புரிந்துணர்வு 283

மனோ: “பின்ன நான் என்ன பொய்யா சொல்லறேன். அவன் என்ரேமும்

சென்னைக்கு வந்த பின் தான் பிரியாவிற்கு உண்மை புரிந்தது தன்னை சமாதானம் படுத்த மனோ சொன்ன அனைத்துமே பொய். பிரேம் ப்ரியாவின் நினைவில்லாம் ஒன்றும் இல்லை.சொல்லபோனால் இப்போது தான் மிக உற்சாகமாக இருந்தான்.அவன் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான். நல்ல சாப்டுட்டு , குடிச்சிட்டு,ஒரு குத்து பாட்டு போட்டுட்டு ப்ரியா வந்தது கூட தெரியாம ஆடிட்டு இருந்தான்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ப்ரியா “என்ன சித்தப்பா இதெல்லாம்”.
“நீங்க எதோ அவன் என் நெனைப்பாவே இருக்கானு சொன்னிங்க பாருங்க நீங்களே பாருங்க அவன் எதோட நெனப்பா இருக்கானு”

மனோ:”இல்லாம அவன் நீ போனதுனால தான் எப்படி குடிச்சிட்டு இருக்கான்”.

ப்ரியா:”சோகத்துல குடிகுரவன் இப்படியா குத்துப்பாட்டு போட்டு ஆடிட்டுருப்பான். இதுக்கு மேலயும் பொய் சொல்லி என்ன ஏமாத்தாதீங்க. நான் எங்க வீட்டுக்கே போறேன்”.

மனோ: ப்ரியா ப்ளீஸ் மா! நான் சொல்றத கேளு! ஒரு நிமிஷம்.எனக்காக ஒரு நிமிசம் நில்லுமா”

மனோவின் மீது இருந்த மாரியாதையின் காரணமாக அவள் நின்றாள்.

ப்ரியா:”சரி சொல்லுங்க”.

மனோ: “ப்ளீஸ் ப்ரியா நீ எப்ப போய்ட்டீனா நம்ம குடும்ப மானம் போய்டும். இவன வழக்க கஷ்டப்பட்ட என் அக்கா இதெல்லாம் கேள்விப்பட்டா தாங்க மாட்டா.அது மட்டுமில்ல நீ மறுபடி ஒங்க வீட்டுக்கு போன‌ தன் பேத்தி வாழ்கைய நெனச்சு உன் தாத்தா ரெம்ப‌ வருத்த படுவாரு.”

ப்ரியா:”அதுக்காக இங்கேயே இவனோடு சண்ட போட்டுட்டு சாக சொல்றிங்களா”.

மனோ: “இல்லாமா ப்ரியா அவன்ட நான் பேசுறேன். கொஞ்சம் டைம் குடுமா அவன மாத்திடலாம். அவன் ஒன்னும் கெட்டவன் இல்லமா கொஞ்சம் பொறுப்பில்லாதவன். நீ நெனெச்சா அவன மாத்தமுடியாத?கனவன் மனைவி குள்ள விட்டுக்கொடுத்து போனதாமா வாழ்க நல்லா இருக்கும். நானும் இனிமேல் உங்கலோட இதே அபார்ட்மெண்ட்ல தான் தங்கப்போறேன். கொஞ்சம் பொருத்துக்கமா அவன் மாறிடுவான்.

மனோவின் பேச்சை கேட்டு அவளும் “சரி சித்தப்பா நான் உங்கள நம்புறேன்,அனா அவன் மாருவானு நம்பிக்க எனக்கு இல்ல” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள்.

அன்று இரவு முழுதும் எப்படி ப்ரேமையும் ப்ரியாவுயும் ஒன்னு சேர வைப்பது என்று யோசித்து கொண்டே உரங்கமால் இருந்தான் மனோ. காலை எழுந்தவுடன் கிட்சேனுள் சென்று பார்த்தான் அங்கு ப்ரியா சமயல் செய்துகொண்டிடுந்தாள். அவளிடம் சென்று

“தேங்க்ஸ் ப்ரியா என் பேச்சை கேட்டு நீ மீண்டும் இங்கு வந்ததற்கு”

“எல்லாம் உங்களுக்காக தான் சித்தப்பா! அவன் மாறுவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை? ஆனால் உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, நீங்க சொன்ன மாறி என் வீட்ல இருக்கிறவங்க என்ன நெனச்சு கஷ்டபடகூடாது!”

என்றவாறே காபியை மனோவிற்கு தந்தாள்.
“தேங்க்ஸ் ப்ரியா பார் யுவர் காபீ. பிரேமிற்கும் பொய் கொடு. அவன் மனம் மாறி உண்ட பேசுவான். ப்ரியாவும் அவன் சொன்னது போல் காபீயை கொடுத்தலால்.அவள் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி இல்லாதவன் , அதை வாங்கிகொண்டு பதில் ஏதும் பேசவில்லை. இதே போல் தான் சாப்பிடும் போதும் அமைதியாய் இருந்தான். இந்த அமைதியை போக்க

“மனோ இட்லி சூப்பர் மா ப்ரியாஉன் கைபக்குவம் சூப்பர்!” என்று புகழ்ந்துவிட்டு “எப்பிடிடா இருக்குஇட்லி “என்று பிரேமிடம் கேட்டான். பிரேம்” இட்லியா இது கல்லாடம் இருக்கு மனுஷன் சாப்பிடுவான” என்று கூறி கைகழுவிட்டு ஆபீஸ்க்கு சென்று விட்டான்.

உண்மையில் இட்லி‌ கல்லாட்டம் தான் ‌இருந்நதது.மனோவோ ப்ரியாவை சந்தோஷப்படுத்த பொய் சொன்னான்.பிரேம்‌ உண்மையை சொண்ணாண்.ஆனால் பெண்களுக்கு ‌உண்மையை சொல்லும் ஆண்களை விட‌ பொய்‌ சொல்லும்‌ ஆண்களை தான்‌ பிடிக்கிறது.

பிரேமின் செயலை பார்த்து அழுந்து கொண்டிருந்த ப்ரியாவிடம் “நீ அழாத மா அவன் வேணும்னே உன்ன டீஸ் பண்றன் எல்லாம் சரியாகிடும்” என்று மனோ அவளை சமாதானம் படுத்தினான்.
பிரியாவிற்கு அவனது சமாதானம் ஆறுதலாக இருந்தது. தன் கணவனிடம் காணாத அந்த அன்பும் ஆறுதலும் அவளுக்கு சிறு சந்தோசத்தை வழங்கியது.