புரிந்துணர்வு 323

“நான் இனி அவனோடு வாழ மாட்டேன்”

” அவன் ஒரு சாடிஸ்ட் ”

“எனக்கு அவன பிடிக்கல”

” கல்யாணம் ஆன ஆறு மாசத்துல இது மூணாவது தரவ ”

“வாழ அனுப்பிச்ச பொண்ண எப்படி கொடும படுத்தி இருக்கான் பாருங்க அவன சும்மா விட கூடாது ”

“அவன் கைய ஒடச்சிடுறேன் ”

“அவன் கால வெட்டிடுறேன்” என்று கூச்சலிட்டு கொண்டிருந்தவர்களை அமைதியா இருங்கடா “அது நம்மபொண்ணு வாழ்கை எடுத்தோம் கவுத்தோம்னுலாம் ஏதும் செய்யமுடியாது . ”

என்று ஒரு பெரியவர் அனைவரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அந்த வீட்ற்குள் வந்தார். அவரை பார்த்ததும்
” முதல்ல இவன வெட்டணும்”
” இவன் தான எல்லாத்துக்கும் பொறுப்பு” என்று மீண்டும் கூச்சலிட்டனர்.
பெரியவர்: “டேய் அமைதியா இருங்கடா” நான் பேசிக்குறேன்.”வாடா மனோ ஏன் பேத்தி உசுரோட இருக்காள்னு பாக்க வந்தியா”.

” இவன்ட என்ன தாத்தா பேச்சு” என்று மீண்டும் கூச்சலிட்டனர். அவர்களை அமைதியடைய செய்துவிட்டு மனோவை தனியாக கூட்டிச்சென்று மீண்டும் கேட்டார்.

“சொல்றா மனோ என் பேத்தி இருக்காளா இல்லையா நு பாக்க வந்தியா”
மனோ:”என்ன தாத்தா நீங்களும் அவங்கள மாறி புரியாம பேசுறீங்க. எதோ சின்ன சிறுசுங்க கல்யாண அனா புதுசுல சண்ட போட்டுக்குறதுலம் சகஜம் தான தாத்தா ஏன் உங்க மகனும் மருமகளும் சண்ட போட்டுக்கலயா?உங்க பேரனும் அவன் பொண்டாட்டியும் சண்ட போட்டுக்கலயா?”

தாத்தா :”நானும் அப்படி தாண்ட மோத ரெண்டு சண்டையை நெனெச்சு விட்டுட்டேன் அனா எப்ப என் பேத்தி மேலயே கைய வெச்சுட்டான் உன் மாப்ள”

மனோ:”புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதுலாம் சகஜம் தான தாத்தா அடிச்சாளும் புடிச்சாலும் புருஷன் பொண்டாட்டி தான்!”

தாத்தா:”கல்யாண ஆன ஓரே மாசத்துல கண்ணா கசக்கிக்கிட்டு வந்து நின்ன சரி எப்ப தான் புகுந்தவீட்டுக்கு போயிருக்க அங்க அனுசரிச்சு இருக்க தெரில போலன்னு புத்திமதி சொல்லி அனுப்பிவெச்சேன். அடுத்து ரெண்டே மாசத்துல மறுபடி கண்ணா கசக்கிக்கிட்டு வந்து நின்ன அப்ப சமாதான படுத்த வந்த நீ புருஷன் பொண்டாட்டிக்குள இதெலாம் சகஜம் நு சொல்லி கூட்டிட்டு போன, எப்ப மூணு மாசம் கழிச்சு மறுபடி கண்ணா கசக்கிட்டு வந்துஇருக்க எப்ப என்ன காரணம் சொல்லப்போற” மனோ .

