உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

”உன் மனச நா… ஹர்ட் பண்ணிட்டேன்..”
” சே… சே.. அதெல்லாம் இல்ல”
”இல்ல. . நீ நெனைக்கலாம்.. இவளை லவ் பண்ணப்பதான் இவ ஏத்துக்கல.. இப்ப எவளையோ லவ் பண்ணதும் புடிககாம… நா ஏதோ பொறாமைல… பூரணி பத்தி தப்பா சொன்னதா…”
”சத்தியமா நா அப்படி எதும் நெனைக்கல விழி..”
” இப்பதான் எனக்கு நிம்மதி. . சரி நா போறேன்..?”
” ம்..!”
”குட் நைட்…”
” குட்நைட்..” சிரித்துக்கொண்டே வெளியே போனாள் விழிநயா.!!

அடுத்த நாள். . ஊருக்குப் போய்விட்டாள் விழிநயா. அன்று மாலை..! மிருதுளா சமைத்துக் கொண்டிருந்த போது.. ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது எட்டிப் பார்த்தாள்.!

அவளது கணவன்.. ! ஒரு கணம் சுர்ரென்று கோபம் வந்தது. கணவனை மதிக்காமல் தனது வேலையில் ஈடுபட்டாள். நந்தா அவளது கணவனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

டிபன் சாப்பிடும்போது… வேறுவழியில்லாமல் கணவனுக்கும் பறிமாற வேண்டிருந்தது. நந்தா முன்பு அவனை அவமதிக்க விரும்பவில்லை.
அவளது கணவன்.. நந்தாவுடன் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது. அவளது கணவனின் இளம் மனனவி… ஊருக்குப் போய் விட்டாளாம். அவள் வருவதற்கு இன்னும் ஒரு வாரமாகுமாம்.. அதனால் இங்கு தங்கப்போகிறார்.!!

இரவு.!
”மிருது.. ” கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அவளைக் கூப்பிட்டான்.
தரையில்.. பாய்விரித்துப் படுத்திருந்த மிருதுளா பேசவில்லை.
”என்மேல இருக்கற கோபம் இன்னும் தீரலையா உனக்கு.?”

அதற்கும் அவள் பேசவில்லை. சிறிது நேரம் அமைதி.!
மறுபடி கணைத்துக் கொண்டு. .
” சந்தோசமாத்தான இருக்க..?” எனக் கேட்டான்.
”அடுத்தவங்கள நம்பி வாழாத வரைக்கும். . என் சந்தோசத்துக்கு எந்தக் கொறைச்சலும் வராது. ” என்று வெடுக்கெனச் சொன்னாள்.
”ரொம்ப சரி.. ரொம்ப சரி..!”

சிறிது மௌனம்.
”உன் கோபம் நியாயமானதுதான்.. ஆனா. .”
” அந்தப் பேச்சு. . எதுக்கு இப்போ..?” கோபமானாள். ”மனுஷியை நிம்மதியா இருக்க விட்டா தேவலை.. உபயோகம் இல்லாவிட்டாலும் உபத்ரவம் இல்லாம இருக்கனும். .”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.