மெய் மறந்தேன் – Part 1 124

”ஸோ…?”
”அட விடுங்கடா..” என்று அவனும் உட்கார்ந்தான்.
”எப்படி போகுது மச்சி.. லவ்வு..?” சசி கேட்டான்.
”முட்டலும்.. மோதலும்தான்டா..” என்றான் காத்து.
”அதான்டா காதல்..! முட்டலே இல்லாம போன அது.. மேட்டர்..!!” என்றான் பிரகாஷ். …!!!!

மாலை..! அதே பஸ் ஸ்டாப்பில் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தான் சசி.

ஸ்கூல்.. காலேஜ் விட்டு.. நிறைய பெண்கள்.. பையன்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான்.. இருதயாவும் பஸ் விட்டு இறங்கினாள். சசியை கிண்டல் செய்த.. பெண்..!
பஸ்ஸிலிருந்து இறங்கிய அவளை கவனித்த சசியை.. அவளும் அதே நேரம் கவனித்தாள்..! கீழே இறங்கி.. அவள் மறுபடி அவனைப் பார்த்தாள்.
”வா..!” என அவள் கண்களைப் பார்த்து தலையை ஆட்டினான்.
நின்று.. தனக்கு பின்னால் பார்த்துக் கொண்டாள்.
”உன்னத்தான்.. வா..” என்று அவள் காதில் விழும்படி கூப்பிட்டான்.
நண்பர்கள் எல்லோரும் அவளைப் பார்க்க.. லேசான தயக்கத்துடன் மெதுவாக நடந்து வந்தாள். அவள் முகத்தில் களைப்பு தென்பட்டது.
”எங்க போய்ட்டு வரே..?” சசி அவளைப் பார்த்துக் கேட்டான்.
குரல் உள் அமுங்க ”காலேஜ்..” என்றாள்.
”என்ன படிக்கற..?”
”பி எஸ் ஸி..”
”பர்ஸ்ட் இயரா..?”
” ம்..ம்ம்..!”
”என்ன குரூப்..?”
” கம்ப்யூட்டர் சயின்ஸ்..”
” ஏன் வேற எதுவும் கெடைக்கலியா..?” அவன் கேட்க… அவள் தயங்கினாள். அவள் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. சுற்றிலும் பார்த்தாள்.
சசி. ”பேர் என்ன..?” என்று கேட்டான்.
”இருதயா..?” என்று முனகலாகச் சொன்னாள்.
பிரகாஷ். ”கிரிஸ்டியனா..?” என்று கேட்டான்.
”ம்..ம்ம்..!” தலையாட்டினாள்.
சசியின் கணிப்பில் அவள் நாப்பது கிலோ தாண்ட மாட்டாள் என்று தோண்றியது.
”ஆமா நீ.. சாப்பிடவே மாட்டியா..?” என்று கேட்டான் சசி.
”சாப்பிடுவேன்..”
”என்ன.. ஒரு இட்லியா..?”
நண்பர்கள் கொல்லென்று சிரிக்க.. அவள் முகம் சிறுத்தது.
சசி ”சரி.. நீ என்ன வெய்ட் இருப்ப.?” என்று கேட்டான்.
பிரகாஷ் ”அப்படியே.. உன் ஹைட்டு.. வெய்ட்டு.. டைட்டு எல்லாம் சொல்லு..” என்றான்.
அவள் பயந்துவிட்டாள். அவள் கண்கள் மிரண்டன.
”என்ன.. ஒரு பாட்டி கே ஜி இருப்பியா..?” என்று கேட்டான் சம்சு.
நண்பர்கள் அனைவரும் ஆளாளுக்கு அவளை ஓட்டினார்கள்.
”ஏய்..” என குரலை உயர்த்தினான் சசி. ”என் கண்ண நல்லா பாரு..”
பயந்தவாறு பார்த்தாள். அவள் கண்களில் மிரட்சி நன்றாகவே தெரிந்தது. அவளது மெல்லிய உதடுகள் நடுங்கின.
”எப்படியிருக்கு..?” அவளையே கேட்டான்.
சிரிக்க முயன்று தோற்றாள்.
”நல்லா பாரு..! என் கண்ணு பொட்டையா..? எங்கே.. என் கண்ண நோண்டு பாக்கலாம்..?” என அவன் கடுப்புடன் சொல்ல… நண்பர்கள் சிரித்தனர்.
பயத்துடன் தலை குனிந்தாள் இருதயா. அவள் கண்கள் தழும்பத் தயாராகி விட்டது. சட்டென சம்சு அவளுக்காக பரிந்து பேசினான்.
”சரி.. சரி.. நீ போ..”
அவள் நகர… ”ஏய்..” என்றான் சசி.
அவனைப் பார்த்தாள்.
”என் பேரு தெரியுமா..?” என்று கேட்டான்.
”ம்..!” தலையாட்டினாள்.
”என்ன பேரு.?”
”ச.. சசி..குமார்…” அவள் குரல் பிசிறியது.
”குட்..!” அவன் மனது சிறிது இளகியது.
”இனிமே அப்படி பேசாத.. பேசினே.. மவளே.. தீத்துருவேன்..!”
அவள் தலையாட்டா… சம்சு
”விட்றா பாவம்.. அழுதுடப் போகுது..” என்றான்.
அவள் கண்கள் கொஞ்சம் கலங்கலாகத்தான் தெரிந்தது.
”சரி.. நாங்கள்ளாம்.. யாரு..? சொல்லு..?” என்று கேட்டான் சசி.
”பா.. பாய்ஸ்..” என முனகினாள்.
”அதுசரி.! நீ சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்கனுமாக்கும்..? இனிமே உன் பிரெண்ட்ஸ்..! ஆழாத.. கண்ணைத் தொட..!” என்றான்.
கைக் குட்டையால் கண்களைத் துடைத்து சர்ரென மூக்கை உறிஞ்சினாள்.
”பயந்துட்டியா..?” கனிவான குரலில் கேட்டான் சசி.
‘இல்லை ‘ என தலையாட்டினாள்.
”இப்படி பயந்து அழக் கூடாது..! எங்க பாத்தாலும் பேசனும் என்ன.? இனிமே நாம பிரெண்ட்ஸ்.. ஓகே..?”
”ம்..ம்ம்..”
” குட்…போ..!!” என்றான் சசி.
விட்டால் போதும் என்பது போல ஓடினாள் இருதயா. அவள் போனபின் சொன்னான் சம்சு.
”ஆனாலும்.. நீ ரொம்பத்தான்டா.. மெரட்ற..?”
”என்னைப் பாத்து.. அவ பொட்டக் கண்ணானு சொல்றா..? எத்தனை திமிரு அவளுக்கு..? நம்மள பத்தி.. சரியா தெரியல அவளுக்கு..! அதான்..! நாம யாருனு காட்ட வேண்டாமா..?” என்றான் சசி.
மேலும் ஒரு மணிநேரம் கழித்து.. குமுதா வீட்டுக்குப் போனான் சசி. மாடி வெராண்டாவில் தென்பட்டாள் இருதயா. அவனே முந்திக் கொண்டு..
”ஹாய்..” சொன்னான்.
அவளும் மெல்லச் சொன்னாள்.
”ஹாய்..”
அருகில் போனான்.
”பயந்துட்டியா..?”
”இ.. இல்ல..!” சிரித்தாள். ”அன்னிக்கு நா சொன்துக்கு ஸாரி. .”
”பரவால்ல.. உங்கம்மா..?”
”இருக்காங்க..! காபி குடிப்பிங்களா..?” என்று கேட்டாள்.