மனோ:தாத்தா நீங்க சொல்றதெல்லாம் சரி தான்‌. ஆன கல்யாண ஆன இந்த ஆறு மாசத்துல மூணு முறை உங்க பேத்தி உங்க வீட்டுக்கு கோச்சிக்கிட்டு வந்துருக்கா! ஆன அதுக்கு என்ன காரணம்னு கேட்ருக்கீங்களா?. வரதட்சணை கொடுமையா? மாமியார் கொடுமையா? இல்ல உங்க பேத்தி மேல சந்தேக பட்டதுனால வந்த சண்டையா? இல்லையே.இவங்க பொட்ட சன்டைக்கு காரணம் கெட்டா ‌ நீங்களே புரிஞ்சிபீங்க.
முதல் தரவ இவகிட்ட சொல்லாம அவன் வெளிய போய்ட்டானனு சண்ட. ரெண்டாவது தரவ பெட் காபி பிரஷ் பண்ண தான் தருவனு சொன்னதுனால சண்ட! இப்போ கீரை சமச்சுதுனால சண்ட. நீங்களே சொல்லுங்க தாத்தா இதெல்லாம் ஒரு பிரச்சனையா எல்லாம் ரெண்டு பேருக்கு நடுவுல இருக்க ஈகோ தான் தாத்தா காரணம்.ஒரு கொழந்த பொரந்துட்டா எல்லாம் சரியாகிடும்.

தாத்தா:”என்னடா சொல்லற இது தான் காரணமா? ”
மனோ:” ஆமா தாத்தா ரெண்டு பேருமே படிச்சவங்க அதுமில்லாம ஒரே வயசு வேற அதுனால ஈகோல இப்டி பண்ணுதுங்க. நீங்க தான் உங்க மகனுக்கும் பேரனுக்கும் இத எடுத்து சொல்லணும்”.
தாத்தா: “அவனுங்கள விடற நான் பாத்துக்குறேன் ஆன ப்ரியா பிடிவாதமா இருக்கா அவளை எப்படி சமாதான படுத்த போற”.

மனோ:”அதுக்கு ஒரு ஆயதம் கைவசம் வெச்சுருக்கேன் தாத்தா”.

தாத்தா:”அது என்னடா ஆயுதம்”.

மனோ:”வேற என்ன எல்லாம் என் வாய் தான் தாத்தா! இத வெச்சி தான பொழப்ப ஒட்டிட்டுஇருக்கேன்.”

தாத்தா :”கில்லாடி டா படவா நீ!. வாய் உள்ள புள்ள பொளச்சிக்கும் நு சும்மாவா சொன்னாங்க. சரி முதல்ல வந்து சாப்பிடு ப்ரியா மாடியில இருக்கா அவளை அப்ரோம் சமாதானம் படுத்தலாம். ”

யார் இந்த தாத்தா, மனோ ,ப்ரியா என தெரிந்துகொள்ள….
…….ஆறு மாதங்களுக்கு முன்பு……….

அகிலாண்டேஸ்வரி சென்னையில் உள்ள ஒரு பணக்கார சிங்கள் மதர். இவளுக்கு ஒரே மகன் பெயர் பிரேம். தனது ஒரே மகன் என்பதால் அவனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ந்துவிட்டால் அதன் விளைவு சராசரி இளைஞர் போல வேலைவெட்டி இல்லாமல் சுற்றி தெரிந்துகொண்டிருந்தான். இவனுக்கு ஒரு கால்கட்டு போட்டால் பொறுப்பு வந்து விடும் பிறகு ஆபிஸ் பொறுப்புகளை அவனிடம் ஓப்படைத்துவிட்டு கடைசி காலத்தில் நாம் ஓய்வு எடுக்கலாம் என்று என்னி தன் மகனுக்கு வரன் தேட ஆரம்பித்தாள்.

ஆனால் அதில் ஒரு சிக்கல். பிரெமக்கு கல்யாணம் என்றாலே பிடிக்காது எனில் கல்யாணம் செய்து கொண்டால் தான் இஷ்டப்படி இருக்கமுடியாது. தன் சுதந்திரம் பறிபோய்விடும் என்று என்னி கல்யாணத்தை மருத்துவந்தான். அப்போது தான் அகிலா மனோவை கூப்பிட்டால்.