உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 136

”வாட்…?”
” உங்களுக்கு கேர்ள் பிரெண்டு இருக்காளா..?”
சிறிது யோசித்து… ”நீங்க கூட என்னோட கேர்ள் பிரெண்டுதான். .” எனச்சிரித்தான்.
”ஹை…! இட்ஸ் ரைட்..! பட்..நா கேட்டது… லவ்வர்…?”
” இருக்கா.. பட்… இல்லே..”
” அப்படின்னா…?”
” ஒருதலை ராகம்…”
” ஆஹா. .. யாரது…?”
” பூரணி. .!”
” பூரணி. ..?”
” அம்மா பூரணி இல்ல. . அன்னபூரணி. ..!”
” ஹேய்… ! சீரியஸா சொல்லுங்கப்பா..?”
” சீரியஸ்தான் பூரணி. ..! உங்கள பாத்த நிமிசத்துலருந்து. .. நா காதல்ல… விழுந்துட்டேன்.. தெரியுமா..?”
”ஹையோ… பட்… நா வேகண்ட் இல்லையே.. ஒன்னுக்கு ரெண்டு பேர லவ் பண்ணிட்டிருக்கேன்..!”
” ரெண்டு பேரா…?”
” டஸிண்ட் மேட்டர் பா..! நீங்க மூணாவது ஆளாகூட ஜாயின்ட் பண்ணிக்கலாம்..! எப்படி வசதி?”
” கஷ்டமாச்சே…?”
” இட்ஸ் ஓகே. .. பிரெண்ட்ஸா இருப்போம்..! ம்..?”
” அப்ப லவ் பண்ண முடியாதா?”
” எனக்கு. .. நோ அப்ஜெக்சன் பா..!”
” கொஞ்சம் யோசிக்கனும் போலிருக்கே..”
” கொஞ்சமென்ன… நெறையவே யோசிங்க..! நா இப்ப கெளம்பறேன்..! அப்பறம் பாக்கலாம்.. ஓகே. .? பை..”

எனக் கையசைத்தவள்.. அவனது பதிலைக் கூட எதிர்பாராமல். .. அங்கிருந்து போய்விட்டாள். அவளைப் பற்றின சிந்தனைகளுடனே.. தனது உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு குளிக்கப் போனான் நந்தா. !!

இப்போதெல்லாம்.. இனம் புரியாத ஒரு உற்சாகம் திடீர். . திடீரெனக் கிளம்பி விடுகிறது மிருதுளாவுக்கு.
காரணமற்ற உற்சாகம்.!!

சில வேளைகளில் மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கி வழிய… அந்த உற்சாகம்.. உடலையும் குதியாட்டம் போட வைக்கிறது. தான் ஒரு இளம்பெண்ணாகிவிட்டது போல உணரத்தொடங்கினாள். முன்பெல்லாம்… இளமை வற்றி…. அவளை முதுமை ஆட்கொண்டு விட்டதாக நினைத்திருந்தாள். ஆனால். .. இப்போது மறுபடியும் தனக்கு இளமை திரும்பியிருக்கிறது.. என மகிழ்ந்தாள். வாடத்தொடங்கிய தன் உணர்ச்சிகள்… நந்தாவால்.. மறுபடி பூ.. பூக்கத் தொடங்கியிருக்கிறது. காதல் என்பது… முதுமையைக்கூட இளமையாக மாற்றும் ரசவாதம் கொண்டதா என்ன. .? என வியந்தாள்.

அவளது கணவன் இப்போது அதிகமாக.. அவள் வீட்டிற்கு வருவதில்லை. முன்பாவது அவ்வப்போது வந்து வாரத்தில் ஒரு நாள். .. அல்லது இரு நாள் தங்கிவிட்டுப் போவான். இப்போது அதுவும் இல்லை. அவளுடன் நந்தா இருப்பதால்.. அவளது கணவனின் வருகை சுத்தமாகவே நின்று விட்டது.

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.