நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

”இ… இல்ல… வந்து..” தொண்டை உலர்ந்தது. கை.. கால்கள் உதறலெடுத்தது..!
அவளது வழி.. பக்கம் வந்து விட்டது..!

”என்ன தாமு…?”என்றாள்.

”வ..வந்து… நான்… உங்ககிட்ட… உங்கள…” நாக்கு குழறியது.

”ஹா..ஹா..!! லவ் பண்றீங்க.. அதானே…?” பட்டென்று கேட்டாள்.

திடுக்கிட்டு…பின்.. திகைத்து…”ஆ.. ஆமா…” என்றான்.

புன்னகை முகத்துடன் நடந்தாள் வஞ்சனா.

”எ.. எனக்கு… உங்கள… ரொமபமே புடிச்சிருக்கு…” என்று அவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல்… அவளது வழியில் பிரிந்து நடந்தாள். வழக்கமாகச் சொல்லும் ‘பை ‘கூட சொல்லவில்லை.

”வ…வஞ்சனா…” என்றான்

திரும்பி.. புன்னகை தவழ.. ”பை.. தாமு..” என்று கையசைத்து டாடா காட்டி விட்டுப் போனாள்..!!

இதற்கு என்ன அர்த்தம்..? ஒன்றும் புரியவில்லை..அவனுக்கு..!

அவன் அப்படியே.. திகைப்புடன் நின்றிருக்க.. ஆட்டோ ஒன்று அவனைக்கடந்து போனது.!
அதன் பின் பக்க வாசகம்…
”சீறும் பாம்பை நம்பு… சிரிக்கும் பெண்ணை நம்பாதே.” என்றது..!

மறுநாள் காலையில்… பஸ் ஸ்டாப்பில் கீர்த்தனா மட்டும் தனியாக நின்றிருந்தாள்..! வஞ்சனாவைக் காணவில்லை..!! ஒரு வித ஏமாற்றத்துடன்.. கீர்த்தனாவிடம் கேட்டான் தாமு.
”வஞ்சனா..வல்ல…?”

”ம்கூம்… வரல..?” என்றாள் கீர்த்தனா.

”ஏன்.. என்னாச்சு..?”

”தெரியல…”

தாமு கவலையானான். திரும்பித் திரும்பிப் பார்த்தான்.!

அவன் பக்கத்தில் நெருங்கி நின்று கேட்டாள் கீர்த்தனா.
”சொல்லிட்டியா… அவகிட்ட..?”

”ம்..! நேத்துதான்.. சொன்னேன்..”

சிரித்தாள் ”ஓ..! அதான் வரல..! என்ன சொன்னா.. அவ..?”

”ஒன்னுமே சொல்லல.. பேசாம போய்ட்டா…” என்றான் கவலையோடு…!

வேன் வந்து விட்டது.
”சரி.. நா போறேன்…” என்றுவிட்டு… கீர்த்தனா வேனில் ஏறிப் போனாள்..!
அவள் போன பின்னும் காத்து நின்றான் தாமு. வஞ்சனா வரவே இல்லை.
மனசு வலித்தது.. அவனுக்கு..!

அன்று மட்டுமல்ல.. அதேபோல் தொடர்ந்து இரண்டு நாட்களாக.. அவளைப் பார்க்க முடியவில்லை.!

மூன்றாவது நாள்.. மாலை வேலைமுடிந்து..கம்பெனியை விட்டு வெளியேறும்போது… கீர்த்தனாவிடம் கேட்டான் தாமு.
”வஞ்சனாக்கு.. என்னாச்சு..?”

அவள் வெளியே நின்றிருந்த வேனுக்கு நடந்து கொண்டே.. ”ஒன்னும் ஆகலையே..” என்றாள்.

”இல்ல.. இந்த ரெண்டு மூனு நாளா… அவ வரவே இல்ல..?”

