ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”ஆமா ஏன்.. அடிக்கடி அம்மா.. அவகிட்ட போய்டுது..?”
”அது உங்கம்மாளையே கேட்டுக்க..! உக்காரு..!” என்றாள்.
டேபிள் மீது நிறைய பேப்பர் விடைத்தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் சேரில் உட்கார்ந்தேன்.
”கொழந்தைகளுக்கு தனியா எதுக்கு டியூசன்..? நீயே சொல்லித்தரலாமில்ல..?”
” என்கிட்டன்னா.. சரியா படிக்க மாட்டாங்க..! உன் பொண்டாட்டி என்ன பண்றா..?”
”வீட்ல இருக்கா..”
”காபி குடிக்கறியா..?” என்று கேட்டாள்.
”இல்ல.. வேண்டாம்..! சொல்லு.. என்ன விசயம்..?”
சோபாவில் உட்கார்ந்து எனனை உற்றுப் பார்த்தாள்.
”என்ன.. அப்படி பாக்ற..?” என்று கேட்டேன்.
பெருமூச்சு விட்டாள்.
”எப்பருந்து.. நீ புரோக்கர் ஆன..?”
”புரோக்கரா..?” திகைத்தேன் ”நானா..? என்ன சொல்ற..?”
”பாசாங்கு பண்ணாதடா.. பண்ணாட பயலே..”
”பாசாங்கு பண்றனா..? ஏய் லூசு.. நீ நெனைக்கற மாதிரி.. நடிக்கற ஆளு.. நான் இல்ல..! எதுன்னாலும் நேரடியாகவே கேளு..”
முறைத்தவாறு ”கடைகளுக்கெல்லாம் ஆள் புடிச்சு விடறியாமே..?” என்றாள்.
”கடைகளுக்கு.. ஆளா..? என்ன ஒளர்ற..?”
”நான் ஒளர்றனா..? ஏன் சொல்ல மாட்ட..?”
”ஏய்.. நீ என்ன கேக்கறேன்னே எனக்கு புரியல..! கொஞ்சம் புரியறமாதிரி கேளு..!!” என்றேன்.
”கடைகளுக்கு ரெண்டு புள்ளைகள.. வேலைக்கு சேத்திவிட்டியாமே..? உண்மையா.. இல்ல அதுவும் பொய்யா..?”
இப்போது புரிந்தது..!! நான் மெல்லிய புன்னகையுடன் கேட்டேன்.
”உனக்கு யாரு சொன்னது..?”
”உண்மையா இல்லையா..? அதை மட்டும் சொல்லு..”
”ம்..உண்மைதான்..!” என்றேன்.
”கமிசன் எவ்ளோ.. உனக்கு..?”
”என்ன கமிசன்..?”
”புரோக்கர் கமிசன்..?”
சுர்ரென கோபம் வந்தது.
”எவன் சொன்னான் உன்கிட்ட..?”
”எத்தனை நாளாடா.. நடக்குது இந்த தொழிலு..?” என்று அவள் கேட்க.. நான் கடுப்பாகிவிட்டேன்.
” நான் என்ன கூட்டிக்குடுக்கறவன்னு நெனைச்சியா..?”
”அதுமட்டும்தான் புரோக்கர் வேலையா..?”
”பின்ன.. நீ கேக்கறத பாத்தா.. நான் என்னமோ.. பொண்ணுகள வெச்சு பிஸினஷ் பண்ற மாதிரி இல்ல.. இருக்கு..?”
பிரித்து வைத்திருந்த விடைத்தாள்களை மேற்பார்வையிட்டாள்.
”நீ எல்லை மீறி போறடா..” என்றாள்.
என் கோபம் தணியவில்லை.
” என் எல்லை எதுன்றத நான்தான் தீர்மானிக்கனும்..” என்றேன்.
என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
”யாரு அந்த பொண்ணுக..?”
”தெரிஞ்ச பொண்ணுக..”
” எந்த வகைல..?” என்று ஊடுருவினாள்.
”அதையும் அந்த வேசி மகனுககிட்டயே கேக்க வேண்டியதுதான.?”
”ஏன்.. நீ சொல்ல மாட்டியா..?”
”சொல்ல வேண்டிய அவசியமில்ல..”
என்னை முறைத்தாள்.
”அப்ப.. நீ.. என்ன வேனா பண்ணுவ..? உன்னை யாரும்.. எதுவும் கேக்கக்கூடாது..?”
”கேக்கலாம்..! ஆனா உண்மை என்னன்னு தெரிஞ்சுக்காம.. எவனோ ஒரு வேசி மகன் சொன்னான்றத வெச்சு… நான் என்னமோ.. பொண்ணுகள வெச்சு பிசினஸ் பண்ற மாதிரி கேக்கக்கூடாது..!!” என்றேன் சூடு தனியாமலே.!
”சரி.. என்ன உண்மை.. அதச்சொல்லு பாப்போம்..”
”அவசியமில்ல..! நான் போறேன்..?” என எழுந்தேன்.
சட்டென அவள் ”இருடா.. போயிடாத..” என்றாள்.
நின்று அவளை முறைத்தேன்.
”நான் யாரு..?” என்று கேட்டாள்.
”ம்.. நல்லா வாய்ல வந்துரும்…!! என்னை கடுப்பேத்தாதே..!!” என்றேன்.
சிரித்தாள் ”சரி.. உக்காரு..! காபி குடிக்கறியா..?”

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.