எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி End 90

“ப்ச்.. நான் ஃபோனலாம் கட் பண்ணல.. எருமை மாடு மாதிரி ஒருத்தன், என்மேல வந்து இடிச்சுட்டான்.. செல்ஃபோன் செகண்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!” “ஓ..!! எனக்கு எப்படி அதுலாம் தெரியும்.. எப்போவும் போல இப்போவும் நீ எஸ்கேப் ஆக நெனைக்கிறேன்னு நான் நெனச்சுட்டேன்..!! கொஞ்சநேரம் என்ன பண்றதுனே எதுவும் புரியல.. அப்புறந்தான் அந்த அட்வர்டைஸ்மன்ட் கண்ணுல பட்டுச்சு..!!” “என்ன அட்வர்டைஸ்மன்ட்..??” “அவசர தேவைக்கு அணுகவும்னு ஏர்ப்போர்ட் அத்தாரிட்டியோட அட்வர்டைஸ்மன்ட்..!! உடனே அணுகிட்டேன்..!!” அசோக் அப்பாவியாக சொல்ல, […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

அசோக் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்..!! பார்த்ததுமே அவனது விழிகள் படக்கென விரிந்து கொண்டன.. இருதயம் வெடுக்கென சுண்டி விடப்பட்டு துடித்தது.. நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு அதிர்வலை.. நாளங்களிலெல்லாம் ரத்தம் புது வேகத்துடன் பீய்ச்சியடித்தது..!! எத்தனை நாட்கள் அந்த கண்களை மணிக்கணக்கில் பார்த்தவாறு அமர்ந்திருப்பான்..?? எத்தனை காதலுடன் அந்த விழிகளின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் பார்த்து ரசித்திருப்பான்..?? அந்த கண்கள்தானே அவனுடைய படுக்கையறை சுவற்றை முழுதாக ஆக்கிரமித்திருக்கின்றன.. அந்த பார்வைதானே அவனது விழிவழி பாய்ந்து, இதயத்தை […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 18 49

அந்த காவல்துறை அதிகாரியின் கண்ணில் சிக்காமல் தப்பித்து.. கல்லிலும் முள்ளிலும் கால்கள் வதையுற ஓடிக்களைத்து.. சீற்றமாக எதிரே வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தி.. ‘சிந்தாதிரிப்பேட்டை போகணும்’ என்றபடி ஏறியமர்ந்தபோதுதான்.. கையிலிருந்த அந்த செல்ஃபோன் சப்தம் எழுப்பியது..!! பதற்றத்துடனேதான் செல்ஃபோன் டிஸ்ப்ளேயில் பார்வையை வீசினாள்.. பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்குள் ஒரு பனிச்சிதறல்..!! எத்தனை நாட்கள் அந்த எண்களின் வரிசையை ஏக்கமாக பார்த்திருப்பாள்.. எவ்வளவு ஆசையாக அந்த எண்களை அவளது கட்டை விரல் டயல் செய்யும்..?? கண்ணில் விழுந்ததுமே காதலனின் […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

இவர்கள் சென்ற நேரத்தில் அசோக்கின் நண்பர்கள் மூவருமே அலுவலகத்தில் இல்லை.. ஏதோ படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர்..!! அவர்களிடம் வேலை செய்கிற அசிஸ்டன்ட்கள்தான்.. சிஸ்டத்தில் ஏதோ கேம்ஸ் ஆடியபடி ஹாயாக அமர்ந்திருந்தனர்..!! அசோக் அவர்களிடம் சென்று ஏதோ ஃபைல் பற்றி கேட்க.. அவர்களில் ஒருவன் மேஜை ட்ராவை கைகாட்டினான்..!! மேஜையை அணுகிய அசோக் ட்ராவை திறந்தான்.. உள்ளே கைவிட்டு, அந்த ஃபைல் அடங்கிய மெமரி ஸ்டிக்கை தேடினான்..!! அதேநேரம்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த மும்தாஜ்.. காத்திருக்கிற […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

