சுய நிலைக்கு வந்த விஸ்வா, “ஹெல்லோ கர்னல்! எப்படி இருக்கீங்க?”
டாக்டர்-கர்னல் மதுசூதன், “I am fine. நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?”
விஸ்வா, “நான் நல்லாத்தான் இருக்கேன் கர்னல்” என்றவன் மேலும் தன்னைப் பற்றிய பேச்சை வளற்காமல் தொடர்ந்து, “நீங்க ரிடையர் ஆனதாக் கேள்விப் பட்டேன். இப்போ எங்கே இருக்கீங்க?”
டாக்டர்-கர்னல் மதுசூதன், “Right here in Bangalore. இங்கே செட்டில் ஆகி ஆறு மாசம் ஆச்சு. திடீர்ன்னு உன் ஞாபகம் வந்தது. உன் கிட்ட பேசலாம்ன்னு கூப்பிட்டேன். ஈவ்னிங்க் ஃப்ரீயா?”
விஸ்வா, “ஃப்ரீதான் சொல்லுங்க”
டாக்டர்-கர்னல் மதுசூதன், “O.k meet me at 7 pm at Pipers Pavilion”
விஸ்வா, “You mean at R.S.I?”
டாக்டர்-கர்னல் மதுசூதன், “Where else in the world will there be a non-smoking air-conditioned bar with such a name?”
வாய் விட்டுச் சிரித்த விஸ்வா, “O.k Sir. See you at 7”
இன்றும் இளைய தலைமுறையினர் பெங்களூரில் செல்ல வேண்டிய ஒரு முக்கியக் கேளிக்கைத் தலமாகக் கருதப் படும் பிரிகேட் ரோட்-எம்.ஜி ரோட் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டது R.S.I. அப்படி சுருக்கமாக அழைக்கப் படும் ராஜேந்திர சிங்க்ஜி இன்ஸ்டிட்யூட் ராணுவ உயர் அதிகாரிகளுக்கென அமைக்கப் பட்ட ஒரு க்ளப். ராணுவத்தில் பணி புரியும்
உறுப்பினராக சேர்ந்தாலும் ராணுவத்தில் இருந்து விலகிய பிறகும் அவர்களது உறுப்பினர் நிலை நீடிக்கும். பல விளையாட்டு வசதிகளைத் தவிற பல பார் வசதி கொண்ட ரெஸ்டாரண்டுகளும் இதில் அடக்கம்.
வெளி வாசலில் இருந்த ராணுவ வீரனுக்கு காரில் இருந்தபடி விஸ்வா தன் அடையாள அட்டையைக் காட்ட அவன் விரைப்புடன் நின்று உள்ளே செல்ல அனுமதித்தான். பயிற்சி முடிந்து ராணுவத்தில் சேர்ந்த முதல் மாதத்தில் தன் குடும்பத்தினரை அங்கு ட்ரீட் கொடுக்க அழைத்து வந்த போதும் இவ்வாறு நடந்தது. அதைக் கண்ட அவன் தந்தை “நான் எத்தனை வருஷம் இந்த மெடிக்கல் ஃபீல்டில் குப்பை கொட்டினாலும் இந்த மாதிரி மரியாதை எனக்குக் கிடைக்காது. I am proud of you my son” என்றது அவன் நினைவுக்கு வந்தது.
அதன் பிறகு வனிதாவை அழைத்து வந்து பல மாலைப் பொழுதுகளை அங்கு களித்ததும் அவன் மனத் திரையில் தோன்றியது. உடன் மனத்தில் சில நாட்களாக மறைந்து இருந்த வலி குடி புகுந்தது. பல நாட்களுக்கு முன்னர் தனக்கு நல்ல நண்பராக, ஆலோசகராக இருந்து நல் வழி காட்டிய கர்னல் மதுசூதனை சந்திக்கப் போவதை நினைத்து அந்த வலியை ஒதுக்கித் தள்ளி மனத்தில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான்.
