இதுக்கு எதுக்கு தயக்கம் 144

“ரெடியாகிட்டேங்க . கவலை படாதீங்க இன்னிக்கு இந்த ப்ராஜெக்ட் நமக்குத்தான் ”

” உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் அந்த வெங்கட்டுக்கு பெண்களை அதிகம் பிடிக்காதுன்னு கேள்வி பட்டிருக்கேன். அவன் ஆபிஸ்ல கூட, அவனோட பிஏ வை தவிர்த்து எல்லாமே ஆண்கள்தான். அதான் யோசிக்கறேன்.”

“ஏங்க நான் என்ன அங்க வேலையா செய்யப்போறேன். நம்ம கொடுக்கற ரேட் அண்ட் டெர்ம்ஸ் சரியா இருந்தா அவன் ப்ராஜெக்ட் தர போறான்”

“சரி விடு டென்ஷன் ஆகாத. நான் டிராப் பண்ணவா.”

“இல்லீங்க நான் என் கார்ல போயிட்டு அப்படியே ஆபிஸ் வரேன்”.

அப்பொழுதே அவன் மேல் வைஷுவிற்கு ஒரு கடுப்பு வந்தது. அப்படி என்ன பெரிய மன்மதனா இவர் பொண்ணுங்களை கிட்ட சேர்க்க மாட்டோரோன்னு மனசில் அவனை திட்டிக் கொண்டே வெங்கட்டின் அலுவலகத்திற்கு கிளம்பினாள் .

வெங்கட் , ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் முதலாளி. பல மொபைல் போன்களுக்கு சர்வீஸ் செய்து நிறுவனம். அந்தந்த மொபைல்களின் அதிகாரபூர்வ சர்வீஸ் சென்டர்கள் நடத்துபவன். இந்தியா முழுக்க கிளைகள் உண்டு. அவர்கள் நிறுவனத்திற்கு தேவையான ஒரு மென்பொருளை வடிவமைக்கும் ப்ராஜெக்ட் பைனல் செய்யத்தான் வைஷாலி இன்று செல்கிறாள்.

வெங்கட் , வழக்கம் போல் தனது விருப்பமான லைட் கலர் முழுக்கை சட்டை, லேசான தாடி டார்க் பேண்ட் ஷூ என்று ஒரு ஸ்மார்ட் ஆணாக தயாராகி அலுவலகம் வந்திருந்தான். அவனுக்கு தேவையான மென்பொருள் சம்பந்தமான காண்ட்ரேக்ட் இன்று முடிவு செய்தாக வேண்டும். வந்திருந்த ப்ரொபோசல்களில் இருந்து 3 நிறுவனங்களை இறுதி செய்திருந்தார்கள். இன்றுதான் அவர்களுடன் விவாதம்.

தயாராகி, காரில் செல்லும் பொழுதே, அந்த நிறுவனங்களை பற்றி அவனது பிஏ பர்வீனா கொடுத்திருந்த குறிப்புகளையும், யார் யார் வரப்போகிறார்கள் என்ற விவரங்களையும் படித்துக்கொண்டிருந்தான். சுரேஷின் நிறுவனம் பற்றி படிக்கையில் , வைஷாலி என்ற பெண் வரப்போவதாகவும், அவள் அந்நிறுவனத்தின் பார்ட்னர் எனவும் குறிப்பிருந்தது. அனைத்தையும் பார்த்தவன், அவர்களுடனான விவாதத்தை கடைசியில் வைக்க சொல்லி பின் வைஷாலி வந்திருந்தால் அவளை தனியறையில் உக்கார வைத்து தேவையானவற்றை கொடுக்கவும் கட்டளையிட்டான்.

மீட்டிங் துவங்க அரைமணி முன்பே வைஷாலி , வெங்கட்டின் அலுவலகத்திற்கு வந்துவிட்டாள். மூன்று மாடி கட்டிடம் அது. காரை பார்க் செய்தவள், அலுவலகத்திற்குள் செல்வதற்கு முன், காரிலேயே தனது கைப்பை எடுத்து ஒப்பனையை கொஞ்சம் திருத்திக் கொண்டாள்.பின் லிப் ஸ்டிக் எடுத்து கொஞ்சமே கொஞ்சம் வைத்தது தெரியாத அளவிற்கு வைத்துக் கொண்டு, பைல் மற்றும் லேப்டாப் பேக் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

ரிஷப்ஷனுக்கு சென்று விசாரிக்க . அவர்கள் அவளை மூன்றாவது மாடியில் இருந்தும் பர்வீனின் அறைக்கு அனுப்பினார்கள். பர்வீனும் அவளை வரவேற்று தனியாக ஒரு அறையில் அமர வைத்து, மற்ற இரு நிறுவனங்களின் ப்ரசெண்டேஷன் முடிந்தவுடன் அவள் ப்ரசெண்ட் செய்யலாம் என சொல்லி சென்றாள்.

அடுத்த ஒரு மணி நேரம் நேரத்தை கடத்துவது மிகக் கடினமாக இருந்தது. இனியும் கூப்பிடவில்லை எனில் கிளம்பலாம் என அவள் நினைக்கும் நேரத்தில் அவளை அழைத்தார்கள். மீட்டிங் அறையில் எப்படியும் ஒரு ஐந்து ஆறு பேராவது இருப்பார்கள் என நினைத்தவளுக்கு முதல் அதிர்ச்சி. அங்கிருந்தது இரண்டே நபர்கள்தான். ஒன்று வெங்கட் மற்றொன்று பர்வீன்

முதலில் சுருக்கமாய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளது லேப்டாப்பை ப்ரொஜெக்டரில் கனெக்ட் செய்து விளக்கத் துவங்கினாள். எதனால் தங்களது மென்பொருள் சிறந்தது என கூறியவள், மாக் அப் எனப்படும் டம்மி ஸ்க்ரீன்களை கொண்டு வெங்கட்டிற்கு விளக்கினாள்/

ஒவ்வொரு முறை வெங்கட்டை பார்க்கும் பொழுதும் அவனது கூறிய துளைக்கும் பார்வை அவளை ஏனோ சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்தப் பார்வையில் எனோ எந்த ஒரு உயிர்ப்பும் இல்லாமல் இருந்தது அவள் மனதை உறுத்தியது. ஒரு ஆணின் பார்வை ஒன்றாய் பாசமாய் , காதலாய் இருக்கணும் இல்லையெனில் வெறுப்பாய் இருக்கணும். இப்படி ஏதுமில்லாமல் ஒரு வெற்றுப் பார்வை ஏன் என அவளுக்கு புரியவில்லை. இருந்தும் அதை பற்றி அவள் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அல்லது அலட்டிக்கொள்ளவில்லை என நினைத்துக் கொண்டாள்.

அவள் நினைத்ததைவிடவே மீட்டிங் நன்றாக சென்றது. அதன் பின் அரை மணி கழித்து மீண்டும் அவளை அழைத்தனர். இம்முறை வெங்கட்டின் அறைக்கு.

1 Comment

Comments are closed.