“எ..என்ன சொல்ற நீ..?? எந்த மாதிரி ஸ்டேட்ல அவன் இருக்கான்..??” “நேத்து.. அந்த சுமங்கலி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ப்ராஜக்ட் விஷயமா.. ஷூட்டிங் லொகேஷன் பாத்துட்டு வர சொல்லிருந்தல..??” “ம்ம்..” “ஆபீஸ்ல சும்மாதான இருக்கான்னு.. இவனையும் கூட்டிட்டு போயிருந்தேன்..!!” “சரி..!!” “பதினஞ்சு மாடி பில்டிங் மச்சி.. மேல நின்னுக்கிட்டு லொகேஷன் பாத்துட்டு இருந்தோம்..!! திடீர்னு இவன்.. ‘இங்க இருந்து இப்படியே குதிச்சிடலாம் போல இருக்குடா’ன்றான்..!! எனக்கு ஒன்னும் புரியல.. திரும்பி இவன் மூஞ்சை பாத்தா.. மூஞ்சில அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆள்.. முன்பாக கிடந்த கண்ணாடி மேஜை மீது.. முதுகு குப்புற கவிழ்ந்திருந்தான்..!! முகத்தை பக்கவாட்டில் திருப்பி புதைத்து.. மூச்சு நின்று போய் இறந்து கிடந்தான்..!! முரட்டு மீசை.. கனத்த தேகம்.. மூக்கிலிருந்து வழிந்து உறைந்துபோன ரத்தம்.. மூடாத இமைகளுடன் நிலைகுத்திய பார்வை..!! அந்த கண்ணாடி மேஜையில்.. வெண்ணிறத்திலான ஒருவகை பொடி சிந்திக் கிடந்தது.. வெப்பத்தில் கருகிப் போன வெள்ளி தேக்கரண்டி ஒன்று.. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக மதுபுட்டி ஒன்று.. அதனருகில் நேற்றிரவு […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

“நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ..!!” – எகத்தாளமாக சொன்னான் அவன். “நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க..!!” – ஒரு குழந்தையின் புன்னகையுடன் சொன்னான் அசோக். “உன் அம்மாவை உனக்கு பிடிக்குமா..??” – மீரா அசோக்கிடம் கேட்டாள். “பிடிக்கு…மாவா..?? ஹ்ஹ.. உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச ஜீவன்.. என் அம்மாதான்..!! உனக்கு..??” – அசோக் திரும்ப கேட்டான். “ம்ம்.. எனக்கும் என் […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 65

அசோக் வண்டியை ஓட்டிக்கொண்டே.. தன் மனதில் இருக்கிற விஷயத்தை சாலமனுக்கு விளக்கி சொன்னான்..!! சில நாட்களுக்கு முன்பு, மீரா அசோக்கிடம் சொன்ன அந்த விஷயம்.. அவளையும் அறியாமலே அவளைப்பற்றி உளறியிருந்த அந்த விஷயம்.. அவளுடைய வீட்டுக்கு எதிரே கவாஸாக்கி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வைக்கப்பட்டிருக்கிற விஷயம்..!! அசோக்தான் அந்த விஷயத்தை ஆர்வமாகவும், ஆனந்தமாகவும் சொன்னானே தவிர.. சாலமன் எல்லாவற்றையும் அசுவாரசியமாகவும், அவநம்பிக்கையாகவுமே கேட்டுக் கொண்டான்..!! மேலும் ஒரு அரை மணி நேரம் கழித்து..!! அசோக்கும் சாலமனும், பாலாஜி அட்வர்டைஸிங் […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

“டமார்..!!!” என்று பலூன் வெடிக்கிற சப்தம் பெரிதாக கேட்டது..!! கண்ணுக்கு அழகாய் காட்சியளித்த அந்த இதய பலூன்.. கணநேரத்தில் இப்போது உடைந்து சிதறிப் போயிருந்தது..!! “பலூனு.. என் பலூனு..!!!” கையையும் காலையும் உதறியவாறு, சூர்யா தரையில் புரண்டு கதறிக்கொண்டிருந்தான். “ஐயோ.. சூர்யா.. என்ன இது.. எந்திரி..!!” அவன் அம்மா பதறினாள். “பலூனு.. என் பலூனு..!!!” “ப்ச்.. எந்திரின்றன்ல..?? மம்மி உனக்கு வேற பலூன் வாங்கி தரேன்..!!” “எனக்கு அந்த பலூன்தான் வேணும்..!!” சூர்யா ‘ஓ..!!!!’ என்று அழுது […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“சொ..சொல்றேன்..!!” அமைதியாக சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் இரும்புக்குழாயை பற்றிக்கொண்டு, தூரத்தில் பறக்கிற விமானத்தை சில வினாடிகள் வெறித்தாள். ஆதங்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சில், அவளுடைய மார்புகள் ரெண்டும் ஏறி ஏறி இறங்கின. அசோக் இப்போது மெல்ல நகர்ந்து அவளை நெருங்கினான். பக்கவாட்டில் திரும்பி, மீராவின் முகத்தை பார்த்தான். அவள் இப்போது மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள். “உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த […]