உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

” நீ நெறைய மாறியிருக்கே..”
”ம்கூம்..! எந்த வகைல..?”
” பேச்சு. ..நடைமுறை..பழக்கங்கள்..”

தலையணையை எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
” கல்யாணத்துக்கப்பறம்.. அப்படித்தான். .”
” ஆனா நல்லதுதான்..”

மறுபடி சிறிது இடைவெளிவிட்டுக் கேட்டாள்.
” என்மேல இன்னும் கோபமிருக்கா உனக்கு. .?”
”என்ன கோபம்..?”
”இத்தனை நாள்..அதாவது என் கல்யாணத்துக்கப்பறம் நம்ம பிரெண்ட்ஷிப் விட்டுப்போனது ஏன். .?”

நந்தா சிரித்தான்.
”அதெல்லாம் நாபகமிருக்கா உனக்கு. .?”
” ஏன்னா. . அறைஞ்சவ நானாச்சே..” எனச் சிரித்தாள்.
கன்னத்தைத் தடவிக் கொண்டு. ”ம்..ம்.. செம்ம அறைதான். ” என்றான்.
” அப்பறம் நான் அதை நெனச்சு. பீல் பண்ணேன்..”
” ஐ’ம் ஸாரி. .! ஏதோ வயசுக்கோளாறுல… நானும் அப்படி…”
” உனக்கே தெரியுமே.. அப்ப எனக்கு வேகம் ஜாஸ்தி..! சட்னு கோபம் வந்துரும்.. அதான் உன்ன அறஞ்சிட்டேன்..!”
”இல்ல விழி…! தப்பு என்னோடதுதான். நம்ம பிரெண்ட்ஷிப் விட்டுப் போனதே என்னாலதான்.”
” ஓகே. .. ஓகே.. பட் ஒன் திங்க நந்தா நான் இப்ப பழைய மாதிரி இல்ல. .”
” ம்.. ம்.. கவனிச்சேன்..”
” என்ன கவனிச்சே..?”
” நீ.. முன்னவிட.. இப்ப இன்னும் அழகா இருக்க..! மறுபடி இன்னொரு தடவ அறை வாங்கினாலும் தப்பில்லேன்னு தோணுது…” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.
” அடப் பாவி…! நா இப்ப இன்னொருத்தர் வொய்ப்டா..” என அவளும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” ஏய்… சும்மா. . ”

அருகே வந்து அவன் தோளில் அடித்தாள்.
”அப்ப நா எதிரே பாக்கல… அப்படி நீ என்ன திடுதிப்புனு கட்டிப்புடிச்சி.. கிஸ்ஸடிப்பேனு..! அப்பறம் உனக்கொரு கேர்ள் பிரெண்டு இருக்கா இல்ல. .?”
”ம்..ம்…”
” அவ பேரென்ன…?”
” பூரணி..”
” எங்கருக்கா…?”
” பக்கத்து வீட்ல…”
”பக்கத்து வீடு. .. யூ..மீன்…?”
” ம்..”
”மை காட்..”
” ஏன் விழி…?”
” எப்பருந்து உன் லவ்..?”

உண்மையைச் சொல்லாமல் அவளைச் சீண்டிப் பார்க்க விரும்பினான்.
” இப்பதான். . கொஞ்ச நாளா..”
”நீயா.. அவள பண்ணியா..?”
” ஆமா. அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. .?”

அமைதியானாள் விழிநயா.
”ஏன் விழி..?” அவள் தோள் தொட்டுக் கேட்டான்.
” இ… இல்ல. . நல்ல பிகர்த்ன் அவ..! நல்லா ஜாலியா கலகலனு பேசுவா..! பழகுவா.. ஆனா. .”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.