மெய் மறந்தேன் – Part 1 124

”ம்..ம்ம்..! ஏன்..?”
”வாங்களேன்..! ஒரு கப் காபி குடிச்சிட்டு போலாம்..?”
உடனே ”ஓகே ” சொன்னான் சசி.
”வாங்க…” என அவள் முன்னால் போக.. அவளைப் பின் தொடர்ந்தான். அவளிடமிருந்து இனிமையான ஒரு மணம் பரவிக் கொண்டிருந்தது. வீட்டினுள் கூட்டிப் போனாள். வீடு அழகாக இருந்தது. சுவற்றில் அங்கங்கே ஏசுநாதர் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார்.
சோபாவைக் காட்டி ”உக்காருங்க..” என்றாள்.
அவன் உட்கார… கிச்சனைப் பார்த்து
”மம்மி..” என்று கீச்சுக் குரலில் கூப்பிட்டாள்.
உள்ளிருந்து அவளது அம்மா.. ”சொல்லு..” என்றாள்.
” குமுதக்கா தம்பி வந்துருக்காங்க..” என்று கிச்சனை நோக்கிப் போனாள்.
அவள் அம்மா வெளியே வந்தாள். பின்னாலயே இருதயா.
” வாப்பா..” என்று புன்னகைத்தாள் இருதயாவின் அம்மா.
சசியும் புன்னகைத்தான்.
”என்னப்பா நீ.. பெரிய ஆளா இருக்க போலிருக்கே..?” என்றாள்.
சொல்லி விட்டாளோ..?
”என்னங்க…?” தடுமாறினான்.
”நீ எங்கயும் வேலைக்கு ட்ரை பண்ணலையா..?”
” இல்லைங்க…”
”அதான் இப்படி…” என அவள் சொல்ல…
இருதயா. ”மம்மி.. சும்மாரு..” என்றாள்.
அவளது அம்மா.
”என்னப்பா இது..? எதுத்த வீட்டுக்கு.. புதுசா குடிவந்த.. ஒரு பொண்ணுகிட்ட இப்படியா.. பிஹேவ் பண்றது..?” என்றாள்.
தயங்கினான். ”இல்லீங்க… அது…”
இருதயா.
”மம்மி.. விடு ப்ளீஸ்..! அன்னிக்கு நா அவங்கள அப்படி சொன்னதாலதான்.. அவங்களும் என்னை டீஸ் பண்ணாங்க..! தப்புனு பாத்தா.. நான் பண்ணதுதான் தப்பு..! அத விட்டுட்டு அவங்கள மறுபடி டென்ஷன் பண்ணாத..! அவங்களுக்கு காபி குடு மம்மி ப்ளீஸ்..! இப்ப நாங்க ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்..” என்றாள்.
அவளது அம்மா.
” பொண்ணுப்பா..! பசங்க முன்னால அப்படி.. அன்டீசன்ட்டா பிஹேவ் பண்ணாத..! அது பாக்கறவங்களுக்கு தப்பா தெரியும்..! இவள கண்டிக்கறதா இருந்தா.. தனியா கூப்பிட்டு என்ன வேனா.. கேளு..! தப்பா எடுத்துக்காத..!” என்றாள்.
”ஸாரிங்க..”
” எனக்கு கோபம் இல்ல..! இவ ஒரு பொண்ணில்லையா.. அதான்..! உக்காரு டீ கொண்டு வரேன்..!” எனச் சொல்லி விட்டு அவள் உள்ளே போக… அவனைப் பார்த்து..
”ஸாரி…” என்றாள் இருதயா.
”வந்ததும் சொல்லிட்டியா..?”
மறுபடி ”ஸாரி..” என்று சிரித்தாள். ”என் மம்மிகிட்ட எல்லாமே சொல்லிருவேன்..”
”ஓ..! பிரெண்டு மாதிரி..?”
” ம்..ம்ம்..!”
”குட் பாலிஸி.. பட்…”
மீண்டும் ”ஸாரி…” என்றாள்.
”ம்..ம்ம்..! இட்ஸ் ஓகே..!” என்றான்.
இருதயாவின் அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள். தட்டில் ஸ்நாக்ஸ்..!
”இனிமே நல்ல.. பிரெண்ட்ஸா இருங்க..” என்று சொன்னாள்.
”ஷ்யூர்… ஆண்ட்டி..” என்றான்.
”வயசுப் பொண்ணில்லையா.. அதான் பயமாருக்கு..”
”ஸாரி ஆண்ட்டி.. இனிமே.. இப்படி எதுவும் நடக்காது..!”
காபி குடித்தவாறு சிறிது நேரம் பொதுவாகப் பேசினார்கள். இருதயா அம்மாவைப் போல.. நல்ல அழகியல்ல என்றாலும்.. குறைவில்லாத அழகு..!
மெலிந்த தேகம்தான்.. மேக்கப்பில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். முன் நெற்றி முடியைக் கத்தரித்து விட்டிருந்தாள். பின் பக்க கூந்தலையும் கட் பண்ணியிருந்தாள்.! புருவத்தை மிகவும் சன்னமாக ட்ரிம் பண்ணியிருந்தாள். சின்னக் கண்கள்..! பாலில் மிதக்கும் கருந்திராட்சை போன்ற.. விழிகள்.. பார்க்க அழகாக இருந்தது..! கொஞ்சம் நீண்டு விட்ட மூக்கு..! சதைப் பற்றற்ற கன்னங்கள்..! சிவந்த.. மெல்லிய அதரங்கள்.! வெண்மை நிறப் பற்கள்..! ஊசலாடும் காது வளையங்கள்..! தோற்றத்தில் சிறுமிப் பருவம் மாறாத முகம்..!! மெலிந்த.. அழகான கழுத்து..! அதில் சிலுவை டாலர்..! சின்ன.. குட்டி மார்புகள்..! நளினமான தோற்றம்..! அவளது பாதங்கள் வெளுப்பாகத் தெரிந்தது..!!
சசிக்கு.. இருதயாவின்.. மெல்லிய.. சிறுமிக் குரலும்.. பேசசும் மிகவும் பிடித்தது..!! அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு.. சசி எழுந்து விடைபெற்று வெளியேறினான்.
இடுப்பில் குழந்தையுடன்.. வெராண்டாவில் நின்றிருந்த.. குமுதா.. அவன் எதிர் வீட்டில் இருந்து வருவதைப் பார்த்து.. ஆச்சரியமானாள். அவளது பையன்.. தரையில் உட்கார்ந்து.. ஒரு காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். !
”என்னடாது.. எதுத்த வீட்லருந்து வரே..?” என்று கேட்டாள்.
புன்னகைத்தான்.
”காபி குடிக்க கூப்பிட்டாங்க..!”
”யாரு..?” அவள் கண்கள் விரிந்தது.
”இருதயா..!! ஷி இஸ் மை பிரெண்டு.. யூ.. நோ..?”
”எப்பருந்து…?”
”ஜஸ்ட்… நவ்..!!” என்று விட்டு.. நடந்ததை அவளுக்கு சுருக்கமாகச் சொன்னான் சசி…!!!!

குமுதா சிரித்தவாறு சன்னக் குரலில் கேட்டாள்.
”ம்.. அப்ப.. நெருங்கிட்ட..?”

அவள் பக்கத்தில் போய்.. குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினான் சசி.