உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

டைவர்ஸ்தான் பண்ணப் போகுதுக… அப்பறம் எதுக்கு. .. அதுகளுக்கள்ளாம்.. கல்யாணம்.. கண்றாவினு பண்ணிட்டு. ..? அமெரிக்கா கலாச்சாரப்படி.. புடிக்கறவரை ஒருத்தனோட இருக்கட்டும். .. எப்ப புடிக்காம போகுதோ.. அப்ப வெலகிடட்டும்..! இதுக்கு நடூல அவசியப்பட்டா… குழந்தை பெத்துக்கட்டும்… ! இப்படி ஒரு ரெண்டு. . மூணு தலைமுறை தாண்டுச்சுன்னா… அப்பறம் எந்த ஒரு கொழந்தைக்கும். . ஒரு அப்பா… ஒரு அம்மாங்கிற.. நம்ம டர்ட்டி கல்ச்சர் இருக்கவே இருக்காது..! குறைந்த பட்சம் ரெண்டு. . அப்பா… ரெண்டு அம்மாவாவது இருப்பாங்கள்ள?” என அவன் சிரித்துக் கொண்டே சொல்ல..
” ம்.. ம்… நீ பயங்கர ஆதங்கத்துல இருப்ப போலிருக்கு. ..?” என்றாள்.
” இதெல்லாம் பாக்கறப்ப… எவளையும் கல்யாணம் பண்ணக்கூடாதுனு தோனுது ஆண்ட்டி. ஏன்னா குடும்பம்ங்கறது… ஒரு சிக்கலான அமைப்பு. .அதுல விட்டுக்கொடுத்தல் இல்லாம வாழவே முடியாது. ! ஆனா இப்பத்த பொண்ணுகதான் அப்படி விட்டுக் குடுத்து போகவே தயாரில்லையே..? பசங்கல்லாம் வேற என்னதான் பண்றது..? கெடைக்கறவரை லாபம்னு… ‘ செட்’ பண்ணி.. என்ஜாய் பண்ணிட்டு பேகவேண்டியதுதான்.. என்ன சொல்றீங்க..?” எனக்கேட்க… அவனையே பார்த்தவாறு உட்கார்ந்து விட்டாள் மிருதுளா.. !!

மறுவாரத்தில் ஒரு நாள். .. மிருதுளாவின் மூத்த மகள் யழினி.. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேரிலேயே வந்து விட்டாள். ஆச்சரியத்துடன் வரவேற்றாள். மிருதுளா.

” என்னடி.. சொல்லாம.. கொள்ளாம வந்து நிக்கற..?”
” வந்தேன்மா…! எப்படி இருக்கே..?”
”ம்..ம்.. இருக்கேன்.. நீ மட்டும்தான் வந்தியா..?”
” ஆ..! அப்பாக்கு ஒடம்பு செரியில்ல தெரியுமா..?” எனக் கேட்டாள்.

புரிந்தது. ! இவள் வந்திருப்பது.. அவள் அப்பாவைப் பார்க்க. .!

” அப்படியா..?” சுரத்தில்லாமல் கேட்டாள்.
” அன்னிக்கு போன்ல நான் கேட்டத.. நீ தப்பா புரிஞ்சிட்ட.” எனக் குற்றம் சாட்டும் தோரணையில் பேசினாள்.
கசப்பாய் சிரித்தாள் மிருதுளா.
”சரி.. உக்காரு வா..”
” நந்தா. .?”
”வேலைக்கு போய்ட்டான்..! டீ குடிக்கறதானே…?”
” ம்.. வெய்..”
” உக்காரு..” என்றுவிட்டு மிருதுளா சமையல் கட்டுக்குப் போக… பின்னாலேயே வந்தாள் யாழினி.

அடுப்பில். . பால் பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டே கேட்டாள்.
” உங்கப்பனுக்கு என்ன ஒடம்பு? ”
” வயித்து வலி ரொம்ப முடியாம… ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணிருக்காங்க. என்னை பாக்கனும்னு போன் பண்ணிருந்தாரு…!”
” ஓ… அப்ப என்னைப் பாக்க வல்ல. .?”
” உனக்கென்ன.. நீ நல்லாத்தான இருக்க. .? போனவாரம்தான அவ வந்துட்டு போனா..? ”
” அப்ப நல்லாருந்தா பாக்க வரமாட்டியா..?”
” என்னமா நீ..! ஆயிரம்தான் இருந்தாலும் அவரு எங்க அப்பாம்மா..! அதுக்காக எங்களுக்கு மட்டும் அவருமேல கோபமில்லேனு நெனைக்காத.? ஆனா வீண் கோபம் பாராட்டி… என்ன கெடைக்கப் போகுது.? உனக்கும். . அவருக்கும் டைவோர்ஸ் ஒன்னும் ஆகிடலையே..? அப்றம் ஏன் இத்தனை வெறுப்பு உனக்கு. ?”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.