புரிந்துணர்வு 285

மனோ அகிலாவின் உடன்பிறந்த தம்பி முப்பத்திரெண்டு வயதாகிறது. ஜாதகம்‌ சரியாக பொருந்தாத காரணத்தால் இன்னும் திருமணமாகவில்லை. ப்ரேமும் மனோவும் ஒன்றாகத்தான் வளர்ந்தார்கள்.அகிலா பெரும்பாலும் ஆபீஸ்ல் பிஸியாகி இருந்த பொது. மனோ தான் பிரேமை கவனித்து கொண்டான். இருவருக்கும் எட்டு வருட இடைவெளி ப்ரேம்கு இருப்பத்தைந்து வயது தான் ஆகிறது. இருப்பினும் இருவரும் நண்பர்களை போன்றே பழகினார். தன் தாய் சொல்லைக்கூட தட்டுவான் அனால் தான் தாய்மாமன் பேச்சை தட் மாட்டான். இந்த காரணத்தால் தான் அகிலா மனோவை அழைத்தாள்.

அகிலா:”வாடா மனோ!”

மனோ: “சொல்லுக்கா என்ன விஷயம். அவசரமா வர சொன்ன”.

அகிலா:”அது ஒண்ணுமில்லடா! நம்ம ப்ரேம்கு கல்யாணம் பன்னலாம்னு இருக்கேன்”

மனோ:” நல்ல விஷயம்க்கா வரனேதும் பாக்கணுமா”.

அகிலா:”அது இல்லடா மனோ. வரன் எல்லாம் பாத்துட்டேன் ஆன அதுல ஒரு சிக்கல். உனக்கு தெரியாதடா பிரேம பத்தி அவன கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்டா அதுக்கு தான் உன்ன கூப்பிட்டேன் நீ சொன்ன அவன் கண்டிப்பா கேப்பான்.”

மனோ: “இது தான் விசியமா மாப்பிள்ளைக்கிட்ட நான் பேசுறேன்க்கா இது என் பொறுப்பு. ஆமா பொண்ணு எந்த ஊரு

அகிலா:மதுராடா!.

மதுரையில் ராஜதுரை ஐயா என்று ஊர்மக்களால் அழைக்கப்படும் ராஜதுரை இன் பேத்தி தான் கதையின் நாயகி ப்ரியா. ராஜதுரைக்கு ஒரு மகன் ஒரு மகள். ராஜதுரை இன் மகனின் மகள் தான் ப்ரியா. பிரியாவிற்கு இரண்டு அன்னங்கள் துரைராசு மற்றும் சின்னராசு. ஊருக்கேற்ப மண்மணம் மாறாத பாரம்பரிய குடும்பம். ப்ரியாவை தான் தற்போது பிரேமிற்கு வரன் பார்த்துள்ளனர். இங்கு அனைவர்க்கும் மாப்பிளையை பிடித்துவிட்டது. ப்ரியாவும் சம்மதம் தெரிவித்துவிட்டால்.

ப்ரியா வயது இருபத்திநான்கு. மாநிறம் அளவான உடலமைப்பு. டிகிரி முடித்துள்ளாள். திருமணத்திற்கு தயாராகி காத்திருக்கிறாள்.

இங்கு சென்னையில் மனோ பிரேமிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டான். மனோக்கு ஒரு தனித்தன்மை இருக்கு யார இருந்தாலும் தான் வாய்ஜாலத்தால் பேசிய சரிகட்டிவிடுவான். அனைவரிடமும் கலகலவென பேசுவான் எல்லோருக்கும் மனோவை பிடிக்கும் ஆனாலும் அவனக்கு இன்னும் திருமனமாகதது ஒரு‌மர்மம் தான்‌. ப்ரேமும் திருமணத்திர்கு ஒத்துகொண்டாண் . அனால் அவன் திருமணத்திற்கு போட்ட கண்டிஷன் திருமணத்திற்கு பின்பு தனி குடித்தனம் தான் இருப்பேன் இந்த ராட்சசி வீட்ல இருக்க மாட்டேன் என்பது தான் அந்த கண்டிஷன்.

