நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

” வஞ்சனாகிட்ட பேசனும்..”

”நா.. ரெடிடா…!!”

” நீ… இல்ல..! நான் பேசனும்..?”

”அப்ப போய் பேசு…”

” ஆனா.. அவ பேசமாட்டேங்கறாளே..? கீர்த்தனா வேற… ஒரு மாதிரி சொல்றா…!! எனக்கு என்ன பண்றதுனு…ஒன்னுமே புரியல..”

” கீர்த்தனா மட்டுமில்ல.. நானும்தான் சொல்றேன்..”

”என்ன…?”

” அவ.. உனக்கு செட்டாக மாட்டானு தெரிஞ்சா..விட்று..!!”

”என்னடா…நீயும்…?”

”அவகிட்ட போன் இருக்கா..?”

” ம்கூம்… இல்ல…”

” என்னடா பொண்ணு அவ..? ஒரு போனுகூட வெச்சுக்காம..? சரி… இப்படி பண்ணு…!!”

”எப்படி…?”

”லெட்டர் எழுதிறு..”

”லெட்டரா…?”

”ம்..! இப்ப உனக்கிருக்கற ஒரே வழி… இதான்..!”

யோசித்து…” ஆனா..அவகிட்ட எப்படிடா…அத குடுக்கறது..?” என்றான் தாமு.

”கீர்த்தனா எதுக்கு இருக்கா..? அவள புடி…காரியமாகிரும்..!!” என்று.. மேலும் ஆலோசணை வழங்கினான் சரவணன்..!

மறுநாள்….!!
விடுமுறை நாள்…!!
சரவணன் சொன்னது போல.. ஒரு முடிவுக்கு வந்தான் தாமு.!
கடிதம் எழுதினான். அதைக்காட்ட… சரவணனிடம் எடுத்துப் போனான்..!
வழியில்…மளிகைக்கடையில் நின்றிருந்த.. கீர்த்தனாவைப் பார்த்ததும்… நடந்துகொண்டிருந்தவன்.. சட்டென நின்று விட்டான்.

வீதியின் ஓரமாக வந்து கொண்டிருந்த ஒரு நாய்… அவன் நின்றதைப் பார்த்து..அதுவும் சட்டென நின்றுவிட்டது..! ஓடுவதற்குத் தயாரான நிலையில் நின்று கொண்டு.. அவனை சந்தேகமாகப் பார்த்தது..!
‘அடிப்பானோ…?’

ஏதேச்சையாகத் திரும்பிய கீர்த்தனா… அவனைப் பார்த்தாள். அவள் வதனத்தில் புன்னகை மலர்ந்தது.

அவளிடம் போனான்.
”என்ன வாங்கறே…?”

” சோப்பும்… ஷாம்ப்பும்..! நீ என்ன வாங்கறே..?”

” நா.. வாங்க வல்ல..! சும்மா..!”

”சும்மா கடைக்கு வந்தியா..?”

”உன்ன பாத்துட்டு.. வந்தேன்..!!”

”ஓ…கோ..!!” என்று சிரித்தாள் ”அப்றம்…?”

”வாங்கிட்டு..வா..!!”என்றான்.

” பேசனுமா…?”

”ம்…!!”

சிரித்தாள்..”நில்லு… போலாம்..” என்று திரும்பி கடையில் வாங்கினாள்.

காத்திருக்கும் நேரத்தில்… அவளைக்கவனித்தான் தாமு.

5

பழைய சுடிதார் ஒன்றைப் போட்டிருந்தாள்.!
இவளும்.. ஒரு நல்ல.. அழகுள்ள பெண்தான்..! ஆனால் கொஞ்சம் ஒல்லி..!!
நல்ல நிறமாக இருந்தாள்…! ஆனால் எடுப்பாக இல்லை…!!
அழகான உதடுகள்… ஆனால்… கொஞ்சம் நீண்டுவிட்ட மூக்கு…!!
சின்ன மார்பும்… சிறுத்த இடையுமாக… கொத்தவரங்கா போலிருந்தாள்..!!
ஆனால் நன்றாக வேலை செய்வாள்..! அனாவசிய வம்புகள் கிடையாது..!!

கீர்த்தனா வந்து.. ”போலாமா..?” என்றாள்.

அவளுடன் நடந்தான்.

”வீட்ல யாரு இருக்கா..?” கீர்த்தனாவைக் கேட்டான்.

”யாருமில்ல.. ஏன்..?”

”கேட்டேன்…! என்ன பண்ணிட்டிருந்த..?”

”இவ்ளோ நேரம் ஹோட்டல்ல இருந்தேன்..! குளிக்கலாம்னு இப்பத்தான் வர்றேன்..!! வாயேன் வீட்டுக்கு..?”

”ம்..!!”

பொதுவான பேச்சுக்குப்பின் கேட்டான்.
”நெஜமா.. உனக்கு தெரியாதா..?”

அவனைப் பார்த்தாள் ”என்ன..?”

”வஞ்சனா… ஏன் காலேஜ் போறதில்ல…?”

”எனககென்னப்பா…தெரிஞ்சா சொல்ல மாட்டனா..?”

”நீயாவது என்னைப் புரிஞ்சுக்கோ கீர்த்தனா…” என்று வருந்தும் குரலில் சொன்னான்.

அவனைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டாள் ”என்னை லவ் பண்ணச் சொல்றியா..?”

”சே..!!” என்றான். அவள் காமெடியை ரசிக்காமல் ”அப்படி வீட்ல என்னதான் பண்றா..?”