நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

அவள் கையை இருக்கினான். ”என்னை மன்னிச்சிரு உமா..!!”

” பரவால்லப்பா…”

மௌனமாக காபி குடித்த பின்… காலி டம்ளர்களை எடுத்துப் போய்.. கழுவி வைத்தாள் உமா.
மறுபடி… சோபாவை அடைந்து… அவனை.. அணைத்து உட்கார்ந்தாள்..!!

”என்மேல.. கோபமா உமா..?”

”சே… சே..!! இதுல கோபப்பட என்ன இருக்கு..?”
” உன் வாழ்க்கைல.. நானே.. ச்ச..!”

விரக்தியாகச் சிரித்தாள்.

அவளை இருக்கமாக அணைத்து.. அழுத்தமாக முத்தமிட்டான்.
”ஐ லவ் யூ.. உமா..!”
”சோபாவே போதுமா..?”
”எதுக்கு…?”
”என்ஜாய் பண்ண..?”
”இப்பயா..?”
” ம்..ம்..!!”
” எப்படி…உமா…?”
” ஏன் கார்த்தி..?”
”ச்ச..!! எனக்கு… மனச.. அறுக்குது.. உமா…!!”
” யேய்… என்ன நீ.. இவ்வளவு பீல் பண்ணிட்டு..? இட்ஸ் ஓகேப்பா..!!”
” ம்கூம்… இப்ப… என்னால முடியாது..உமா..”
”வருத்தப்படறதுல.. இப்ப என்ன மாறிடப் போகுதுன்னு நெனைக்கற.. நீ..? இல்ல அதுக்கு என்ன யோக்யதை இருக்கு.. எனக்கு..? எதுவும் இல்லை..! இது என் விதி..!!”

அவளது ஆறுதல் வார்த்தைகள் எதுவும் அவனை உற்சாகபபடுத்தவில்லை…!!

அந்த கிளினிக்.. உமாவுக்கு மிகவும் பழக்கமானது. அந்த லேடி டாக்டர்கூட.. முன்பே பழக்கமானவள்தான். எந்த பிரச்சினையும் இலலாமல்… சுலபமாகக் கலைத்துக் கொண்டாள் உமா..!!

ஒரு வாரமாகி விட்டது. ஊருக்குப் போன கார்த்திக்… மறுவாரம்… உமாவின் வீடு தேடி வந்தான். வேலை முடிந்து வந்த உமா… உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த.. அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

”வா.. கார்த்தி..!!” அவனை புன்சிரிப்புடன் வரவேற்றாள் உமா.
”எப்படி இருக்க.. உமா..?”
” ஓகே..!! ஊர்ல.. எல்லாம் எப்படி இருக்காங்க..?”
” பைன்…! வாயேன் வெளில போலாம்..!!”
” உக்காரு… இப்ப கெளம்பிர்றேன்..!!” என்றுவிட்டு.. புறப்படத் தயாரானாள்.

உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்த… அவளது அம்மாவுடன் பேசினான் கார்த்திக்.

பத்தே நிமிடத்தில்.. அவனோடு கிளம்பி விட்டாள் உமா.

ஊரைத்தாண்டி இருந்த.. ஒரு காலி கிரௌண்டுக்கு கூட்டிப்போனான்.

”இது என்ன விந்தை கார்த்தி..?” லேசான வியப்புடன் கேட்டாள் உமா.
சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான் ”பேசனும் உமா..”
”சரி.. அதான்.. உன் வீடு இருக்கே…? ஒருவேள.. உன் வொய்ப் வந்துட்டாங்களோ..?”
” இல்ல… ஆனா… அவளுக்கு நம்ம மேட்டர் தெரிஞ்சு போச்சு..” என்றான்.

திடுக்கிட்டாள் உமா. ” எ.. எப்படி..கார்த்தி..?”
”அது.. தெரியல..உமா.! என் வீட்டுப்பக்கத்துல.. யாராவது நம்மள… கண்கானிச்சிருக்கனும்..”
”அப்பறம்..?”
” பிரச்சினை.. பெருசாகிருச்சு..”

அமைதியாக அவனைப் பார்த்தாள் உமா. உள்ளுக்குள் எதுவோ உடைந்தது.

சிறிது நேரம்.. அவனுடைய மனைவி பேசியதைச் சொன்னான். அவனது சூழ்நிலையைச் சொன்னான்.
இறுதியாக…
”அவளை நான்..சமாதானப் படுத்திருவேன்..!! ஆனா.. உனக்கு என்ன சமாதானம் சொல்றதுனுதான்… எனக்கு தெரியல…!!”என்றான்.

பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு.. சொன்னாள் உமா. ”இத்தனை நாள்.. உன்கூட பழகினதே.. எனக்கு கெடைச்ச.. பாகயம்னுதான் நெனைக்கறேன் கார்த்தி..!! போதும்… எனக்கு இந்த சந்தோசம் போதும்…!! இனிமே.. உன் வாழ்க்கைல குறுக்க வரமாட்டேன்..!!”

அவள் கையைப் பிடித்து அழுத்தினான்.
”ஸாரி உமா.. எனக்கு வேற..வழி தெரியல..!”