அகிலாவும் அதை பொருட்படுத்த வில்லை. கரணம் தனியா இருந்த தான் பொறுப்பு வருனு விட்டுட்டா. ப்ரியாவை பார்த்ததும் ப்ரேமுக்கும் பிடித்துவிட்டது. இருவீட்டாரும் கூடி பேசி பிரேம்- ப்ரியா திருமணத்தை நடத்திவைத்தனர். மனோ தந்தை ஸ்தானத்தில் இருந்து பிரேமின் கல்யாணத்தை நடத்திவைத்தன். பெண்வீட்டில் அனைவரும் மனோவை அதிகம் நம்பினார். என் பேத்தி வாழ்க்கைக்கு நீதாண்டா பொறுப்பு என்ற அளவுக்கு பெண் வீட்டாருடன் நெருங்கி விட்டான் மனோ. அதே சமயம் பெண்ணின் அண்ணன்களோடு குட்டி கலாட்டாவும் செய்தான்.

இறுதியாக திருமணம் முடிந்து ப்ரியா புகந்தவீட்டிற்கு செல்லும்வேளையில் மனோ

” உங்கள் பேத்தியின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு நீங்கள் கவலை படவேண்டாம்” என்று வாக்குறுதி அளித்தான்.

ப்ரேமும் ப்ரியாவும் ஒரு மாதத்திற்க்கு எந்த பிரச்னையும் இல்லமால் சந்தோஷ்மாக இருந்தனர். அனால் அதன் பின் இருவரிடம் இருந்த ஈகோ அவர்குல்குல் சண்டையினை ஏற்படுத்தியது. சின்ன சின்ன விசியத்திற்கு சண்டை போட ஆரம்பித்தனர். முதல் தடவை ப்ரியா கோபித்து கொண்டு வந்த போது அவளை சமாதான படுத்தி அனுப்பிவைத்தனர். மீண்டும் இரண்டுமாதத்திற்கு பின் சண்டை என்று வீடிற்கு வந்த ப்ரியாவை பார்த்த போது இம்முறை பிரேம் மீது தான் தவறு என்று கோபமடைந்தார். இதனை கேள்வி பட்ட அகிலா மனோவை இந்த பிரச்னையை தீர்க்க அனுப்பினால்.

மனோ ப்ரியாவின் வீட்டிற்கு சமரசம் பேச சென்றான். அங்கு மனோவிற்கு வரவேற்பு சிறப்பாகஇல்லை என்றாலும் அதை அவன் பொருட்படுத்தவில்லை. அவர்களின் ஆத்திரம் அடங்கும்வரை அமைதியை இருந்தவன். அதன்பின் ப்ரியாவின் தாத்தாவிடம் நிதானமாக பேசி சமாதானம் செய்தான்.

ப்ரியாவின் சகோதர்களும் அமைதி அடைந்தனர். அனால்
“இங்க பாரு மனோ உன் பேச்ச கேட்டு தான் அமைதியா இருக்கோம் இனொரு தடவ இந்தமாரி நடந்தா நாங்க சும்மா இருக்கமாட்டோம்” பாத்துக்க
என்றும் அவனை எச்சரித்தனர்.
அனால் இதெல்லாம் விட பெரிய சாவல் ப்ரியாவை சமாதானம் படுத்துவது. ப்ரியா மாடியில் கண்ணை கசக்கி அழுதுகொண்டிருந்தால்.

மனோ ப்ரியாவிடம் சென்று

” நீ பாட்டுக்கு எங்க வந்துட்ட மா அனா அங்க அவன் நீ போனதா தாங்க முடியாம சோறுதண்ணி இல்லாம தூங்காம எந்நேரமும் ப்ரியா ப்ரியா நு உன்பெரியே சொல்லிட்டு அழுந்துட்டு இருகான்மா”

ப்ரியா: “என்ன சித்தப்பா சொல்லறீங்க நெஜமாலுமா.”