ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6

டாக்டர் அமுதா, “Very True, சோ, இந்த கவுன்ஸிலிங்கை எப்படி எடுத்துட்டுப் போகலாம்?”

டாக்டர் மதுசூதன், “முதலில் விஸ்வா என்னோடு முதல் ரெண்டு மூணு சிட்டிங்க் முடிக்கட்டும் அப்பறம் சொல்றேன். ஆனா ஒரு முக்கியமான விஷயம். நான் இந்த கவுன்ஸிலிங்கில் ஈடு பட்டு இருப்பது. ஐ மீன் உங்களுக்கு ஆலோசகராக நியமிக்கப் பட்டு இருப்பது அவங்க ரெண்டு பேருக்கும் தெரியக் கூடாது. விஸ்வாகிட்டே நான் அவன் மேல் இருக்கும் அக்கறையினால் ஈடு பட்டு இருக்கேன்னு சொல்லப் போறேன். அது உண்மையும் கூட. என் ராணுவ செல்வாக்கை உபயோகிச்சு இந்தக் கேஸைப் பத்தின விவரங்களை தெரிஞ்சுட்டேன்னு சொல்லப் போறேன். ஒரு வேளை வனிதாகூட நான் இன்டராக்ட் பண்ண வேண்டிய அவசியம் நேர்ந்தா விஸ்வாவை இதுக்கு முன்னாடி ஹாண்டில் பண்ணின ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டின் உதவியை நீங்க நாடினதா சொல்லுங்க. நான் விஸ்வாகூட பேசிட்டு இருப்பது வனிதாவுக்குத் தெரியக் கூடாது”

டாக்டர் அமுதா, “Why this cloak and dagger? இதுவும் மிலிடரி சைக்கியாட்ரியின் மாறு பட்ட அப்ரோச்சா?”

டாக்டர் மதுசூதன், “மாறு பட்ட அப்ரோச் அப்படின்னா என்ன டாக்டர்? அதற்கு முன்னால் அணுகாத கோணத்தில் அணுகறது. வனிதா தன் மேரேஜ் முறிஞ்சாலும் பரவால்லை. குழந்தைகள் கஷ்டப் படக் கூடாதுன்னு பார்க்கறா. மேரேஜ் முறியும் அளவுக்கு தப்பு செஞ்சவ வனிதா. அந்தத் தப்பை அவ உண்மையா உணர்ந்தாளான்னு எனக்கு சந்தேகம். She seems to be pragmatic. நடந்தது நடந்துடுச்சு. இனி மேற்கொண்டு என்ன? அப்படின்னு பார்க்கற மாதிரி தோணுது. ஆனா விஸ்வாவின் மனத்தில் இன்னும் நடந்த விஷயங்களினால் வந்த மனக் காயம் துளி கூட ஆறலை. இந்த சமயத்தில் இன்னொரு நபர் அவங்க கவுன்ஸிலிங்கில் ஈடு பட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சா ரெண்டு பேரும் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை. அதனாலதான் நான் அப்படிச் சொன்னேன்”

டாக்டர் அமுதா, “நீங்க சொல்வது ரொம்ப சரி. சோ, நான் கொஞ்ச நாள் வனிதாவை தொடர்பு கொள்ளாமல் இருக்கணுமா”

சற்று யோசித்த டாக்டர் மதுசூதன், “இல்லை. நிச்சயம் அவளை கூப்பிட்டு அவகூட பேசுங்க. விவாகரத்தில் முடியாமல் இருக்க அவ தான் செஞ்சது தப்புன்னு உணறணும். மேலோட்டமா நான் தப்பு செஞ்சுட்டேன்னு சொன்னா போதாது”

டாக்டர் அமுதா, “சோ?”

டாக்டர் மதுசூதன், “வனிதா விஸ்வாவின் மன வலியை நல்லா புரிஞ்சுக்கணும். அவ விஸ்வாவின் நிலைமையில் இருந்து இருந்தா எப்படி அவ ஃபீல் பண்ணி இருப்பான்னு யோசிக்க வையுங்க”

டாக்டர் அமுதா, “I have tried that before…” என இழுத்தார்

டாக்டர் மதுசூதன், “May be only from a woman’s point of view. கொஞ்சம் மாற்றி பேச வையுங்க. ஒரு கணவனுக்கு தன் மனைவி வேறு ஒருத்தனை காதலிக்கறான்னு தெரிஞ்சா வரும் மன வேதனையை விட தன் மனைவி வேறு ஒருத்தனுடன் உடலுறவு கொண்டாள்ன்னு தெரிஞ்சா வரும் மன வேதனை அதிகமா இருக்கும். ஆனா, ஒரு மனைவிக்கு தன் கணவன் ஒரு விபசாரிகிட்டே போயிட்டு வந்தான்னு தெரிஞ்சா வரும் மன வேதனையை விட வேறு ஒருத்தியை காதலிக்கறான்னு தெரிஞ்சா வரும் மன வேதனை அதிகமா இருக்கும். That is, பொதுவா செக்ஸுக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஆனா, பெண்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்க. சோ, விஸ்வா வேறு ஒருத்தியை காதலிச்சா அவளுக்கு எப்படி இருக்குன்னு யோசிக்க வையுங்க”