டாக்டர்-மதுசூதன், “டாக்டர், நீங்க மெட்ராஸ் சாப்பர்ஸ் சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே இருந்து வாங்கின விஸ்வாவின் ஃபைலில் இருந்தது சில அடிப்படி உண்மைகள் மட்டும்தான். அது போரில் அடிபட்டு திரும்ப சிவிலியன் வேலைக்குப் போகும் ஆஃபீஸர்களைப் பத்தி பொதுவா தயாரிக்கப் பட்ட ரிப்போர்ட். மேலோட்டமான விவரங்கள் மட்டும் தான் இருந்தது”
டாக்டர் அமுதா, “ஏன்?”
டாக்டர் மதுசூதன், “விஸ்வாவின் கேஸ் ரொம்ப ஸ்பெஷல். கார்கில் போரின்போது அவனுக்கு அடிபட்ட அந்த ஆபரேஷன் ரகஸியமா வைக்கப் பட்டு இருக்கு. மேலும் அங்கே நடந்த விஷயங்கள் வெளி உலகுக்குத் தெரிஞ்சா விஸ்வாவுக்கு அவன் உடன் இருந்த பாம்பே சாப்பர்ஸ் எஞ்சினியர் சேதன் ராய்க்கு தவிற அவங்க ரெண்டு பேரின் குடும்பத்துக்குக் கூட ஆபத்து வரலாம்ன்னு அந்த ஆபரெஷனைப் பத்தி, விஸ்வாவைப் பத்தின விவரங்கள் எல்லாம் கான்ஃபிடென்ஷியல், ஒரு சிலர் கண்களுக்கு மட்டும்ன்னு வைக்கப் பட்டு இருக்கு. இதுக்கு மேல் நான் உங்களுக்கு விவரங்கள் கொடுக்க முடியாத நிலையில் இருக்கேன்”
டாக்டர் அமுதா, “சரி, ஆனா ஒரு சந்தேகம் டாக்டர். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷனில் அடிபட்ட விஸ்வாவுக்கு ஏன் விருது எதுவும் கொடுக்கப் படலை. அவனை டிஸ்சார்ஜ் செஞ்ச விதம் கூட ரொம்ப சாதாரணமா இருந்தத மாதிரி இருக்கே?”
டாக்டர் மதுசூதன், “அவன் கலந்துட்ட ஆபரேஷன் ரகஸியமா வைக்கப் பட்டு இருக்குன்னு சொன்னேனே தவிற முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு சொல்லலை. போரில் கலந்துக்கும் ஒவ்வொரு நாடும் அந்த மாதிரி ஆபரேஷனில் கலந்துக்கும். அங்கே நடந்த விஷயங்கள் மட்டும்தான் ரகஸியமானது. அனேகமா வெளி உலகில் அவனோட ட்வின் ப்ரதர் ராமுக்கு மட்டும் தெரியும்ன்னு நினைக்கறேன். வீர் சேவா மெடல் மாதிரி ஒரு விருது கொடுக்கும் அளவுக்கு விஸ்வாவுக்கு நிச்சயம் தகுதி இருந்தது. ஆனா விருது கொடுக்கப் படும் போது, எதற்கு அந்த விருது அப்படின்னு விளக்கி ஸைடேஷன் எனும் பத்திரம் ஒண்ணு தயாரிக்கப் படும் அதில் ஆபரேஷனின் விவரங்கள், இடம், தேதி முதற்கொண்டு அதில் சொல்ல வேண்டி இருந்தது. அது வெளி உலகுக்கு தெரியக் கூடாதுன்னு அவனுக்கு எந்த விருதும் கொடுக்கப் படலை. ஆனா அவனுக்கு பல விதங்களில் ஆர்மி உதவி இருக்கு. என்னை இந்தக் கேஸில் கலந்துக்க வைப்பதும் அதன் காரணாத்தான்”
டாக்டர் அமுதா, “ஓ, தாங்க் யூ டாக்டர். ஆனா, உங்களுக்கு மேரேஜ் கவுன்ஸிலிங்கில் அனுபவம் இருக்கா?”
டாக்டர் மதுசூதன், “உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். டாக்டர், இன்ஃபைடிலிடி, முறை கேடான உறவுகள், ராணுவத்தில்தான் ரொம்ப அதிகம். பல மாதங்கள் தம்பதியினர் விலகி இருக்க வேண்டிய நிர்பந்தம் அதற்கு முதல் காரணம். சில சமயங்களில் தம்பதியினர் சேர்ந்து இருக்கும் போதும் ராணுவத்துக்கே உரித்தான கேளிக்கை, கொண்டாட்டங்களினால் மனைவிகளுக்கு பிற ஆண்களுடனும் கணவர்களுக்கு பிற பெண்களுடனும் தொடர்பு ஏற்படுது. அந்தத தொடர்பு சில சமயங்களில் எல்லை மீறிடுது. மிலிடரி சைக்கியாட்ரி அளவுக்கு நான் அடல்ட் சைக்கியாட்ரியும் ப்ராக்டீஸ் பண்ணி இருக்கேன்.”
டாக்டர் அமுதா, “ஓ! சாரி டாக்டர். நான் அந்தக் கோணத்தில் உங்க அனுபவத்தை அலசிப் பார்க்கலை. I am really sorry to suspect your credentials”
டாக்டர் மதுசூதன், “Never mind. இதைச் சொல்லுங்க. பொதுவா ஒரு டைவர்ஸ் கேஸில் உங்க குறிக்கோள் என்ன?”
