நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

புத்துணர்ச்சியோடு… வீட்டுக்குள் போய்.. சேரில் உட்கார…

” சாப்பாடு செஞ்சிட்டேன்..! சாப்பிடுட்டுக்க..” என்றாள் அம்மா.

” ம..!!” என்றுவிட்டு… ஊர் நிலவரம் பற்றி விசாரித்தாள்.

பொதுவாகச் சொல்லி முடித்த அம்மா…
” எல்லாருமே.. என்னை திட்னாங்க..” என்றாள்.
” உன்னைவா… ஏன்…?”
”உனக்கு இன்னும் கல்யாணம் பண்ணலேன்னுதான்..”

இகழ்ச்சியான ஒரு.. புன்னகையைக் காட்டினாள் உமா.

”உன்ன.. பொண்ணு பாக்க.. ஆள் அனுப்பறதா சொன்னா.. உன் சித்தி..” என மெதுவாகச் சொன்னாள் அம்மா.
” அனுப்பி…?”
” புடிச்சா.. கல்யாணம் நடக்கும்..”

சட்டென ஒரு எரிச்சல் மூண்டது. அம்மாவை முறைப்புடன் பார்த்தாள்.

அம்மா இருமிவிட்டு… ”நல்ல எடம்.. நானும் பாத்து பேசினேன்..! எனக்கும் புடிச்சுது.”
”என்ன புடிச்சுது..?”
” பையன்…வீடு…வாசல்.. எல்லாம்..!”
”ஓ..! அப்ப நீ.. என் கல்யாண விசயமாத்தான்..உன் தங்கச்சிகூட.. ஊருக்கு போயிருக்க..?”
”உன்.. சித்திதான் சொன்னா..”
”சரி… பணத்துக்கு என்ன பண்ணுவ..?”
”ஏதாவது பண்ணலாம்..!”
”ஏதாவதுன்னா…?”
”……”
” இங்க…பணம்..நகையெல்லாம் நெறஞ்சு கெடக்குனு நெனப்பா..?”
” கடன் வாங்கி.. பண்ணினா.. கெடக்குது..”
”கட்றது யாராம்..?”
”அதெல்லாம்.. உன் சித்தி.. பாத்துப்பா..”
” எப்படி… எல்லாம் உன் தங்கச்சி செலவா..?”
”இல்ல… கடனாத்தான்..”
”எவ்ளோ…?”
”ஆகற செலவெல்லாம் பண்ணுவா..!! மொத்தத்துல.. உன் கல்யாணம் நடக்கும்..!!”
”நடக்காது..!!” என எரிச்சலோடு சொன்னாள் உமா.

அம்மா திகைப்புடன் பார்த்தாள்.
”ஏன்டி… அப்படி சொல்ற..?”
” கடன்… வாங்கிட்டு..? கட்றது.. யாரு..?”
” அவசரமில்லே..! மெதுவ்வா.. கட்னா போதும்…”
” மெதுவ்வ்வ்வா கட்னாலும்.. அதுவும் என் தலைலதான விடியும்…?”
”அவங்க… வரட்டும்…! உன்ன புடிச்சுட்டா.. எல்லாம் நல்லதா நடக்கும்…”
” புரியாம பேசாத..! அவங்க வந்து அசிங்கப்படறத விட.. வராம இருக்கறதே நல்லது..! யாரும் சிபாரிசு பண்ண வேண்டாம்னு சொல்லிரு..!”
”ஏன்டி… உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாமா..?”
கடுப்பாகிவிட்டாள் உமா ”இனிமே.. எவனும் வந்து.. எனக்கு புருஷன்னு.. சொல்லிக்க வேண்டியதில்ல..” என்றாள்.

தாமு மெதுவாக”ஏன் கல்யாணமே வேண்டாங்கிறே..?” என்று கேட்டான்.

அவனை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தாள் உமா. பேசாமல் தலை குணிந்து எழுதத்தொடங்கினான் தாமு.

அம்மாவைப் பார்த்தச் சொன்னாள் உமா.
”சரி… அப்படியே நான் கல்யாணம் பண்ணிட்டு… புருஷன் வீட்டுக்கு போய்ட்டேன்னு வெச்சிக்க… நீங்க ரெண்டு பேரும் என்ன செய்வீங்க..? பிச்சை எடுக்க வேண்டியதுதான்..!”
” ஆண்டவன் அதுக்கொரு வழி பண்ணாமயா போவான்..?”
” உம்… கூதில பண்ணுவான்..” குமைந்தாள் உமா ”கடவுள் வழி பண்றானாம்.. வழி..! பாத்துட்டுதான இருக்க… ஆண்டவன் பண்ற வழியை..? ”
”என்மேல ஏன்டி.. எரிஞ்சு விழற…?” கண்கலங்கினாள் அம்மா ”ஏதோ உன் சித்தி ஆசைகாட்டினா… அந்த நப்பாசைல.. நானும் உன்கிட்ட வந்து பேசிட்டேன்.. உன் தலைல என்ன எழுதியிருக்கோ.. அதான நடக்கும்…!”
” ம்…! அப்படினு நெனச்சுட்டு மூடிட்டு இரு..!! உங்க ரெண்டு பேரையும் நடுத்தெருவுல விட்டுட்டுத்தான் நான்.. சந்தோசமா இருக்கனும்னு நெனச்சிருந்தா..இன்னிக்கு இல்ல… அத.. ஏழெட்டு வருசத்துக்கு முன்னாலயே செஞ்சிருப்பேன்..!! சொந்த பந்தமெல்லாம் ஏதோ.. ஒரு கொஞ்ச நாளைக்கு நல்லாருக்கும்..! உன் தங்கச்சியும்… அப்படி ஒன்னும் வசதியானவ இல்ல… உன் குடும்பத்தை தாங்கறதுக்கு..!!”