க ரெண்டு பேரும்.. அக்கா… தங்கச்சியா..?”
”அதெல்லாம் இல்ல.. பிரெண்ட்ஸ்…!! பக்கத்து.. பக்கத்து வீடு..!!”
”ஒரே ஜாடைல இருக்காங்க..! அவங்க ரெண்டு பேரும்.. அக்கா.. தங்கச்சின்னே நெனச்சேன்..!!” என்றாள்.
”ம்..ம்..! பாக்ற எல்லாரும்.. அப்படித்தான் நெனைப்பாங்க..!!”
”அந்தப் பொண்ணு.. தீபா இல்ல..? அவ என்னமோ.. என்னை ஒரு அதிசய பிறவிய பாக்கற மாதிரி பாக்கறா..! நான் என்ன அவ்வளவு வித்தியாசமாவா இருக்கேன்..?”
” இல்ல.. நீ அழகா இருக்கியே.. அதை பிரம்மிச்சு பாத்துருப்பா..”
”ஏன்.. அவ அழகா இல்லியா..? கருப்பாருந்தாலும்.. என்ன.ஒரு ஸ்ட்ரக்ஸர் அவளுக்கு..!! நான் ஒரு அழகுன்னா.. அவ ஒரு அழகு..!!”
”நம்ம அகராதில.. அழகுன்னா.. அது நல்ல.. செவந்த நிறமா.. வெள்ளைத் தோலோட.. பாக்க பளபளனு இருக்கறதுதான்..!!”
நிலாவினி புன்னகைத்தாள் .
”அவ பாத்தத நெனச்சா.. எனக்கு இன்னுமே சிரிப்புத்தான் வருது..!”
”ஒரு.. ஆச்சரியம்தான்..”
” ஆனா.. தாமரை அப்படி பாக்கல..!!”
”ம்..ம்..!!”
”அனாதையா… அவ..?”
” ம்..! சொந்தம்னு ஒருத்தர்கூட இல்ல.. அவளுக்கு..”
”அதான்.. நீங்க இருக்கீங்களே..?” என்றாள்.
நான் துணுக்குற்று.. அவளைப் பார்த்தேன். அவள் குறும்புடன் சிரித்தாள்.
”நிலா.. இது… இது.. சும்மா… ஒரு பழக்கம்…” என சமாளித்தேன்.
”தெரியுமே… அதுவும்…” என்றாள்.
என் மனதில் ஒரு உறுத்தல்..! பயமாக இருந்தது..! இது என்னடா வம்பு..காலை எழுந்தவுடனே..? என கவலை வந்தது..!!!!!

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.