உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

” இல்லே..” விழிநயா சொன்னாள். ”கொழந்தைகளக் கொண்டு போய் அவ மாமியா வீட்ல விடறாளாம். மாமியா வீட்ல பத்து நாள். .. கொழுந்தனார் வீட்ல பத்து நாள். . நாத்திவீட்ல பத்து நாள்னு இருக்கனுமாம்..”
” ஓ..! அப்ப உன் கொழந்தைங்கல.. உன் மாமியா வீட்ல…?”
”ஐயோ கண்டிப்பா கொண்டு போய் விட்டே ஆகனும். . இல்லேன்னா அவ்வளவுதான்.. உங்கம்மா வீட்டுக்கு மட்டும்தான் போகனுமா.. எங்கம்மா வீட்டுக்கு போகக்கூடாதானு… அவரு எங்கூட சண்டைக்கு நிப்பாரு.”என்றாள் விழிநயா.

மறுநாள்… காலை நேரத்திலேயே… தன் மகள்…மற்றும் பேரன்.. பேத்திகளைப் பார்க்க வந்து விட்டார். மிருதுளாவின் கணவர்.! குழந்தைகள் இருந்ததால் வீடே கலகலப்பாக இருந்தது.! விழிநயாவின் குழந்தைகளுக்கு. .. விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் நிறையவே வாங்கிக் கொடுத்தான் நந்தா.!

அன்றைய மாலை.. பூரணியுடன் பேசினான் நந்தா.
”விழிநயா அக்கா வந்துருக்காங்க போலருக்கு. .?” எனக் கேட்டாள்.
” ம்..! லீவ்ல வந்துருக்காங்க..”

சிறிது நேரம் பொதுவாகப் போசிக் கொண்டிருந்து விட்டு
”என்ன. . யோசிச்சிங்களா..?” எனக் கேட்டாள் பூரணி.
” ம்…ம்…” எனச் சிரித்தான்.
” என்ன முடிவு ..?”
” மூணாவது ஆள்ங்கறப்ப… ஒரு மாதிரி கில்ட்டியாதான் இருக்கு.! ஆனாலும் ஓகே. .! என்கூட ஜாலியா… பேசி.. பழகுவீங்க இல்ல. .?”
” ஷ்யூர். .. ஷ்யூர். .”
” டேட்டிங் வருவீங்கள்ள. .?”
” ஹ்.. ஹா…! ” எனச் சத்தமாகவே சிரித்தாள். ”மொத லவ் பண்ணலாம்… அப்பறமா.. டேட்டிங் பத்தி யோசிக்கலாம்.”
”நீங்க ஒரு வித்தியாசமான பொண்ணுதான்..” நிறையவே பேசிக்கொண்டார்கள். கைபேசி எண்கள் பறிமாறிக்கொண்டார்கள்.!

☉ ☉ ☉

” லூசுப் பெண்ணே… லூசுப் பெண்ணே…” எனத் தன் கைபேசி சிணுங்க… போர்வைக்குள் முடஙகிக் கிடந்த நந்தா…. சோம்பலோடு புரண்டு கை பேசியை எடுத்தான். பூரணி..!
” ஹாய்… மை ஸ்வீட் ஹார்ட்.. குட் மார்னிங்..” என வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் சொன்னான்.
” குட் மார்னிங்… டியர்..! எழுந்துட்டாச்சா..?” கொஞ்சும் குரலில் கேட்டாள் பூரணி.
”ஓ… யெஸ்..”

தடாலென எழுந்து.. எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தான் சாத்தியிருந்தது.
”வேர் ஆர் யூ.?”
” ஆண்ட்டி வீட்ல.. நேத்து நைட்.. சும்மா.. ஆண்ட்டிய பாக்க வந்தேன்… தங்க வெச்சிட்டாங்க…”
” ஓ..! அப்ப. .வேலை. .?”
” இங்கருந்தே கெளம்பிருவேன்.”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.