உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 165

” தேங்க்ஸ்..! பட்… பார்ட்டிய உங்களோட செலிபரேட் பண்ண நா விரும்பறேன்…”
” யூ மீன்…?”
கண் சிமிட்டி ” யா…” என்றான்.
” சாரி சார்..” பட்டெனச் சொன்னாள். ” உங்க பர்த்டே பார்ட்டி எனக்கு வேண்டாம்..”

நந்தாவின் துணை இப்போது இல்லாது போயிருந்தால்… அவளால் இப்படிச் சொல்லியிருக்க முடியாது.. !!

கோடை விடுமுறை..!! பள்ளி.. கல்லூரிகள் எல்லாமே.விடுமுறை விடப்பட்டு.. விட்டன.! நந்தா இல்லாவிட்டால் மிருதுளா தன் விடுமுறையைக் கழிக்க.. மகள்களின் ஊருக்குப் போயிருப்பாள். ஆனால் நந்தா இருப்பதால் அவள் போகவில்லை. !

” எனக்காக நீங்க. . போகாம இருக்க வேண்டாம் ஆண்ட்டி. . என்னைப் பத்தி கவலைப் படாம போய்ட்டு வாங்க..” எனச் சொல்லிப் பார்த்தான் நந்தா.
” உன்ன தனியா விட்டுட்டு நான் போறதா…?” என்றாள்.
”என்னைப் பத்திக் கவலையே படாதிங்க ஆண்ட்டி. .! நான் தனியா இருந்துப்பேன்..”
” ஆனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ..?”
” ஏன். . ஹோட்டலே இல்லியா இந்த ஊர்ல…?”
”ஐயோ. . ஹோட்டல் சாப்பாடா..? வேண்டாம் ஒடம்பு கெட்றும். .”
”ஐயோ ஆண்ட்டி. ..”
”சும்மாருப்பா…! நான் போகல..! அவங்கள இங்க வரச்சொல்லிட்டாப் போச்சு..” எனத் தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.

விடுமுறை விட்ட.. ஒரு வாரம் கழித்து. .. மிருதுளாவின் இளைய மகள் விழிநயா… தன் குழந்தைகளுடன் வந்தாள். வேலை முடிந்து வீடு போன நந்தாவை உற்சாகமாக வரவேற்றாள். பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டார்கள்.

நந்தா கேட்டான்.
”ஏன்.. அவரு வல்லியா..?”
”அவருக்கு பிஸி வொர்க் லீவ் கெடைக்கலே..! எங்களுக்கே நாலு நாள்தான் பர்மிசன்..” எனச் சிரித்தாள்.
” நாலு நாள்தானா..?”
” ஆமா… நாலே நாள்தான். .! அவரை அங்க தனியா விட்டுட்டு வந்துருக்கேனே.. சமைக்கவெல்லாம் தெரியாது மனுசனுக்கு. .ஓட்டல் சாப்பாடுதான்..! இந்த நாலு நாளுக்கே… அவருகூட ஒருவாரமா சண்டை தெரியுமா? அந்தக் கதைய ஏன் கேக்கற…?” என்று தொடங்கி.. அவன் கேக்காமலேயே.. தன் கணவனோடு நடந்த.. வாக்குவாதத்தைச் சொன்னாள்.

” லீவ்க்கெல்லாம் எங்கயுமே போகக்கூடாதுனாரு.. ஆனா நாந்தான் எங்கம்மா வீட்டுக்கு போயே ஆகனும்னு ஒத்தக்கால்ல நின்னேன். அதனால போன ஒருவாரமா எங்களுக்குள்ள பேச்சு வார்த்தைகூட செரியா இல்ல. அப்பறம் நேத்துதான் சரி போய்ட்டு வாங்கனு சொன்னாரு..! அதுவும் நாலு நாள்ள திரும்பி வல்லேன்னா அப்பறம் வரவே வேண்டாம்.. உன்னத் தேடி வக்கீல் நோட்டிஸ் வரும்னு சொல்லியிருக்காரு..” என சிரித்த முகத்துடன் சொல்லி முடித்தாள்.

” சரி.. யாழினி அக்கா என்ன பண்ணுவாங்க..?” என அவளது அக்காவைப் பற்றிக் கேட்டான் நந்தா.

மிருதுளா..
” அவ வரமுடியாதுனு சொல்லிட்டாப்பா..” என்றாள்.
” அவங்களுக்கும் அதே பிரச்சினையா…?”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.