வனிதா, “ம்ம்ம்..”
அமுதா, “ஒண்ணா சுத்துவீங்கன்னா? மூவி, டின்னர் அப்படின்னு போவீங்களா?”
வனிதா, “வாராவாரம் நிச்சயம் ஒரு மூவி இருக்கும். அப்பறம் எதாவுது ஷாப்பிங்க் பண்ணுவோம். நிச்சயம் எதாவுது ஒரு புக் ஷாப் போவோம். அப்பறம் எதாவுது காஃபி ஷாப்பில் உட்காந்து மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம்”
அமுதா, “ரெண்டு பேரும் நிறைய படிப்பீங்களா?”
வனிதா, “விஸ்வா fiction, non-fiction ரெண்டும் படிப்பார். அதுவும் ஆர்மியில் ஜாயின் பண்ணினதுக்கு பிறகு நிறைய non-fiction படிக்க ஆரம்பிச்சார். நான் mostly fiction தான் படிப்பேன். அவர் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்லற non-fiction மட்டும் படிப்பேன். வாங்கற சம்பளத்தில் பாதி புக்ஸுக்கு செலவு செய்யறீங்கன்னு அத்தை சொல்லிட்டே இருப்பாங்க”
அமுதா, “மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம்ன்னு சொன்னியே? என்ன பேசுவீங்க?”
வனிதா, “என் அஃபீஸில் நடக்கும் விஷயங்கள். நான் அந்த வாரம் நடந்ததை ஒண்ணு விடாம அவருக்கு ஒப்பிச்சுடுவேன். அதுக்கு அப்பறம் புக்ஸைப் பத்தி, ஸ்போர்ட்ஸ் பத்தி. இந்த டாபிக்ன்னு இல்லை. எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் விஸ்வாவோட அணுகுமுறை ரொம்ப வித்தியாசமா இருக்கும். சில சமயம் மணிக்கணக்கா ஆர்க்யூ பண்ணுவோம். அப்பறம் எதிர்காலத்தைப் பத்தியும் நிறைய பேசுவோம்”
அவள் மனத்திரையில் ஒரு காட்சி தோன்றியது …
ஒரு காஃபி ஷாப்பில் அருகருகே அமர்ந்து இருந்தனர் …
வனிதா, “இன்னைக்கு என் கூட வேலை செய்யற ஒரு லேடி தன் குழந்தையை ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வந்து இருந்தாங்க. ரெண்டு மணி நேரம் நான் எந்த வேலையும் செய்யலை”
விஸ்வா, “ஏன்?”
வனிதா, “ம்ம்ம் .. I was playing with that kiid. You know I love having kiids around”
விஸ்வா, “குழந்தைங்கன்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”
வனிதா, “ஆமா. When they are kiids”
விஸ்வா, “ம்ம்ம்”
வனிதா, “உனக்கு எத்தனை குழந்தைங்க வேணும்?”
விஸ்வா, “ரெண்டு”
வனிதா, “ஏன் ரெண்டே ரெண்டு?”
விஸ்வா, “ஏன் உனக்கு இன்னும் நிறைய பெத்துக்கணும்ன்னு இருக்கா?”
வனிதா, “எனக்கு அரை டஜன் குழந்தைங்க வேணும். அட் லீஸ்ட் நாலு”
விஸ்வா, “ட்வின்ஸா பிறந்ததுன்னா பெண்டு நிமிந்துடும்”
வனிதா, “அதனால தான் ஆறு, நாலுன்னு சொன்னேன்”
விஸ்வா, “ட்வின்ஸை பெத்து வளக்கறது எவ்வளவு சிரமம் தெரியுமா? அதுவும் நானும் ராமும் மாதிரின்னா நிச்சயம் ஏண்டா பெத்துகிட்டோம்ன்னு இருக்கும்”

Nice….