”எனக்கு தெரியலப்பா..! நானும் அவள பாக்கவே இல்ல…!”என்று அலட்சியமாகச் சொன்னாள்.

” நீ.. நெனச்சா.. எனக்கு கைஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்..”

”என்ன…?”

”வஞ்சனாவ பாத்து… என்னாச்சுனு..? எனக்காக.. ப்ளீஸ்…?”

”ஏன்.. நீயே போறதுதானே..?”

”ரெண்டு நாளா.. போனேன். ஆனா அவளப்பத்தி.. ஒன்னுமே தெரிஞ்சுக்க முடியல..! ப்ளீஸ்.. கீர்த்தி..” அவன் கெஞ்ச…. கொஞ்சமாக மனமிறங்கினாள்.

” ம்..சரி…!”

2

”நான் வரட்டுமா…?”

” எங்க…?”

” உன் வீட்டுக்கு…?”

”எதுக்கு…?”

” இ..இல்ல..! வஞ்சனாவப் பத்தி தெரிஞ்சுக்கத்தான்..!!”

”வேண்டாம்..” என்றாள் ”நாளைக்கு நானே வந்து சொல்றேன்..!!” என்று ஓடிப்போய் வேனில் ஏறினாள். அவளது துப்பட்டா தோளிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
தாமு போய்… அதை எடுத்துக் கொடுத்தான்..!!

வீட்டில் உமா.. வந்திருக்கவில்லை.! வீட்டில் இருக்க தாமுவுக்கு மனசு இருப்புக் கொள்ளவில்லை.! கீர்த்தனாவின் வீட்டுக்குப் போனான்.! அவளது அம்மா வீட்டின் முன்னால் நின்றிருந்தாள்.!

”வாப்பா..”என்றாள் ”நல்லாருக்கியா..?”

” இருக்கங்க்கா…” சிரித்தான் ”நீங்க கடைக்கு போகலியா..?”

”போகனும்.. !! கீர்த்திய பாக்கவந்தியா..?”

”இருக்குங்களா..?”

” ம்.. உள்ளதான் இருந்தா..” என்று விட்டு வீட்டூக்குள் பார்த்தக் கூப்பிட்டாள் ”கீர்த்தி.. கீர்த்தி..”

வெளியில் வந்த கீர்த்தனா.. நைட்டியில் இருந்தாள். தாமுவைப் பார்த்துச சிரித்து..
”நீயா… வா…” என்றாள். அவளது தலைமுடி கலைந்திருந்தது..!

அவளது அம்மா ”உள்ள போப்பா..” என்றுவிட்டு.. கீர்த்தனாவிடம் ”சைலுவ கூட்டிட்டு.. எட்டு மணிக்கு வாடி..” என்று விட்டுப் போனாள்.

கீர்த்தனா ”அப்றம்.. என்ன இந்தப் பக்கம்..?” என எதுவும் தெரியாதவள் போலச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

தாமு தயங்கி..”வஞ்சனாவ.. பாத்தியா..?” என்று வஞ்சனாவின் வீட்டைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.

”ம்…பாத்தேன்..” என்றாள் கீர்த்தனா.

ஆர்வமானான் ”என்னாச்சாம்..?”

”ஒன்னும் ஆகல..!” என்றாள் ”லீவாம்..”

”எ.. என்ன லீவ்..?”

”ஊருக்கு போய்ட்டாளாம்..”

”ஓ..! இப்ப வந்தாச்சு இல்ல..?”

”ம்.. வந்துட்டா..! சரி.. உள்ள வா.. உக்காந்து பேசலாம்..’ என்று விட்டு முன்னால் போனாள்.

தயங்கிவிட்டு… வஞ்சனாவின் வீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. உள்ளே போனான். கீர்த்தனாவின் தங்கை… சைலஜா முன்நெற்றி முடி..முகத்தில் விழுந்து… கண்ணை மறைக்கக் குணிந்து எழுதிக்கைண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகை காட்டினாள்..!